பொது செய்தி

இந்தியா

'வம்பு சண்டைக்கு போக மாட்டோம்; வந்த சண்டையை விட மாட்டோம்'

Updated : செப் 07, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement
சியோல்: ''இந்தியா, இதுவரை எந்த நாட்டுடனும், வம்பு சண்டைக்கு போனதாக வரலாறு இல்லை. அதே நேரத்தில், எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசினார்.ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், அரசு முறைப் பயணமாக, கிழக்காசிய நாடான, தென் கொரியாவுக்கு வந்துள்ளார். தலைநகர் சியோலில், 'சியோல்
ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங், தென் கொரியா, வம்பு சண்டை

சியோல்: ''இந்தியா, இதுவரை எந்த நாட்டுடனும், வம்பு சண்டைக்கு போனதாக வரலாறு இல்லை. அதே நேரத்தில், எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்,'' என, ராணுவ அமைச்சர், ராஜ்நாத் சிங் பேசினார்.

ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ராஜ்நாத் சிங், அரசு முறைப் பயணமாக, கிழக்காசிய நாடான, தென் கொரியாவுக்கு வந்துள்ளார். தலைநகர் சியோலில், 'சியோல் பாதுகாப்பு பேச்சு' என்ற, மாநாட்டில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: அண்டை நாடுகளுடன், எப்போதும், சுமுகமான உறவை வைத்துக் கொள்ளவே, இந்தியா விரும்புகிறது. பிரதமர் மோடியின் கொள்கையும் இது தான்.

கடல் வழி பாதுகாப்பு தொடர்பான விஷயத்தில், இந்தியாவும், தென் கொரியாவும், எப்போதுமே ஒருங்கிணைந்து செயல்படும், குறிப்பாக, இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், இரு நாடுகளின் செயல்பாடும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பரஸ்பர மரியாதை, பேச்சு, ஒருங்கிணைப்பு, அமைதி, வளர்ச்சி ஆகிய ஐந்து அம்சங்களை அடிப்படையாக வைத்து செயல்பட்டால், எப்போதுமே எந்த பிரச்னையும் வராது.

இந்தியா, எப்போதுமே மற்ற நாடுகளுடன், வம்பு சண்டைக்கு போனதாக வரலாறு இல்லை. எந்த நாட்டையும், நாங்களாக வலியச் சென்று தாக்க மாட்டோம். அதற்காக, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் மீது யாராவது தாக்குதல் நடத்தினால், அதை வேடிக்கை பார்க்க மாட்டோம்.

இந்தியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே, பழமையான கலாசார தொடர்புகள் உள்ளன. புத்த மதம், இந்தியாவிலிருந்து தான், கொரியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியது. சர்வதேச அளவில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் பேச, எனக்கு வாய்ப்பு அளித்ததற்காக, தென் கொரிய அரசுக்கு நன்றி. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
06-செப்-201911:22:47 IST Report Abuse
oce மிக சிறந்த அமைச்சர். வாழ்க புகழுடன்.
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
06-செப்-201902:20:53 IST Report Abuse
அன்பு சேற்றில் விழுந்த பன்றி எதிரே வந்தால், ஒதுங்கி போவீர்களா? அல்லது அதோடு கட்டி புரண்டு சண்டை போடுவீர்களா? இந்தியாவின் பொருளாதார மந்த நிலையை கேள்வி பட்டு, இன்று பாகிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்களை குவித்து வருகிறது. நேற்று இம்ரான் கான் இந்தியாவுடன் போரிட மாட்டோம் என்று கூறி உள்ளார். அதன் அர்த்தம், அவர்கள் போரை துவக்க போகிறார்கள் என்று தான். லாகூர் மற்றும் கராச்சி ஏற்கனவே குண்டு போட்டமாதிரி தான் உள்ளது. போரினால் அவர்களுக்கு உயிரை தவிர எந்த நஷ்டமும் இல்லை. சீனாவிற்கு போட்டியாக நாம் வளர்ந்து வருகிறோம். விரைவில் நாம் ஐந்து ட்ரில்லியன் டாலர் மதிப்பை அடைய முடியும். இப்போதே நம்மை கவிழ்த்தால் தான் உண்டு என்று அவர்கள் நினைக்கிறார்கள். இந்தியா எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பாகிஸ்தான் எல்லையில் போரை துவக்கினால், அதை முதலில் வெளிநாடுகளுக்கு எடுத்து காட்ட வேண்டிய பொறுப்பில் நாம் உள்ளோம். முன்பு போன்று உடனடியாக பதிலடி கொடுக்க முடியாது. பாகிஸ்தானின் நயவஞ்சகத்தை உலகிற்கு முதலில் காட்டுவது நல்லது. ஏனனில் நமது அரசியல்வாதிகளின் திட்டத்தால் ஒரு சில நகரங்கள் சென்னை, பெங்களூர், டெல்லி, பாம்பே மட்டுமே வளர்க்கப்பட்டுள்ளது. இந்த நான்கு நகரங்களில் நாலு குண்டுகளை ஏவினால் போதும், நாம் இருப்பது ஆண்டுகள் பின்னோக்கி போய்விடுவோம்.
Rate this:
ஆ.தவமணி, - காந்திபுரம் சேந்தமங்கலம், நாமக்கல்.,இந்தியா
06-செப்-201920:26:27 IST Report Abuse
ஆ.தவமணி,   அப்பனா ... பாகிஸ்தான் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்குதலை தொடங்கினால்.. மன்மோகன் மாதிரியே " கடும் கண்டனம் " தெரிவித்து அவர்களை முறியடிக்கலாமா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X