பொது செய்தி

தமிழ்நாடு

யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்? அரசாணை வெளியீடு

Updated : செப் 07, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: 'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைவான காவலர்கள், வாகனங்களை சோதனையிடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, அபராதத் தொகையை, 10 மடங்கு உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இச்சட்டத்தின் கீழ், சாலை விதிகளை மீறுவோர், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வோரிடம், அபராதம்
வாகன சோதனை,தமிழக அரசு,அரசாணை, வெளியீடு

சென்னை: 'சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் பதவிக்கு குறைவான காவலர்கள், வாகனங்களை சோதனையிடவோ, அபராதம் விதிக்கவோ கூடாது' என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறல்களை கட்டுப்படுத்த, அபராதத் தொகையை, 10 மடங்கு உயர்த்தி, புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இச்சட்டத்தின் கீழ், சாலை விதிகளை மீறுவோர், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வோரிடம், அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், போலீசில், யாரெல்லாம் வாகனங்களை சோதனையிடலாம்; விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம் என்பது குறித்து, அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு போலீசாரில், சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் மற்றும் அதற்கு மேல் உள்ள, போலீஸ் அதிகாரிகள் மட்டுமே, வாகன சோதனை நடத்துவதுடன், வாகன ஓட்டிகளிடம், அபராதம் வசூலிக்கலாம். சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறைவான போலீசார், வாகன சோதனை நடத்தவோ, அபராதம் விதிக்கவோ கூடாது.

சிறப்பு சப் - இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரிகள், தமிழகம் முழுவதும், சோதனைச் சாவடிகள் தவிர, எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். தொழில்நுட்பம் சாராத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகளில் மட்டும் வாகன சோதனை நடத்தலாம். இரண்டாம் நிலை அந்தஸ்துக்கு குறைவில்லாத, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், சோதனைச் சாவடிகள் தவிர்த்து, தமிழகத்தில் எங்கு வேண்டுமானாலும், வாகன சோதனை நடத்தலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


கட்டாய 'ஹெல்மெட்'; அறிக்கை கேட்கிறது ஐகோர்ட்


'சென்னை தவிர்த்து இதர மாவட்டங்களில் ஹெல்மெட் விதி முறையாக அமல்படுத்தப்படவில்லை' என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கட்டாய 'ஹெல்மெட்' அமலாக்கத்துக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
atara - Pune,இந்தியா
11-செப்-201912:53:56 IST Report Abuse
atara This will be for Diwali Collection funds.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
06-செப்-201913:07:49 IST Report Abuse
Girija சிம்பிள் காக்கிகளுக்கு கை அரித்தால் சோதனையிடலாம், தடுத்து பேசினால் நீ யார் என்று கேட்டால் அடிப்பார்கள் அல்லது பொய் கேஸ் போடுவார்கள். பெண்களுக்கு தான் இப்போது கூடுதல் தொந்தரவு கொடுப்பார்கள், மொபைல் நம்பர் கேட்பது போன்று சினிமா ஹீரோத்தனம் காட்டுவார்கள். ஒன்று நிச்சயம் காக்கிகள் ஒரே வருடத்தில் கோடிஸ்வரர்களாகி அடுத்த வருடத்தில் கல்வித்தந்தையாவது நிச்சயம் ,
Rate this:
Dubuk U - Chennai,இந்தியா
06-செப்-201919:40:29 IST Report Abuse
Dubuk Uநல்லது செய்ஞ்சாலும் மக்கள் நல்ல படியா எடுத்துக்கமாட்டாங்க அப்படிதானே சொல்லவர? விதி முறை மீறாமல் சென்றால் ஏன் தொந்தரவு செய்யப்போகிறார்கள் .. விதிமீறல் இல்லாமல் வாகனங்களை ஓட்டமுடியவில்லை எனில் வாகனங்களை தவிர்த்து பொது போக்குவரத்தில் செல்லலாம் .....
Rate this:
Girija - Chennai,இந்தியா
07-செப்-201912:20:56 IST Report Abuse
Girijaநல்லது காக்கிகள் செய்கிறார்கள்? அப்போ இந்தியன் படம் எதுக்கு சக்கைபோடு போட்டு ஓடிச்சு ? என்னது பொது போக்குவரத்தா? அதிலேயும் தான் இவர்கள் பங்கு உள்ளதே ? பஸ் ரூட் , நேரம் ஐ சொன்னால் போதும் இவர்கள் இமயமலையில் இருந்தால் கூட பர்ஸ் அடித்தவன் பெயரை சொல்லுவார்கள், இதில் நேரம் எதற்கு என்றால் யார் எந்த ஷிப்ட் என்று செக் செய்ய . சாமி படம் மாதிரி...
Rate this:
Cancel
G.Prabakaran - Chennai,இந்தியா
06-செப்-201906:54:24 IST Report Abuse
G.Prabakaran சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் என்று எப்படி கண்டுபிடிப்பது இந்த புதிய போக்குவரத்து விதிமீறல் சட்டத்தால் போலீசார் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதை எப்படி கண்காணிக்கப்போகிறார்கள்.
Rate this:
Girija - Chennai,இந்தியா
07-செப்-201912:13:06 IST Report Abuse
Girijaசிம்பிள் காக்கிகளுக்கு கை அரித்தால் சோதனையிடலாம், தடுத்து பேசினால் நீ யார் என்று கேட்டால் அடிப்பார்கள் அல்லது பொய் கேஸ் போடுவார்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X