சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு

Updated : செப் 06, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (2) | |
Advertisement
திருச்சி: சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.விழிப்புணர்வு பேரணி:திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனுாரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.'துாய்மை பாரதம்' திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ - மாணவியர், நேற்று காலை,
சாலையில் கிடந்த ரூ.50 ஆயிரம் ஒப்படைத்த மாணவியருக்கு பாராட்டு

திருச்சி: சாலையில் கேட்பாரற்று கிடந்த, 50 ஆயிரம் ரூபாயை எடுத்து, ஆசிரியரிடம் ஒப்படைத்த, நான்காம் வகுப்பு மாணவியர் இருவரை, பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.


விழிப்புணர்வு பேரணி:

திருச்சி, பிராட்டியூர் அருகேயுள்ள புங்கனுாரில், புனித வளனார் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.'துாய்மை பாரதம்' திட்டம் குறித்து, இப்பள்ளி மாணவ - மாணவியர், நேற்று காலை, விழிப்புணர்வு பேரணி சென்றனர். தாயனுார் மேலக்காடு என்ற இடத்தில், பேரணி செல்லும்போது, 50 ஆயிரம் ரூபாய் சாலையில் கிடந்துள்ளது.

இதைப் பார்த்த, பள்ளியின், 4ம் வகுப்பு படிக்கும், 9 வயது மாணவியரான, மதுஸ்ரீ, கனிஷ்கா ஆகியோர், பணத்தை எடுத்து, உடனடியாக, அருகில் இருந்த, ஆசிரியையிடம் ஒப்படைத்தனர். அவர், பள்ளிக்கு வந்ததும், தலைமை ஆசிரியர், மெட்டில்டா ஜெயராணியிடம் ஒப்படைத்தார்.


தாளாளர் வாழ்த்து:

இதைக் கேள்விப்பட்ட, பள்ளி தாளாளர், செபாஸ்டின் மற்றும் ஊர் மக்கள், ஏழ்மையிலும் நேர்மையாக நடந்த மாணவியரை பாராட்டி, வாழ்த்தினர்.

இது குறித்து, பள்ளி தாளாளர், செபாஸ்டின் கூறியதாவது: இப்பள்ளியில் படிக்கும் குழந்தைகள் அனைவரும், நடுத்தர, ஏழை குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். மதுஸ்ரீயின் தந்தை, கல் கொத்துபவர். கனிஷ்காவின் தந்தை, பெயின்டர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.


கவுரவிக்க முடிவு:

அப்படி இருந்தும், 50 ஆயிரம் பணத்தை எடுத்து, நேர்மையுடன் கொடுத்த மாணவியரை, பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களை, பள்ளி சார்பில் கவுரவிக்க உள்ளோம். கண்டெடுத்த பணம், போலீசில் ஒப்படைக்கப்பட்டு, உரியவரிடம் கொடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Diya -  ( Posted via: Dinamalar Android App )
06-செப்-201911:42:39 IST Report Abuse
Diya These kind of childrens photos and their honest works should be posted in the notice board of all the government offices where bribes are taken. Everyone was a kid, out of which many were patriotic too, before becoming a corrupted adult due to misguidance and the herd mentality.
Rate this:
Cancel
06-செப்-201910:49:30 IST Report Abuse
ருத்ரா முத்துச் சுடர்களுக்கு வாழ்த்துக்கள். நேர்மையின் எடுத்துக் காட்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X