சிதம்பரம் விரைவில் விடுதலை: கார்த்தி ஆருடம்

Updated : செப் 06, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (128)
Advertisement

புதுடில்லி : தனது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் விரைவில் விடுதலையாகி, வீடு திரும்புவார் என காங்., எம்.பி.,யான கார்த்தி சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில், சிபிஐ.,யால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரத்தை செப்.,19 வரை திகார் சிறையில் அடைக்க டில்லி சிபிஐ சிறப்பு கோர்ட் உத்தரவிட்டது. இதனையடுத்து சிதம்பரம், நேற்று மாலை திகார் சிறையில் தனியறையில் அடைக்கப்பட்டார்.

இதுபற்றி சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், கடந்த ஆண்டு எனக்கும் இதே போன்று நடந்தது. சட்ட ரீதியாக முயற்சிகளை தொடர்வோம். எனது தந்தை விரைவில் வீடு திரும்புவார் என்ற நம்பிக்கை உள்ளது. சட்ட நடவடிக்கையில் என்ன நடந்துள்ளது என எனக்கு தெரியும். போலீஸ் காவலில் விசாரணை நடத்தப்பட்ட பிறகும் நீதிமன்ற காவல் தொடரப்பட்டுள்ளது துரதிஷ்டவசமானது. நீதிமன்ற காவலின் போது எந்த சலுகையும் நான் பார்க்கவில்லை.
11 ஆண்டுகளுக்கு முன் நடந்ததற்கு தற்போது குற்றப்பத்திரிக்கை தயாரிக்க முனைப்பு காட்டுகின்றனர். முறையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என நான் நினைக்கவில்லை. விசாரணைகளும் நடத்தப்பட போவதில்லை. அரசியல் காரணங்களுக்காக, அரசு எங்களை குறிவைத்து இது போன்ற நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றார்.
ஐஎன்எக்ஸ் மீடியாக வழக்கு 2007 ம் ஆண்டும், ஏர்செல் மேக்சிஸ் வழக்கு 2006 ம் ஆண்டும் பதிவு செய்யப்பட்டது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு, 23 நாட்களுக்கு பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் திகார் சிறையில் 12 நாட்கள் அடைக்கப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (128)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-செப்-201904:45:35 IST Report Abuse
meenakshisundaram என்ன தான் சொன்னாலும் சட்டம் தனது கடமையை சமமாக செய்வதில்லை என்றே தோன்றிகிறது, மாறன் ,ராசா ,கனி.தினகரன் .சசி ,ஸ்டாலின் ஆகியோர் இன்னும் வெளிலே (?) தானே இருக்காங்க?இது ஏன் ?மேலும் னைத்து திமுக வினர் மேலும் ஏன் அதீத சொத்து குவிப்பு வழக்கு போடப்படவில்லை?
Rate this:
Share this comment
Cancel
venkatesaperumal - sivakasi,இந்தியா
07-செப்-201916:10:31 IST Report Abuse
venkatesaperumal வூழல்வாதிகள் தங்கள் தவறை மறைக்க அரசியல் பழிவாங்கல் என சொல்கிறார்கள் , காரைக்குடிக்கு நீங்க பண்ண நன்மைகள் ஏதும் இல்லை ஆனால் கொள்ளையடித்தது கண்ணகில் அடங்காது கார்த்தி சிதம்பரம்
Rate this:
Share this comment
Cancel
ganesh - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201913:11:18 IST Report Abuse
ganesh IF THERE IS NO FIR FRAMED Then why your father asked to send to ED custody not to thiar jail?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X