'மெட்ரோ' ரயில்களில் பெண்களுக்கு இலவசம்; கெஜ்ரிவால் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

Updated : செப் 07, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (25)
Share
Advertisement
'மெட்ரோ' ரயில்களில் பெண்களுக்கு இலவசம்; கெஜ்ரிவால் அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

புதுடில்லி : பெண்களுக்கு, 'மெட்ரோ' ரயில்களில் இலவச பயணம் அளிக்கும், டில்லி அரசின் திட்டத்துக்கு, உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இலவச அறிவிப்பால் பெரும் இழப்பு ஏற்படும். அதை தடுத்து நிறுத்துவோம்' என நீதிபதிகள் எச்சரித்தனர்.

டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த ஆண்டு, ஜனவரியில், சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில் நடத்த லோக்சபா தேர்தலில், டில்லியில், ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியடைந்த நிலையில், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற, மக்களுக்கு இலவச அறிவிப்புகளை, முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து வருகிறார்.


சலுகை கூடாது:

இந்த வகையில், டில்லியில், மெட்ரோ ரயில்களில், அக்டோபர், 29ம் தேதி முதல், பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என, கெஜ்ரிவால் அறிவித்திருந்தார். இந்நிலையில், டில்லி மெட்ரோவின், நான்காம் கட்ட திட்டம் தொடர்பான வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், நீதிபதிகள் தீபக் குப்தா, அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று நடந்தது.

அப்போது, டில்லி அரசு சுார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம், நீதிபதிகள் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில், பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை, டில்லி அரசு அறிவித்துள்ளது, இதனால், டில்லி அரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், டில்லி மெட்ரோ, பெரும் இழப்பை சந்திக்கும். மக்கள் பணத்தில் சலுகை அளிக்கக் கூடாது.

டில்லி மெட்ரோவை அழிக்க, டில்லி அரசு துடிப்பது ஏன்; இலவசத்தை அளித்து விட்டு, அதற்கு, மத்திய அரசு நிதி தர வேண்டும் என, கேட்பீர்கள்.


தடுத்து நிறுத்துவோம்:

நீதிமன்றங்கள் ஒன்றும் அதிகாரமில்லாத அமைப்புகள் அல்ல. டில்லி அரசின் இலவச அறிவிப்பை, நாங்கள் தடுத்து நிறுத்துவோம். இவ்வாறு, நீதிபதிகள் கூறினர்.

இதற்கு, டில்லி அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'மெட்ரோ ரயில்களில், பெண்களுக்கு இலவச பயண திட்டம், இன்னும் அமலுக்கு வரவில்லை' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-செப்-201912:33:54 IST Report Abuse
Malick Raja இலவசம் ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படுவது தடைசெய்யப்படவேண்டும் விதிவிலக்கு ஆதரவற்ற முதியோர், உடல்நலமற்றோர், உடல் நலமற்ற வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளோர் மட்டும்.. இலவசங்கள் மூலம் நாட்டின்பொருளாதாரம் கேள்விக்குறியாக மாறிவிட்டது .. தகுந்த காரணங்களுடன் இலவச உதவிகள் செய்யப்படலாம் அத்துடன் விதிகளை மீறி உதவிகள் பெற காரணமான அதிகாரிகளிடம் அவர்களால் வழங்கப்பட்ட தொகையினை அதிகாரிகளிடமே பிடித்தம் செய்யவேண்டும் . (ஓய்வு பெற்றாலும் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யவேண்டும்) ஒவ்வொரு அரசாங்க நடவடிக்கைகளையும் கண்காணித்தாலே நாடுவளம்பெறும் ..
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-செப்-201912:23:47 IST Report Abuse
Malick Raja உடனடியாக இது தடை செய்யப்படவேண்டும் காரணம் கெஜ்ரிவால் மனநல பாதிப்புள்ளாக்கி இருக்கும் நிலையில் இது போன்ற பெண்களுக்கு மட்டும் இலவச பயணம் அறிவித்தது உச்சநீதிமன்ற கவனத்துக்கு வந்துவிட்டது என்பதும் உண்மையே
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
08-செப்-201907:39:43 IST Report Abuse
RajanRajan மக்களுக்கு இலவசம் என்ற பெயரில் லஞ்சத்தை தேசியமயமாக்க வழிவகுத்த அந்த கட்டுமரம் கண்டுபிடிச்ச வழி இது. எனவே உச்ச நீதிமன்றம் மொத்த நாட்டிலே எந்த அரசியல்கட்சியும் இலவசம் என வழங்கும் தேர்தல் வாக்குறுதியை தடை செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். காசு கொடுக்காமல் எந்த பொருளும் வழங்க கூடாது. இலவசம் ஒழிந்தால் அடித்தட்டு மக்கள் குறிப்பாக டாஸ்மாக் வீரர்கள் திருந்த வழியுண்டு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X