பாக்.,கின் உயிர் நாடி காஷ்மீர்: இம்ரான் கான் புலம்பல்

Updated : செப் 08, 2019 | Added : செப் 06, 2019 | கருத்துகள் (42)
Advertisement
பாக்., உயிர் நாடி, காஷ்மீர், இம்ரான், பயங்கரவாதம்

இஸ்லாமாபாத்: ''பாகிஸ்தானின் உயிர் நாடியாக உள்ள காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளதால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது'' என அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் கூறினார்.

இந்தியாவுடன் 1965ல் நடந்த போரை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் செப். 6ம் தேதியன்று பாகிஸ்தானில் ராணுவம் மற்றும் தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி இஸ்லாமாபாதில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் இம்ரான் பேசியதாவது: பாகிஸ்தானை பொருத்தவரை காஷ்மீர்தான் உயிர் நாடி.

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்துள்ளது. இது பாகிஸ்தானின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் ஒரு போதும் போரை விரும்பவில்லை. ஆனால் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஓருமைப்பாட்டுக்கு சவால் ஏற்பட்டால் அமைதியாக இருக்க முடியாது. இவ்வாறு இம்ரான் பேசினார்.

பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி ஜாவத் பஜ்வா கூறுகையில் ''ஐ.நா. தீர்மானப்படி காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காணப்படாதவரை பாகிஸ்தான் முழுமை பெறாது'' என்றார்.


பயங்கரவாதம் பற்றி பேச தயார்:

சிங்கப்பூருக்கு நான்கு நாள் பயணமாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்றுள்ளார். அங்கு நடக்கும் மாநாட்டில் அவர் பேசியதாவது: பாகிஸ்தானுடன் பயங்கரவாதம் பற்றி பேச இந்தியா தயாராக உள்ளது. ஆனால் என் நெற்றிக்கு துப்பாக்கி குறி வைக்கப்பட்டுள்ள நிலையில் எதுவும் பேச முடியாது; பேச்சு நாகரீகமான சூழலில் நடக்க வேண்டும். அதேநேரத்தில் இந்த பிரச்னைகள் பற்றி இந்தியாவும் பாகிஸ்தானும்தான் பேச வேண்டும். இதில் மூன்றாவது நாடுக்கு எந்த வேலையும் இல்லை என தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201909:19:42 IST Report Abuse
ravichandran பாகிஸ்தான் ISI Mr.Simrankhan
Rate this:
Share this comment
Cancel
Balaji - Chennai ,இந்தியா
08-செப்-201914:26:14 IST Report Abuse
Balaji Article 370 இருப்பது Constitution of INDIA-வில் and not in Constitution of Pakistan. அதனால் அதில் உள்ள clause-ஐ மாற்றுவதற்கோ அல்லது நீக்குவதற்கோ அல்லது வேறு ஒன்றை புகுத்துவதற்கோ இந்திய அரசாங்கத்துக்கு முழு உரிமை உண்டு. எனவே அதை ஏன் நீக்கினாய் என்பது கேட்பதே தவறு. என்னை கேட்டால் இது இரு நாட்டு பிரச்சினை கூட அல்ல. ஒரு நாட்டின் பிரச்சினை. இந்திய நாட்டின் பிரச்சினை. இந்திய அரசாங்கம் இந்திய மக்களிடமும் மக்கள் பிரதிநிதிகளிடமும் தான் பேசும், பேசவேண்டும் தவிர வேறு எவரிடமும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
08-செப்-201909:09:33 IST Report Abuse
ashak பாகிஸ்தானை விட வளர்ச்சியில் கீழ இருக்கோமாமே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X