பொது செய்தி

இந்தியா

திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கியது 'லேண்டர் ':

Added : செப் 07, 2019
Share
Advertisement
திட்டமிட்டபடி நிலவில்  தரையிறங்கியது 'லேண்டர் ':


பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது 'லேண்டர் ' இதனை விஞ்ஞானிகள் கைதட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக, 'சந்திரயான் - 2' விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோ, ஜூலை, 22ல் விண்ணில் ஏவியது. இந்த விண்கலம், புவி சுற்றுவட்டப் பாதையை படிப்படியாக கடந்து, பின், நிலவு சுற்றுவட்டபாதையை அடைந்தது.


latest tamil news


சந்திரயான் - 2 விண்கலத்தில், 'ஆர்பிட்டர்' எனப்படும், நிலவை சுற்றும் சாதனம், 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரையிறங்கும் சாதனம், 'ரோவர்' எனப்படும், நிலவின் தரை பரப்பில் நகர்ந்து சென்று ஆய்வு மேற்கொள்ளும் வாகனம் என, மூன்று சாதனங்கள் உடையதாக வடிவமைக்கப் பட்டிருந்தது.


latest tamil news


Advertisement

சந்திரயான் - 2 விண்கலம், நிலவை நெருங்கியதை அடுத்து, 2ம் தேதி, ஆர்பிட்டரிலிருந்து, லேண்டர் சாதனம் தனியாக பிரிந்து, நிலவின் மேற்பரப்பை நோக்கி நகர்ந்தது. இதைத் தொடர்ந்து, நிலவில் தரையிறங்குவதற்கு வசதியாக, லேண்டரின் சுற்றுவட்ட பாதை மாற்றப்பட்டு, வேகமும் படிப்படியாக குறைக்கப்பட்டது. லேண்டர் சாதனத்தை, நிலவில், பாதுகாப்பாகவும், மெதுவாகவும் தரையிறங்க வைப்பதற்கான சவாலான பணிகள், நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டன.


latest tamil news


இதையடுத்து சந்திராயன்-2 விண்கலத்தின் 'லேண்டர்' சாதனம் நிலவில் தரையிறங்குவதை காண நாடு முழுவதும் உள்ள மக்கள் நேற்று இரவு கண்விழித்து காத்திருந்தனர்.
சந்திராயன் -2 விண்கலத்தின் 'லேண்டர்' என்ற சாதனம் நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பீன்யாவிலுள்ள 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மோடி வருகை


latest tamil news



லேண்டர் தரையிறங்குவதை காண்பதற்காக பிரதமர் மோடி நேற்று இரவு பெங்களூரு வந்தார். மோடியுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 60 மாணவர்களும் பெங்களூரு வந்தனர்.


latest tamil news


தொடர்ந்து 'லேண்டர் சாதனத்தை தரையிறங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு திட்டமிட்டபடி இன்று அதிகாலை 1.52 மணியளவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுளை தொடர்ந்து நிலவில் விண்கலத்தை இறக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியாவும் 4 -வது நாடாக இணைந்தது.


latest tamil news



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X