பொது செய்தி

இந்தியா

'சந்திரயான் - 2' சிக்னல் துண்டிப்பு

Updated : செப் 07, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (115)
Advertisement
சிக்னல், லேண்டர், இழந்தது

பெங்களூரு: 'சந்திரயான் - 2' விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அதிலிருந்து, சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதை, 'இஸ்ரோ' தலைவர் சிவன் வெளியிட்டார்.
சந்திரயான் - 2 விண்கலத்தின், 'லேண்டர்' சாதனம், நிலவில் தரையிறங்கும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வை காண,கர்நாடக மாநிலம், பெங்களூரு பீன்யாவிலுள்ள, 'இஸ்ரோ' கண்காணிப்பு மையத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதை காண்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று இரவு பெங்களூரு வந்தார். அவருடன், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, 60 மாணவ - மாணவியரும்பெங்களூரு வந்தனர்.





முன்னதாக, பிரதமர் மோடி கூறுகையில், ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வை காண, நாட்டு மக்களுடன், நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்,'' என்றார்.லேண்டர் சாதனத்தை நிலவில் தரையிறக்குவது மிகவும் சவாலான பணி என்பதால்,பிரதமர், விஞ்ஞானிகள் முதல், சாதாரண மக்கள் வரை, நேற்று இரவு, 'திக்... திக்...' மனநிலையிலேயே காத்திருந்தனர்.





இன்று, அதிகாலை, 2:15 மணி அளவில், 'லேண்டர்' தரையிறங்கும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிலிருந்து, 'சிக்னல்' துண்டிக்கப்பட்டது. இதை, இஸ்ரோ தலைவர், சிவன் அறிவித்தார். இதையடுத்து, 'விஞ்ஞானிகள் நம்பிக்கை இழக்க வேண்டாம்' என கூறிய பிரதமர் மோடி, இஸ்ரோ மையத்திலிருந்து புறப்பட்டு சென்றார்.

Advertisement




வாசகர் கருத்து (115)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
07-செப்-201916:05:47 IST Report Abuse
natarajan s தென் கிழக்கு ஆசிய நாடுகளில் இது போன்ற ஒரு முயற்சியை எந்த நாடும் செய்ததில்லை . முயற்சி வெற்றி அதை பாராட்டுவோம். நம்மிடம் எடை மிகுந்த வெகு தொலைவு செல்லும் Rocket கிடையாது . polar orbit மூலம் சந்திரனுக்கு விண்கலம் அனுப்பிய ஒரே நாடு இந்தியா தான் . முதல் முயற்சியில் இந்த அளவிற்கு பலம் கிடைத்துள்ளது என்றால் அடுத்து இன்னும் சரியாக அனுப்பமுடியும். அமெரிக்கா கூட Appolo mission பலமுறை முயற்சி செய்த பிறகுதான் Appolo 9 மூலம் விண்ணில் இறங்க முடிந்தது . நமக்கு இது முதல் முயற்சி . பாடம் கற்று அதில் இருந்து தேர்ச்சி பெறுவோம். ISRO விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
07-செப்-201914:19:15 IST Report Abuse
Tamilan தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மிக பிரசித்தி பெற்ற கோவில்களின் கருவறைகளிலேயே விஷமமும் விஷமிகளும் நிறைந்து இருக்கும், போது தமிழரின் கட்டுப்பாட்டில் உள்ள குழுவில் இருக்கமாட்டார்களா ?
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
07-செப்-201915:47:36 IST Report Abuse
சுந்தரம் உங்கள் கருத்தில் இருந்து நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?...
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
07-செப்-201914:12:31 IST Report Abuse
oce உனது பெயரில் உடல் உள்ளது. நீ உடலை மட்டும் பார்ப்பவர். நான் உலகை பார்ப்பவன். என் மனதில் படுவனவற்றை நீயும் சிந்தி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X