பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு: இலங்கை 'மாஜி' எம்.பி. யோசனை

Added : செப் 07, 2019
Advertisement

புதுக்கோட்டை: ''இலங்கைக்கு இந்தியா அழுத்தம் கொடுத்தால் தமிழக மீனவர்களின் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்'' என இலங்கை முன்னாள் எம்.பி. ஆறுமுக தொண்டைமான் தெரிவித்தார்.
புதுக்கோட்டை பூவரசுகுடியில் உள்ள அய்யனார் கோவில் இலங்கை முன்னாள் எம்.பி. ஆறுமுக தொண்டைமான், அமைச்சர் செந்தில் தொண்டைமான் குலதெய்வம்.இருவரும் நேற்று கோவிலில் தரிசனம் செய்தனர். பின் ஆறுமுக தொண்டைமான் கூறியதாவது: இலங்கையில் ஜனாதிபதி ஒரு கட்சியை சேர்ந்தவராக பிரதமர் மற்றொரு கட்சியை சேர்ந்தவராக இருப்பதால் நிலையற்ற தன்மை உள்ளது. இவர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தால் இலங்கை தமிழர்கள் மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்னைகள் தீர்க்க முடியாத நிலையில் உள்ளன. இந்திய அரசு அழுத்தத்தால் தான் இலங்கை தமிழர் பிரச்னைக்கும் மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். இலங்கையில் சீனா ராணுவ தளவாடங்கள் அமைக்க முடியாமல் இருக்க இந்தியா இலங்கை உறவும், தமிழகத்தின் அழுத்தமும் தான் காரணம். இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழுத்தத்தால் தான் இலங்கை தமிழர்கள் தற்போது சிறிது நிம்மதியாக உள்ளனர், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X