
லேண்டர் உடனான தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சந்திரயான் 2 விண்கலத்துடனான தொடர்பு 5 சதவீதம் மட்டுமே இழந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என கூறிச் சென்ற பிரதமர் மோடி, மீண்டும் காலை 8 மணியளவில் இஸ்ரோ மையத்திற்கு வந்தார். இஸ்ரோ தலைவர் சிவன், கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மோடியை வரவேற்றனர்.
இஸ்ரோ மையத்தில் விஞ்ஞானிகளிடம் ஊக்கமளிக்கும் வகையில், அவர்களை பாராட்டு, நம்பிக்கையான வார்த்தைகளை பேசினார் மோடி. பிரதமர் மோடியின் உரையை கேட்ட பெண் விஞ்ஞானிகள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். உரையை நிறைவு செய்து புறப்பட்ட மோடி, "உங்களின் கனவுகளும், திட்டங்களும் என்னை விடவும் வலிமையானவை. உங்களை சந்தித்து உரையாற்ற வந்தேன். ஆனால் உங்களிடம் இருந்து ஊக்கத்தை பெற்றுக் கொண்டேன் " என விஞ்ஞானிகளிடம் தெரிவித்தார்.

#WATCH PM Narendra Modi hugged and consoled ISRO Chief K Sivan after he(Sivan) broke down. #Chandrayaan2 pic.twitter.com/bytNChtqNK
— ANI (@ANI) September 7, 2019
பிரதமரை வழியனுப்ப சென்ற இஸ்ரோ தலைவர் சிவன், கண்ணீர் விட்டு அழுதார். அவரை கட்டி அணைத்து, பிரதமர் மோடி தேற்றினார். இஸ்ரோ சிவனின் தோள்களை தட்டிக் கொடுத்து, ஆறுதல் வார்த்தைகள் கூறிய பிறகு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE