சந்திரயான் துண்டிப்பு: பாக்., அமைச்சர் வக்கிரம்

Updated : செப் 07, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (93)
Share
Advertisement
இஸ்லாமாபாத்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து, கிண்டல் செய்யும் வகையில், பாக்., அறிவியல் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்து விட்டது. இந்த நேரத்தில், ஏராளமானவர்கள், சமூக
பாகிஸ்தான், சந்திரயான், பாவத் சவுத்ரி, வக்கிரம்

இஸ்லாமாபாத்: இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் -2 சிக்னல் துண்டிக்கப்பட்டது குறித்து, கிண்டல் செய்யும் வகையில், பாக்., அறிவியல் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி தனது வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான்-2 விண்கலத்தின், லேண்டர் சாதனம், நிலவில் தரையிறங்குவதற்கு முன்னர் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை துண்டித்து விட்டது. இந்த நேரத்தில், ஏராளமானவர்கள், சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பதிவிட்டனர். இதனால், சந்திரயான்-2 டிரெண்டிங்கில் இருந்தது.


latest tamil news



அப்போது, இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வரும், பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, டுவிட்டரில், 'தயவுசெய்து தூங்குங்கள். சந்திரனில் பொம்மை இறங்குவதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியது', என பதிவிட்டார். இதற்கு சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து மற்றொரு டுவிட்டில் பாவத் சவுத்ரி, சந்திரயான்-2 திட்டம் குறித்து என்னை விமர்சிப்பது ஆச்சர்யமாக உள்ளது எனவும், மற்றொரு டுவிட்டில், மக்களின் பணத்தை வீணடித்ததற்காக, பிரதமர் மோடியை, இந்திய பார்லிமென்ட் பொறுப்பாக்க வேண்டும். தான் அரசியல்வாதி அல்ல என கருதி கொண்டு, விண்வெளி வீரர் என நினைத்து கொண்டு, சாட்டிலைட் தொலைதொடர்பு குறித்து, மோடி பேசுகிறார் என பதிவிட்டுள்ளார்.
அமைச்சரின் கருத்தை, சமூக வலைதளவாசிகள் கண்டித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
noor - Makkah,சவுதி அரேபியா
11-செப்-201915:16:41 IST Report Abuse
noor பாகிஸ்தானிகள் பொறாமை பிடித்தவர்கள் . இந்தியாவின் முன்னேற்றைத்தை கண்டு பயப்படுகிறார்கள் .
Rate this:
Cancel
Tamilselvan - Chennai,இந்தியா
08-செப்-201918:03:28 IST Report Abuse
Tamilselvan பதில் சொல்லி நமது நேரத்தை வீணாக்க வேண்டாம். தனியாக பிரிந்து சென்ற எழுபது ஆண்டுகளில் உருப்படியாக ஏதாவது செய்து உள்ளனரா இவர்கள் ?? உருப்படாத தீய சக்திகள்.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
08-செப்-201917:27:30 IST Report Abuse
JSS உனக்கென்ன வந்தது> இவரை ஸ்பெஸ் சூட் இல்லாமல் விண்வெளியில் தூக்கி போட இஸ்ரோவிடம் சொல்கிறோம். அங்கிருந்து கரடியாய் கத்து. ஒன்றுக்கும் உதவாத மூர்க்கனே. மூர்க்கனுக்கு புத்திமட்டு என்று தெரியாமலா சொல்லிஇருக்கிறார்கள் பண்டை தமிழர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X