ஜம்மு -காஷ்மீரில் ராணுவ குவிப்பு : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் விளக்கம்

Updated : செப் 09, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (2)
Advertisement
காஷ்மீர், தோவல், பாதுகாப்பு ஆலோசகர், பயங்கரவாதிகள், ராணுவம், குவிப்பு

புதுடில்லி : ''பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே, ஜம்மு - காஷ்மீரில், ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது; மக்களை கட்டுப்படுத்த அல்ல,'' என, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீர் நிலைமை குறித்து, டில்லியில், அஜித் தோவல் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீரில், ராணுவம் அத்துமீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாகிஸ்தான் துாண்டிவிடும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவதற்காகவே, அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்கு அல்ல.

பாகிஸ்தான், பயங்கரவாதிகளை துாண்டிவிட்டு, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கிறது. இதுவரை, 230 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜம்மு - காஷ்மீரில், சட்டம் -- ஒழுங்கு விவகாரத்தை, உள்ளூர் போலீசும், துணை ராணுவ படைகளுமே கவனிக்கின்றன. ராணுவத்துக்கு இதில் தொடர்பில்லை. காஷ்மீரில், தரைவழி தொலைபேசி இணைப்புகள், 100 சதவீதம் கொண்டு வரப்பட்டு விட்டன. அங்கு, மொத்தமுள்ள, 199 காவல் நிலையங்களில், 10 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே தடை உத்தரவு அமலில் உள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், அங்கு பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று, மக்கள் கருத்தை கேட்டறிந்தேன். காஷ்மீர் மக்களில் பெரும்பாலானோர், சிறப்பு அந்தஸ்து ரத்தை வரவேற்கின்றனர். அவர்கள், புதிய வாய்ப்புகளை, பொருளாதார வளர்ச்சியை, வேலைவாய்ப்பை எதிர்பார்த்துள்ளனர். ஒருசில விஷமிகள் மட்டுமே பிரச்னை செய்கின்றனர். ஜம்மு - காஷ்மீரின் அனைத்து பகுதிகளிலும், தடை இல்லாமல், மக்கள் இயல்பாக நடமாட வழி செய்யவே, நாங்களும் விரும்புகிறோம். ஆனால், அது பாகிஸ்தான் கைகளில் தான் உள்ளது.

பாகிஸ்தான், பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்யாமல் இருக்க வேண்டும். அங்கிருந்தபடியே, இங்கே உள்ள தங்களின் கைக்கூலிகளுக்கு, உத்தரவு போடாமல் இருக்க வேண்டும். அப்படி பாகிஸ்தான் நடந்து கொண்டால், நாங்களும் முழுமையாகத் தடையை நீக்குவோம். இப்போதைக்கு, 92.5 சதவீத நிலப்பரப்பு, எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாமல், மக்கள் இயல்பாக வாழும் வகையில் உள்ளது.

ஆனால், எல்லையில் இருந்து, 20 கிலோ மீட்டர் துாரத்தில், சிக்னல் கோபுரங்கள் அமைத்து, அங்கிருந்து தன் கைக்கூலிகளை, பாகிஸ்தான் இயக்குகிறது. சில தகவல்களை நாங்கள் இடைமறித்துக் கேட்டோம். அப்போது ஒரு குரல், 'அங்கு ஆப்பிள் லாரிகள் ஏன் சுலபமாக நடமாடிக் கொண்டிருக்கின்றன? அதைத் தடுத்து நிறுத்த முடியாதா? உங்கள் கைகளுக்கு வளையல் அனுப்ப வேண்டுமா என்ன...' என, கேட்டது.

பாகிஸ்தானின் செயல் இப்படியிருக்கும்போது, படைகளை எப்படி குறைக்க முடியும். காஷ்மீரில், அமைதியை சீர்குலைப்பதற்கு, பாகிஸ்தானிடம் உள்ள ஒரே ஆயுதம், பயங்கரவாதம் தான். காஷ்மீரில், அரசியல் தலைவர்கள் பலர், வீட்டுக்காவலில் உள்ளனர். அவர்கள் ஒன்று கூடினால், அதை பயங்கரவாதிகள் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு உள்ளது. அவர்கள் மீது குற்ற வழக்கோ அல்லது தேசத்துரோக வழக்கோ இல்லை. நிலைமை சீராகும் வரை, அவர்கள் காவலில் இருப்பர். தங்களின் காவலை எதிர்த்து, அவர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் உரிமை உள்ளது. இவ்வாறு, அஜித் தோவல் கூறினார்.


கவர்னருடன் சிறைத்துறை டி.ஜி.பி., ஆலோசனை

ஜம்மு - காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக்குடன், மாநில சிறைத்துறை, டி.ஜி.பி., - வி.கே.சிங் நேற்று ஆலோசனை நடத்தினார். மாநிலத்தில், சிறைகளில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி, கவர்னரிடம் தெரிவித்த, வி.கே.சிங், அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றியும் தெரிவித்தார். சிறைகளில் அமல்படுத்தப்படும் கைதிகள் நல திட்டங்கள் பற்றியும், கவர்னரிடம், வி.கே.சிங் தெரிவித்தார். இதேபோல், ஜம்முவில் உள்ள ஸ்ரீமாதா வைஷ்ணவ தேவி பல்கலைக்கழக துணை வேந்தர், ரவிந்திர குமார் சின்ஹாவும், கவர்னரை சந்தித்து, பல்கலைக்கழக செயல்பாடுகள் பற்றி ஆலோசித்தார்.


இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு - காஷ்மீரில், நேற்று முன்தினம், வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகையை முன்னிட்டு, பல இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை, எந்த வித அசம்பாவிதமும் இன்றி, அமைதியாக நடந்து முடிந்தது. இதையடுத்து கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று சில பகுதிகளில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
08-செப்-201917:55:59 IST Report Abuse
Endrum Indian "பயங்கரவாதிகள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவே" அதெல்லாம் வேண்டாங்க, கண்டேன் சுட்டேன் என்று ராணுவத்திற்கு ஆணையிடுங்கள் அது போதும்.
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
08-செப்-201913:15:26 IST Report Abuse
Ram Sekar ஜம்மு காஷ்மீரின் மொத்தமுள்ள மாவட்டங்களில் சுமார் 4 முதல் 5 மாவட்டங்களில் பாக்கிஸ்தான் ஆதரவு இயக்கங்கள், பிரிவினைவாத ஆட்கள் உள்ளனர். அவனுகதான் எல்லா பிரச்சினைக்கும் காரணம். பாகிஸ்தானிடம் இருந்து வாங்கி குடிச்சிட்டு இங்க வாந்தி எடுக்குறானுங்க. 1 . பாகிஸ்தானின் கடையை நிரந்தரமாக மூடவேண்டும் அல்லது 2 . பாகிஸ்தானிடம் வாங்கி குடிக்கும் பன்னாடைகளை ஒழிக்கவேண்டும். மேற்கண்டவற்றில் ஏதாவது ஒன்றை 80 சதவீதம் கூட செய்தால் போதும் மற்றோன்று தானாக வந்து மாட்டும், இப்போது மாட்டிவருகிற பாக்கிஸ்தான் போல. பிறகு மொத்தமாக முடிச்சு "சங்க ஊதி" விட்டரலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X