அமித் ஷா அழைப்பு ஏற்பாரா ரஜினி?

Updated : செப் 09, 2019 | Added : செப் 07, 2019 | கருத்துகள் (52)
Share
Advertisement
அமித்ஷா, ரஜினி, அழைப்பு, தேர்வுக்குழு, பொறுப்பாளர், மோடி

புதுடில்லி : தமிழக பா.ஜ.,வின், அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு, அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. உட்கட்சி தேர்தல், டிசம்பர் மாதம் வரை நடைபெற இருக்கிறது.

அதுவரையில், தற்காலிக தலைவர் அல்லது செயல் தலைவர் நியமிக்கப்படுவாரா அல்லது உட்கட்சி தேர்தல் முடிந்து, புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்நிலையில், தலைவர் பதவியை கைப்பற்று வதற்கு, மாநில நிர்வாகிகள் சிலர், டில்லியில் முகாமிட்டுள்ளனர். தங்களின் பெயர்களை, பரிசீலனை பட்டியலில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.


கலந்தாய்வு கூட்டம்


பட்டியலில் இடம் பெற்ற பெயர்களை, மத்திய தேர்வுக்குழு ஆராயும். அந்தக் குழு பரிந்துரைக்கும் நபர்களில் ஒருவரை, தேசியத் தலைவர் அமித் ஷா, தேசிய அமைப்பு பொதுச்செயலர், சந்தோஷ் ஆகியோர் தேர்வு செய்ய உள்ளனர். வரும், 17ம் தேதி, பிரதமர் மோடியின் பிறந்த நாள். அதற்கு முன், புதிய தலைவர் அறிவிப்பு வெளியாகலாம் என, மாநில நிர்வாகிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில், மோடி பிறந்த நாளை ஒட்டி, ஒரு வாரம், 'சேவா' என்ற பெயரில், மக்கள் நலப் பணிகள் செய்ய, திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் பொறுப்பாளராக, தமிழக பா.ஜ., நிர்வாகி, அனு சந்திரமவுலியை நியமித்துள்ளனர்.

அவரது தலைமையில், வரும், 10ல், மாநில நிர்வாகிகள், பிற அணிகளின் நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம், சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கிடையில், வரும், 30ல் நடக்கும், சென்னை, ஐ.ஐ.டி., உயர்கல்வி நிறுவன பட்டமளிப்பு விழாவில், பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். அப்போது, நடிகர் ரஜினியை அழைத்துப் பேச, அவர் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இது குறித்து, தமிழக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: 'தமிழக பா.ஜ., தலைவராக, நடிகர் ரஜினி பொறுப்பேற்க வேண்டும்; அவரது மக்கள் மன்றத்தை, பா.ஜ.,வுடன் இணைத்தால், முதல்வர் வேட்பாளராக, ரஜினி அறிவிக்கப்படுவார்' என, அமித் ஷா உத்தரவாதம் அளித்திருக்கிறார்.


30 சதவீத ஓட்டுகள்


ஆனால், ரஜினி, இன்னும் சில படங்களில் நடிக்க வேண்டியதிருப்பதால், எந்த முடிவும் சொல்லாமல் இழுத்தடித்து வருகிறார். அதனால், சென்னைக்கு வரும் பிரதமர் மோடியும், ரஜினியும் சந்தித்து பேசுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. உளவுத்துறை கொடுத்துள்ள அறிக்கையில், '2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் - ரஜினி - இ.பி.எஸ்., இடையே தான் போட்டி இருக்கும். லோக்சபா தேர்தலில், தி.மு.க., எடுத்துள்ள, 53 சதவீதம் ஓட்டுகளில், 20 சதவீதம், ரஜினி பிரிப்பார்; அ.தி.மு.க.,வின், 10 சதவீதம் ஓட்டுகளையும், அவர் பெறுவார். இதன் வாயிலாக, ரஜினிக்கு, 30 சதவீதம் ஓட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது' என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த நிர்வாகி கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kazhaga Kanmani - Chandler,யூ.எஸ்.ஏ
11-செப்-201909:38:29 IST Report Abuse
Kazhaga Kanmani வரும்ம்ம்ம்ம் ஆனா வராது...
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் தூண்டிலில் சிக்கப் போவது வேறொரு விலாங்கு FRANCHISE எடுக்கும்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் STOCKHOLM SYNDROME PATHETICALLY THE STOCKHOLM SYNDROME IS TO STAY WITH MANDATE OF TN. WHAT IS STOCKHOLM SYNDROME? STOCKHOLM SYNDROME OR CAPTURE-BONDING IS A PSYCHOLOGICAL PHENOMENON IN WHICH HOSTAGES EXPRESS EMPATHY AND SYMPATHY AND HAVE POSITIVE FEELINGS TOWARD THEIR CAPTORS, SOMETIMES TO THE POINT OF DEFENDING AND IDENTIFYING WITH THEM. FEELINGS OF TRUST OR AFFECTION FELT IN MANY CASES OF KIDNAPPING OR HOSTAGE-TAKING BY A VICTIM TOWARDS A CAPTOR. THE STOCKHOLM SYNDROME OR CAPTURE-BONDING, A PSYCHOLOGICAL PHENOMENON IN WHICH HOSTAGES EXPRESS EMPATHY AND SYMPATHY AND HAVE POSITIVE FEELINGS TOWARD THEIR CAPTORS, SOMETIMES TO THE POINT OF DEFENDING AND IDENTIFYING WITH THEM. PATHETICALLY THIS HAS TO STAY WITH MANDATE IN TN.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X