பொது செய்தி

தமிழ்நாடு

சூரியசக்தி மின் உற்பத்தி 10வது இடத்தில் தமிழகம்

Added : செப் 08, 2019 | கருத்துகள் (2)
Share
Advertisement

மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பது தொடர்பாக, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை வெளியிட்டுள்ள, தரவரிசை பட்டியலில், தமிழகம், 10வது இடத்தில் உள்ளது.

தமிழகத்தில், சூரியசக்தி மின் நிலையங்களில், ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேல், மின்சாரம் கிடைக்கும் சூழல் உள்ளது. இதனால், 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், நிலத்தில், 2,850 மெகா வாட் திறனில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைத்துள்ளன; புதிய நிறுவனங்களும் ஆர்வம் காட்டி வருகின்றன.வீடுகள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், கட்டடங்களின் மேல் பகுதியில், குறைந்த திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கின்றன. தமிழகத்தில், இதுவரை, 5,000க்கும் மேற்பட்ட கட்டடங்களில், 200 மொ வாட் திறனில், மேற்கூரை மின் நிலையங்கள் உள்ளன.மாநில அரசுகள், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க ஊக்குவிப்பது; மானியம் மற்றும் அனுமதி வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை கருதி, 2018 - 19ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலை, மத்திய புதுப்பிக்கத்தக்க மின் துறை, தற்போது வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம், 50.90 புள்ளிகளுடன், 10வது இடத்தில் உள்ளது. கர்நாடகா, 78.80 புள்ளிகளுடன், முதலிடத்திலும்; தெலுங்கானா, 72.20 புள்ளிகளுடன், இரண்டாவது இடத்திலும் உள்ளன. தொடர்ந்து, குஜராத், 67.90 புள்ளிகளுடன், மூன்றாவது; ஆந்திரா, 66.10 புள்ளிகளுடன், நான்காவது; ராஜஸ்தான், 62.20 புள்ளிகளுடன், ஐந்தாவது இடத்தில் உள்ளன.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
08-செப்-201908:29:41 IST Report Abuse
Loganathan Kuttuva Solar panels and other equipments should be sold in EB offices at reduced rates like energy saving LED bulbs.
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
08-செப்-201905:59:22 IST Report Abuse
Sriram V We have to pay 10k as bribe for every domestic connection to government officials. Whether government will take any action against such officials
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X