பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்களுக்கு முன் உதாரணமான பட்டதாரி இளைஞருக்கு பாராட்டு

Added : செப் 08, 2019
Share
Advertisement

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அரசு மருத்துவமனையில் வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொண்ட முதுகலை பட்டதாரிக்கு, டாக்டர்கள் பாராட்டு தெரிவித்தனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த சின்னதச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 31: முதுகலை பட்டதாரி, இவரது மனைவி செண்பகம். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். பெண் குழந்தைகளுக்கு அரசு உதவியை பெற்ற இவர், மனைவி செண்பகத்தின் விருப்பத்தின் பேரில், அன்பழகன் தனக்கு வாசக்டமி அறுவை சிகிச்சை செய்யுமாறு வேம்பி அரசு மருத்துவமனை டாக்டரிடம், தனது விருப்பத்தை தெரிவித்தார்.அதன் பேரில், ராதாபுரத்திலுள்ள வட்டார அரசு மருத்துவமனையில் அன்பழகனுக்கு, தழும்பில்லாத நவீன வாசக்டமி எளிய கருத்தடை நேற்று நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் வினோத் தலைமையில், அறுவை சிகிச்சை டாக்டர் பிரசாத், மயக்கவியல் டாக்டர் வருண் மற்றும் மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்தனர்.இது பற்றி வட்டார மருத்துவ அலுவலர் வினோத் நிருபர்களிடம் கூறியதாவது:குடும்ப கட்டுப்பாடு என்றாலே பெண்களுக்குதான் என்று நிர்ணயிக்கப்படாத விதி இருந்தது. இதனை மாற்றும் வகையில் குடும்பக் கட்டுப்பாடு ஆண்களும் செய்து கொள்ளலாம் என்ற வகையில், ஆண்களுக்கு முன் உதாரணமாக , வாசக்டமி அறுவை சிகிச்சை செய்து கொண்ட அன்பழகனுக்கு மருத்துவமனை சார்பில் வாழ்த்துகள். அன்பழகனை போல அனைத்து ஆண்களும் , இந்த எளிய நவீன முறையிலான கருத்தடை அறுவை சிகிச்சை செய்து பயன் பெறலாம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X