அரிசி வழங்க அனுமதி மறுப்பு: கவர்னர் - முதல்வர் மீண்டும் உரசல்

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (27)
Advertisement
அரிசி வழங்க அனுமதி மறுப்பு: கவர்னர் - முதல்வர் மீண்டும் உரசல்

புதுச்சேரி: மக்களுக்கு நேரடியாக அரிசி வழங்கும் திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் புதுச்சேரி முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்நிவாசில் இருந்து அதிருப்தியுடன் வெளியேறினர்.

'அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும்' என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தி வருகிறார்.ஆனால் 'அரிசிக்கு பதிலாக பணமாக பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்' என கவர்னர் கிரண்பேடி கூறுகிறார். இதனால் 17 மாதங்கள் அரிசியாகவும்; 5 மாதங்கள் பணமாகவும் வழங்கப்பட்டது.இந்நிலையில் ஜூனில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பணத்திற்கு பதிலாக அரிசியாக வழங்குவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் அரிசி வழங்குவதற்காக 160 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டது.அரிசி வழங்குவது தொடர்பான கோப்பு கவர்னர் கிரண்பேடியின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் ஒப்புதல் அளிக்கவில்லை.இந்நிலையில் 'மாதந்தோறும் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவச அரிசி வழங்கப்படும்' என்ற தீர்மானத்தை சட்டசபையில் முதல்வர் நாராயணசாமி நேற்று முன்தினம் முன்மொழிந்து ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலுடன் முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் காங். மற்றும் தி.மு.க. - எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் மாளிகையான ராஜ்நிவாசுக்கு நேற்று மதியம் 1:00 மணிக்கு சென்றனர்.அங்கு கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேச்சு நடத்தினர். தலைமைச் செயலர் அஸ்வனிக்குமார் உடனிருந்தார்.பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் அரை மணி நேரத்தில் ராஜ்நிவாசில் இருந்து முதல்வர் அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதிருப்தியுடன் வெளியேறினர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
n.palaniyappan - karaikal ,இந்தியா
09-செப்-201906:39:29 IST Report Abuse
n.palaniyappan என். பழனியப்பன் காரைக்கால் மேதகு ஆளுநர் விரும்புவது தரமான அரிசி கிடைக்க வேண்டும் என்பது வரவேற்கதக்கது. ஆனால் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதால் அந்த பணம் அரிசி வாங்க பயன்படுகிறதா என்பதை குடும்பத்தலைவியிடம் கேட்டுபாருங்கள். பல பொறுப்பில்லாத குடும்ப தலைவர்கள் அந்த பணத்தை சாராய கடைகளில் கொண்டு சேர்க்கின்றனர். அரிசியாக கொடுத்தால் வீட்டில் உள்ளவர்கள் பசியை போக்கும். அரிசியாக கொடுப்பது அன்னதானம் கொடுப்பதற்கு சமம்.
Rate this:
Share this comment
Cancel
ManiS -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201905:34:22 IST Report Abuse
ManiS thalaiku commission venume. Yesterday my comment edited.
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-செப்-201920:38:27 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இப்படிதாங்க இருக்கவேண்டும் ஆளுநர். தன்கடமையை தவறாது செய்யும் ஆளுநர்களை வணங்கி பாராட்டலாம்.பல்லாண்டு வாழ்க என....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X