பொது செய்தி

இந்தியா

பஞ்சாப்பில் டிவி சீரியலுக்கு தடை

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

சண்டிகர் : பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்வதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.



latest tamil news


பஞ்சாப்பில் டிவி சேனல் ஒன்றில் "ராம் சியா கி லக் குஷ்" என்ற சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல், தவறான கருத்துக்களை கூறுவதாகவும், வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், தங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் வால்மீகி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.


latest tamil news



இதில் ஜலந்தரில் நடந்த கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனையடுத்து சீரியலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடு முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் எனவும், சீரியர் டைரக்டரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வால்மீகி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மதரீதியான பிரிவினை அல்லது மோதல்களை தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201903:58:00 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாட்டிலும் ஒரு சிலகாலங்கள் இப்படி செய்தால் மக்கள் அறிவு வளரும். உண்மை உலகிற்கு வருவார்கள்.
Rate this:
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
08-செப்-201920:44:42 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN கெட்டு குட்டுசுவராக போக தொலைகாட்சி சீரியல்கள் உள்ளன. கற்பனை கதைகளை நம்பி மக்கள் கெட்டு போகின்றன்ர் . தடை செய்யனும் .குற்ற செயல்களையே காட்டாத நல்வழிகளை நீதிகளை புகட்டும் கதை சீரியலையே பரப்ப அனுமதிக்கனும். இரவு ஒலிஒளி பரப்பை அனுமதிக்ககூடாதுங்க. தேர்தல் பரப்புரைக்கு விதிப்பதுபோல் இரவு பத்துமணி வரையே அனுமதிக்கனும். அதுதான் நல்லது.
Rate this:
Cancel
S.BASKARAN - BANGALORE,இந்தியா
08-செப்-201920:19:24 IST Report Abuse
S.BASKARAN வெரி வெரி குட் டெசிசின்.இதே போல் உண்மைக்கு புறம்பாக காட்டிவரும் 90 % டிவி நாடகங்களை அறவே நிறுத்த வேண்டும். மக்களின் பொழுதுபோக்கு என்ற பெயரில் மக்களின் மனதை கெடுத்துவருகிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X