தலிபான்களுடன் பேச்சு ரத்து: டிரம்ப்

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (13)
Advertisement
US,Taliban, Talks, Kabul Bombing, Trump,Donald Trump, டிரம்ப், டோனால்ட் டிரம்ப்,

காபூல்: ஆப்கனில், தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்த அமைப்பின் தலைவர்களுடன் நடக்கவிருந்த பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், தலிபான் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தலைவர்களுடன் நான், டேவிட் முகாமில், ஞாயிற்றுக்கிழமை ரகசிய பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தேன். ஆப்கன் அதிபருடனும் தனியாக பேச்சுவார்த்தை நடத்த இருந்தேன். அவர்கள் இன்று அமெரிக்க வர இருந்தனர். ஆனால், ஒரு அமெரிக்க வீரர் மற்றும் 11 பேர் உயிரிழக்க காரணமாக தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றுள்ளனர். நான் உடனடியாக சந்திப்பையும், அமைதி பேச்சுவார்த்தையையும் ரத்து செய்துவிட்டேன். தங்களது கோரிக்கையை நிறைவேற்ற பலரை கொல்லும், இவர்கள் என்னமாதிரியான மக்கள்? அவர்கள் தான் சூழ்நிலையை மோசமாக்கி உள்ளனர். இதுபோன்ற முக்கியமான பேச்சுவார்த்தை நடக்க உள்ள சமயத்தில் , அமைதி ஒப்பந்தத்தை ஒப்புகொள்ளாமல், 12அப்பாவி மக்களை கொன்றால், அவர்களுடன் அர்த்தமுள்ள ஒப்பந்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்த அவர்களுக்கு தகுதி இல்லை. இன்னும் எத்தனை காலம் தான் அவர்கள் போராடுவார்கள்.இவ்வாறு அந்த பதிவில் டிரம்ப் கூறியுள்ளார்.

கடந்த வியாழன் அன்று, ஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
08-செப்-201920:22:46 IST Report Abuse
Needhiyin Pakkam Nil அமெரிக்காவும் தாலிபானும் பேச்சை நடத்தி தாலிபான்கள் ஜனநாயக அரசியலுக்கு வந்து விட்டால் இவ்வளவு நாளாக ஆப்கான் அதிபராக இருக்குற எனக்கு என்ன மரியாதை, அதான் சத்தமில்லாமல் சத்தத்தமாக வெடிக்க வைத்தேன், தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதை அடுத்து ஸ்ரீ,டிரம்பும் பேச்சு வார்த்தையை நிறுத்தி விட்டேன் என்று அறிக்கை விட்டு விட்டார், அதான் ஒரே பாமில் இரண்டு மாங்காய் பழி தாலிபானுக்கு பதவி அதிபருக்கு............
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
08-செப்-201919:09:57 IST Report Abuse
Natarajan Ramanathan Today a sabotage done by an islamic mechanic named Abdul Majeed on an American Airlines plane from Miami to Bahamas was discovered in the last minute, grave mishap was averted and 150 passengers were saved. Muslims should not be allowed to work other than in butcher shops.
Rate this:
Share this comment
Cancel
Rajan - Alloliya ,இந்தியா
08-செப்-201915:53:20 IST Report Abuse
Rajan இதுக்கெல்லாம் mediator வேணும்னா எங்க சைக்கோ அண்ணனை use பண்ணிக்கோங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X