பொது செய்தி

இந்தியா

விக்ரம் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்டது

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (84)
Advertisement

புதுடில்லி: நிலவுக்கு அருகே தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் ஆர்பிட்டர் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.







நிலவின் தென்முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீ., தூரத்தில் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதனை மீண்டும் பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர். 14 நாட்களுக்குள் விக்ரம் லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.





இந்நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், விக்ரம் லேண்டர் எங்கிருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லேண்டர் இருக்கும் இடத்தை ஆர்ப்பிட்டர் புகைப்படம் எடுத்து அனுப்பி உள்ளது. இருப்பினும், லேண்டருடன் தொடர்பை பெற முடியவில்லை. லேண்டரிடம் தொடர்பை பெற முயற்சித்து வருகிறோம். தரையிறக்க திட்டமிடப்பட்ட இடத்தில் இருந்து 500 மீ தூரம் தள்ளி லேண்டர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நிலவின் மேற்பரப்பில் தான் லேண்டர், முழுமையாக உள்ளது. ஆர்பிட்டர் எடுத்த புகைப்படம் விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு சிவன் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (84)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kokila - CHENNAI,இந்தியா
09-செப்-201914:25:53 IST Report Abuse
kokila உண்மையானா உழைப்பு வீண் ஆகாது . வெற்றி நிச்சயம் கிடைக்கும் . நம்பிக்கை இழக்காதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
09-செப்-201914:09:58 IST Report Abuse
LAX சூப்பர் சிவன் சார் & டீம்.. வாழ்த்துக்கள்..
Rate this:
Share this comment
Cancel
09-செப்-201912:45:00 IST Report Abuse
நக்கல் மோடி, சிவன் போன்றவர்கள் இந்தியாவில் உள்ள அனைவருடைய பெருமையின் அடையாளம்... தேசபற்றுள்ளவர்கள் தன் தேசத்திற்க்காக எந்த தியாகமும் செய்வார்கள்... இவர்களை போன்றவர்கள் நீடூழி வாழ்ந்து பெருமை சேர்க்கட்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X