கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டம் நீக்கப்படாது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தின் துவக்க விழாவில் அமித்ஷா பேசியதாவது: வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371 வது சட்டப்பிரிவில் மத்திய அரசு கை வைக்காது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவு தற்காலிகமானது தான். ஆனால், சட்டப்பிரிவு 371வது பிரிவு வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அதிகாரங்களை வழங்குகிறது. இரண்டு சட்டப்பிரிவுக்கும் வேறுபாடு உள்ளது.

காஷ்மீர் சிறப்பு சட்டம் ரத்து செய்த பிறகு, வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்பு சட்டத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய போவதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டன. சிறப்பு சட்டம் ரத்து செய்யப்படாது என பார்லிமென்டில் உறுதி அளித்தேன். தற்போது, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 8 முதல்வர்கள் முன்னிலையில், வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 371வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படாது என உறுதி அளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE