பிரதமருக்கு விஞ்ஞானிகள் பாராட்டு| Nation's support, PM's address boosted our morale: ISRO Chief | Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமருக்கு விஞ்ஞானிகள் பாராட்டு

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (35)
Share
பெங்களூரு:சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடியின் பேச்சு, பொது மக்களின் ஆதரவு, விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.சந்திரயான்- 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று(செப்.,7) அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், லேண்டர், நிலவின் தரையில் இருந்து 2.1
Nation's support, PM's address,ISRO Chief, பிரதமர் மோடி, இஸ்ரோ, சிவன், கிரண்குமார், கஸ்தூரி ரங்கன்,

பெங்களூரு:சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டரின் சிக்னல் துண்டிக்கப்பட்ட பின்னர், பிரதமர் மோடியின் பேச்சு, பொது மக்களின் ஆதரவு, விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்ததாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

சந்திரயான்- 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நேற்று(செப்.,7) அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறங்க இருந்தது. ஆனால், லேண்டர், நிலவின் தரையில் இருந்து 2.1 கி.மீ.,தூரத்தில் இருந்த போது, கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இது விஞ்ஞானிகள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. தொடர்ந்து காலை இஸ்ரோ மையத்திற்கு சென்ற பிரதமர் மோடி, ''"சந்திரயான் - 2 திட்டத்தின் வெற்றியில் இடையூறு ஏற்பட்டுள்ளதால், 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் மனம் உடைந்து விடக்கூடாது. புதிய விடியல், சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது'' என்றார்.


latest tamil newsபெங்களூரில் உள்ள இஸ்ரோ அலுவலகத்தில் இருந்து புறப்பட்டார். காரில் ஏறுவதற்கு முன்பாக, இஸ்ரோ தலைவர், சிவனிடம், திரும்பி ஆறுதல் வார்த்தைகளை கூறினார்.அப்போது உணர்ச்சிவசப்பட்ட, சிவன், கண்ணீர் விடுவதைப் பார்த்த, பிரதமர் மோடி, அவரைக் ஆரத்தழுவி தோள்களை தடவிவிட்டு, ஆறுதல் கூறினார். பிரதமரின் தோள்களில் முகத்தை புதைத்துக் கொண்டு, சிவன் கண்ணீர் விட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.


latest tamil news


இது தொடர்பாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், பிரதமர் மோடியின் பேச்சும், தேசத்தின் ஆதரவும் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. இது விஞ்ஞானிகளின் நம்பிக்கையை அதிகரித்தது. என்றார்.


latest tamil news


இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் கூறுகையில், உற்சாகபடுத்தியும், இஸ்ரோவுக்கும் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் பேசியது பாராட்டுக்குரியது. இது எங்களை நெகிழ செய்துள்ளது. நாடு நேர்மறையான பதிலை கொடுத்துள்ளது. பிரதமர் தனது பேசிய விதம் பாராட்டுக்கு உரியது. அவரது பேச்சு, உணர்ச்சிகரமாகவும், ஆழமான அர்த்தங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. இதை விட சிறந்த ஒன்றை நாம் எதிர்பார்க்க முடியாது. என்றார்.


latest tamil news


இஸ்ரோவின் மற்றொரு முன்னாள் தலைவர் ஏஎஸ் கிரண் குமார் கூறுகையில், தேசத்திற்கும், பிரதமருக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதில், பல சிக்கல்கள் இருந்தன. இதனை புரிந்து கொண்டு, ஆதரவு அளித்த நாட்டிற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். ஒட்டு மொத்த நாட்டிற்கும் கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X