போய்ட்டு வாங்க பிள்ளையாரே...

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019
Share
Advertisement



latest tamil news


சென்னையில் விநாயகர் கரைப்பு நிகழ்ச்சி மிகக்கோலகலமாக நடந்தது.பட்டினப்பாக்கம் கடற்கரையில் போலீசார் விரிவான ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.


latest tamil news


விநாயகர் சதுர்த்தி முடிந்து ஒரு வாரமாக விநாயகரை பாதுகாத்து வந்த பக்தர்கள் இன்று ‛விஜர்சனம்' என்னும் விநாயகர் கரைப்பு நிகழ்ச்சிக்காக தாங்கள் வைத்திருந்த பிள்ளையாரை எடுத்துச் சென்று கடலில் கரைத்தனர்.


latest tamil news


Advertisement

விநாயகரை கொண்டு சென்ற வாகனங்களின் எண்ணிக்கையால் பட்டினப்பாக்கம் கடற்கரையே ஸ்தம்பித்தது.பட்டினப்பாக்கத்தில் கிரேன்கள் மூலமாக பெரிய விநாயகர்கள் வாகனத்தில் இருந்து எடுக்கப்பட்டு நேராக கடற்கரையில் கொண்டு போய் வைக்கப்பட்டனர். அங்கு இருந்த தினமலர் பனியன் அணிந்திருந்த தொண்டர்கள் விநாயகரை கடலுக்குள் எடுத்துச் சென்று கரைத்தனர்.ஆர்வம் காரணமாக பொதுமக்கள் கடலுக்குள் வந்துவிடாமல் போலீசார் அரணாக இருந்து பாதுகாத்தனர்.


latest tamil news


விநாயகர் சிலைகள் விதவிதமாக கடற்கரைக்கு எடுத்து வரப்பட்டன.ஒரு விநாயகர் நிஜமான புல்லட் மோட்டார் சைக்கிள் வாகனத்தில் வந்தார் வந்தவர் தான் ஒரு ஹெல்மெட்டும் தனது மூஞ்சூறு வாகனத்திற்கு ஒரு ெஹல்மெட்டும் அணிவித்து வந்து பலருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


latest tamil news


ராணுவ உடையணிந்து விநாயகர்,வெங்கடாஜலபதி போல காட்சி தந்த விநாயகர்,சக்தி விநாயகர்,நர்த்தன விநாயகர் என்று விதம் விதமான விநாயகர் பொம்மைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன.


latest tamil news


இந்தக் காட்சியை நிறைய பேர் கடற்கரையில் திரண்டு நின்று பார்த்தனர் கூடவே சென்று வருக விநாயகரே என்று வழியனுப்பியும் வைத்தனர்.


latest tamil news



-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X