இணைந்து செயல்படுவோம்; இஸ்ரோவுக்கு நாசா அழைப்பு

Updated : செப் 10, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (11+ 16)
Advertisement
இஸ்ரோ, நாசா, இணைந்து, அழைப்பு, சந்திரயான் - 2 , ஜெர்ரி லினகர்

வாஷிங்டன் : 'இந்தியாவின், 'சந்திரயான் - 2' திட்டம் ஊக்கம் அளிப்பதாக உள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில், 'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்' என, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான, 'நாசா' கூறியுள்ளது.

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் - 2 திட்டத்தை, இஸ்ரோ செயல்படுத்தியது. 'விக்ரம்' என பெயரிடப்பட்டுள்ள, 'லேண்டர்' எனப்படும், நிலவில் தரை இறங்கி ஆய்வு செய்யும் சாதனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இது குறித்து, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: விண்வெளி ஆய்வு என்பது மிகவும் கடினமானது.

நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்யும் இஸ்ரோவின், சந்திரயான் - 2 திட்டம் மிகவும் பாராட்டக்கூடியது. உங்களுடைய இந்த முயற்சி, மிகவும் ஊக்கம் அளிக்கக் கூடியதாக அமைந்துள்ளது. சூரிய குடும்பத்தை ஆய்வு செய்வதில், இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட தயாராக உள்ளோம். இவ்வாறு, அந்த செய்தி யில் கூறப்பட்டுள்ளது.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர், ஜெர்ரி லினகர் கூறியுள்ளதாவது: சந்திரயான் - 2 திட்டம், மிகவும் தைரியமான முடிவு. விக்ரம் லேண்டர் சாதனத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதில் இருந்து, இந்தியா நிறைய கற்றுக் கொண்டிருக்கும். இது, அடுத்து வரும் திட்டங்களுக்கு மிகவும் உதவும். எனவே, திட்டம் தோல்வியடைந்து விட்டதாக ஏமாற்றம் அடைய வேண்டாம். இந்தியா மேற்கொண்ட முயற்சி, மிகவும் கடினமானது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201922:11:40 IST Report Abuse
ஆப்பு ட்ரம்பு ஐயா நிலா விஷயத்தில் இரண்டாம் நாடுகளின் தலையீடு வேணாம்.. இது எங்களுக்கும் நிலாவுக்கும் இடையே உள்ள விவகாரம்.
Rate this:
Share this comment
Cancel
Srinath Babu KSD - Madurai,இந்தியா
09-செப்-201912:52:58 IST Report Abuse
Srinath Babu KSD அங்க இருக்குற நாசாவுக்கு தெரியது ஆனா இங்க இருக்குற 200 ருபாய் உ பி களுக்கு தெரியல
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201905:55:43 IST Report Abuse
Pannadai Pandian நாஸாவுக்கும் இஸ்ரோவுக்கும் என்ன வித்யாசம் ? அமெரிக்காவில் வின் வெளி திட்டத்தில் இந்தியர்கள் வேலை பார்த்து அர்ப்பணிப்பு செய்தால் அது நாசா. அதையே ஸ்ரீஹரிகோட்டாவில் செய்தால் இஸ்ரோ. நாசாவில் வசதிகள் அதிகம் இருக்கும் அது ஸ்ரீ ஹரி கோட்டாவில் சற்று குறைவாக இருக்கும். அங்கு இட்லி, தோசை கிடைக்காது ஆனால் இங்கு கேட்டவுடன் தரப்படும். எனவே…..அமெரிக்காவுடன் இனைந்து செயல் பட வேண்டாம். அது நீ அரிசி கொண்டு வா நான் உமி கொண்டு வர்றேன் ரெண்டு பெரும் ஊத்தி ஊத்தி சாப்பிடலாம் என்பது போல. நமது உழைப்பே கேள்விக்குறியாகி விடும். எனினும் அழைப்புக்கு அமெரிக்காவுக்கு நன்றி.
Rate this:
Share this comment
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
09-செப்-201907:55:22 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....)அண்ணே அங்கே எல்லா நாட்டு உணவும் கிடைக்கும். என்னுடைய நண்பர்கள் இன்னும் அங்கே தான் வேலை செய்கிறார்கள். பணம் அதிகம் கிடைக்கும். அவர்களின் அடுத்த நிலவு பயணத்திற்கு 24 பில்லியன் டாலர்கள் ஒதுக்கீடு. அதுவே நமது சந்திராயனுக்கு அதில் ஒரு சதவிகிதம் கூட செலவாகவில்லை. சிலர் கூறுவதை போல இல்லை, அங்கே இந்திய வம்சாவளியினர் ஐந்து சதவிகிதம் இருப்பார்கள். இந்திய வம்சாவளி மருத்துவர்கள் அங்கே ஐந்து சதவிகிதம் இருப்பார்கள். மென்பொருள் துறையில் தான் சதவிகிதம் அதிகம்....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201909:02:51 IST Report Abuse
Pannadai Pandianஓகே, நீங்க சொல்வது சரிதான். அமேரிக்கா என்ற மகத்தான தேசம் உலகில் உள்ள அனைத்து மனித வளங்களையும் பயன் படுத்தி உலக சாம்பியனாக திகழ்கிறது. வாய்ப்பு தந்த அமெரிக்காவுக்கு நன்றி. இந்த பாரம்பரியத்துக்கு வேட்டு வைக்கும் டிரம்ப்பை என்னவென்று சொல்வது ? வெளிநாட்டவர்கள் வேலை வாய்ப்பை பறிக்கிறார்கள் என்று அமெரிக்கர்களின் திறமையை வளர்க்க செய்யாமல் வெளிநாட்டினருக்கு பல கட்டுப்பாடுகள் விதிப்பது சரியில்லை. எனது நண்பர், நல்ல படிப்பு, திறமை சாலி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் உள்ளார். என்னடா வேலை உனக்குன்னு கேட்டேன்....அதற்கு அவர் சொன்ன பதில் "லோக்கல் அமெரிக்கர்கள் செய்து முடிக்காத பணிகளை நான் முடிக்க வேண்டும் அதுதான் என் வேலை என்றார். மற்ற நாடுகள் என்றால் லோக்கல் மக்களுக்கு முன்னுரிமை என்பதை ஏற்றுக்கொள்ளலாம்......ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை அதனை ஏற்றுக்கொள்ள முடியாது......காரணம் அமேரிக்கா என்ற தேசம் தாய் போன்றது உலக நாடுகளுக்கு, எல்லோரையும் அரவணைத்து செல்வது. அமெரிக்காவில் உள்ள செவ்விந்தியர்களை தவிர எல்லோரும் வந்தேறிகளே.........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X