பொது செய்தி

இந்தியா

ரூ. 32,000 கோடி வங்கி மோசடிகள்

Updated : செப் 08, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (18)
Advertisement

இந்தூர்: இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும், 18 பொதுத் துறை வங்கிகளில், 31,898 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


மத்திய பிரதேச மாநிலம், நீமச்சை சேர்ந்த, சமூக ஆர்வலர், சந்திரசேகர் கவுர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், வங்கி மோசடிகள் குறித்த தகவலை கேட்டிருந்தார். அதற்கு, ரிசர்வ் வங்கி அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: இந்த நிதியாண்டின், முதல் காலாண்டில், 31 ஆயிரத்து, 898 கோடி ரூபாய் அளவுக்கு வங்கிகளில் மோசடி நடந்துள்ளதாக, 2,480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதில், எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கியில், 12 ஆயிரத்து 12 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக, 1,197 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கடுத்து, அலகாபாத் வங்கியில், 2,855 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது. ஆனால், இதில் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு, கணக்கு வைத்துள்ளோருக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்ற புள்ளிவிபரம் கிடைக்கவில்லை. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
09-செப்-201914:25:48 IST Report Abuse
J.Isaac ஏதாவது ஒரு தறையில் நாடு வளர்ச்சி அடைந்தால் சரி.
Rate this:
Share this comment
Cancel
Sivaprakasam Manickam - Chennai,இந்தியா
09-செப்-201913:22:09 IST Report Abuse
Sivaprakasam Manickam மினிமம் ஆவெரேஜ் பாலன்ஸ் வைத்திருக்காதவர்களிடம் வசூல் செய்த தொகையே 18000 கோடிகளுக்கு மேல் காணாமல் போனது/ வராக்கடன் போனது அதை விட குறைவு தானே மக்களே. ATM மெஷினை 5 தடவைக்கு மேல் பயன் படுத்தினால் வசூல், நினைத்தாலே வயிறு பற்றி எரிகிறதே
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
09-செப்-201913:21:38 IST Report Abuse
RM Though,Within the last three months it happened BJP ,will blame only congress!They are100 pure gold.Those who support them will understand soon.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X