ஐ.நா., கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம்; பாக்., சதியை முறியடிக்க திட்டம்

Updated : செப் 10, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (5+ 33)
Advertisement
ஐ.நா, பாக்., சதி, முறியடிக்க, காஷ்மீர் , ஆதரவு, அஜித் தோவல், கட்டுப்பாடுகள்

புதுடில்லி : ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப, பாகிஸ்தான் முயன்றால், அதை முறியடிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு, நம் அண்டை நாடான, பாக்., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூட்டம், இன்று துவங்கி, 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. கூட்டத்தில், ஜம்மு - காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக, பிரச்னை எழுப்ப, பாக்., திட்டமிட்டு உள்ளது. அதை முறியடிக்கும் வியூகத்தை, மத்திய அரசு வகுத்துள்ளது.

இது குறித்து, வெளியுறவு துறை உயரதிகாரிகள் கூறியதாவது: ஐரோப்பிய நாடான, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் நடக்கும், ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தான் தரப்பில், வெளியுறவு அமைச்சர், ஷா மஹ்மூத் குரேஷி பங்கேற்கிறார். இன்று முதல், 12ம் தேதி வரை, அவர் ஜெனிவாவில் தங்கியிருக்க உள்ளார்.


வாய்ப்புகள்


இந்தக் கூட்டத் தொடரில், ஜம்மு - காஷ்மீர் பிரச்னையை எழுப்ப, பாக்., குக்கு இரண்டு விதமான வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வலியுறுத்தலாம்; மற்றொன்று, தீர்மானம் நிறைவேற்ற கோரலாம். இரண்டிலும் ஓட்டெடுப்பு நடத்தப்படும். தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டுமானால், வரும், 19ம் தேதிக்குள், கவுன்சில் தலைவருக்கு, பாக்., கடிதம் கொடுக்க வேண்டும். அதனால், இந்தப் பிரச்னையை, பாக்., எழுப்பினால், அதை முறியடிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.

காஷ்மீர் விவகாரத்தை, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாக்., எழுப்பியது. ஆனால், பாக்., முயற்சிக்கு ஆதரவு கிடைக்கவில்லை. இதைத் தவிர, பல்வேறு நாடுகளும், நம் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. ஐ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், வெளியுறவுத் துறையில் கிழக்கு பிராந்தியங்களுக்கான செயலர், விஜய் தாக்குர் சிங், பாகிஸ்தானுக்கான இந்தியத் துாதர் அஜய் பசாரியா உள்ளிட்ட அதிகாரிகள், இந்தியத் தரப்பில் பங்கேற்க உள்ளனர்.

ஐ.நா., மனித உரிமை கவுன்சிலில் உள்ள, 47 நாடுகளுடனும், வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கர் தொடர்பு கொண்டு வருகிறார். பல நாடுகளுக்கு நேரடியாகச் சென்று, நம் நிலையை கூறி வருகிறார். சில நாடுகளின் தலைவர்களுடன், தொலைபேசியில் பேசியுள்ளார்.


வன்முறை இல்லை


இவ்வாறு ஒரு பக்கம், மற்ற நாடுகளின் ஆதரவை பெற்று வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் நிலைமையை, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், அஜித் தோவல் கவனித்து வருகிறார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு, ஒரு மாதமாகி உள்ள நிலையில், அங்கு வன்முறையால், ஒருவர் கூட பலியாகவில்லை. சில கட்டுப்பாடுகள் இருந்தாலும், பொதுவாக, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கில் அமைதி நிலவுகிறது.

அரசியல் ரீதியில் அங்குள்ள பிரச்னைகளை, உள்துறை அமைச்சர், அமித் ஷா நேரடியாக கவனிக்கிறார். இவ்வாறு பல்வேறு முனைகளில், பாக்., சதி திட்டத்தை முறியடிக்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (5+ 33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
09-செப்-201910:36:34 IST Report Abuse
தமிழ் மைந்தன் பாகிஸ்தான் திட்டம் தோல்வி - தமிழக ஊழல்கம்பெனி இயக்குநர் அதிர்ச்சி
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201905:41:10 IST Report Abuse
Pannadai Pandian நன்றி கெட்ட காஷ்மீரிகள் உருப்படணும்னா மத வெறி பிடித்து அலையாமல், நேர் வழியில் செல்ல முயற்சி செய்ய வேண்டும். இளைஞர்களே…..உங்களை கல்வி நிலையங்களுக்கு செல்ல நாங்கள் கூறுகிறோம் படித்து முன்னேறுங்கள் என்று கூறுகிறோம். உங்களை படிப்பை விட்டுவிட்டு கல்லெறிய சொல்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். ஒரு 500 போலி நாட்டுக்காக உங்கள் வாழ்வை இழக்க வேண்டுமா ??? சிந்தியுங்கள். இந்திய அரசு உங்களுக்கு கல்வி, சுகாதாரம், உணவு, உடை, வேலை வாய்ப்புகள் தர தயாராக உள்ளது. அதனை பயன் படுத்தி கொள்ளுங்கள். இனி ஜம்முவும் லடாக்கும் நல் வழியில் செல்லும். அங்கிருப்பவர்களுக்கு மதம் பிடிக்க வில்லை. காஷ்மீர் வேலியில் உள்ளவர்களை வேப்பிலை அடித்து அவர்களுக்குள் இருக்கும் சாத்தானை விரட்ட வேண்டும். அப்போதுதான் இவர்கள் உறுப்படுவார்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
09-செப்-201909:15:08 IST Report Abuse
Pannadai Pandian......நோட்டுக்காக…......
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201904:12:21 IST Report Abuse
J.V. Iyer வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷிக்கு நூறு ருபாய் லஞ்சம் கொடுங்கள். தன்நாட்டையே விலை பேசுவான்.
Rate this:
Share this comment
Watcha Mohideen - Sydney,ஆஸ்திரேலியா
09-செப்-201918:47:19 IST Report Abuse
Watcha Mohideenகொடுத்து இருக்கலாமே...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X