பொது செய்தி

தமிழ்நாடு

தமிழக, கேரளா முதல்வர்கள் 26ம் தேதி பேச்சு; நீர் பங்கீடு குறித்து பேச ஏற்பாடு

Updated : செப் 10, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (4)
Advertisement
தமிழகம், கேரளா, முதல்வர்கள், 26ல் பேச்சு

கோவை: தமிழகம் - கேரளா இடையிலான நதி நீர் பங்கீடு குறித்து, இரு மாநில முதல்வர்களும், வரும், 26ம் தேதி நேரில் பேச்சு நடத்துகின்றனர்.

தமிழகம், கேரளா இடையே, காவிரி, முல்லை பெரியாறு, சிறுவாணி, பரம்பிக்குளம் ஆழியாறு, நெய்யாறு, பாண்டியாறு நீர் பங்கீடு பிரச்னைகள் நீண்ட காலமாக உள்ளன.இந்தாண்டில், சிறுவாணி அணை நீர்மட்டம் தொடர்பாக, புதிய பிரச்னை ஒன்றை, கேரளா உருவாக்கியுள்ளது. அணை நீர்மட்டம், 50 அடி. மழைக் காலத்தில் அணை நிரம்பினால், கோவை மாநகரில் குடிநீர் வினியோகத்துக்கு சிக்கல் எழாது.

ஆனால், கொள்கை முடிவை காரணம் காட்டி, கேரள நீர்ப்பாசனத் துறையினர், சிறுவாணி அணை முழுவதுமாக நிரம்ப விடாமல் செய்து வருகின்றனர். சமீபத்தில், கன மழை பெய்தும், சிறுவாணி அணை நீர்மட்டம், 42 அடிக்கு மேல் அதிகரிக்காத நிலையே உள்ளது.இந்நிலையில், கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கிருஷ்ணன் குட்டி, நேற்று கோவை வந்தார். அவரை, தமிழக துணை சபாநாயகர் ஜெயராமன் சந்தித்து பேசினார்.

பின், கிருஷ்ணன் குட்டி கூறியதாவது:சிறுவாணி அணையில், நீர்மட்டம் குறைக்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. தமிழகம், கேரளா இடையிலான நீர் பங்கீடு பிரச்னை குறித்து, 26ம் தேதி, இரு மாநில முதல்வர்களும் பேசி தீர்வு காண்பர்.பரம்பிக்குளம் ஆழியாறு, பாண்டியாறு, சிறுவாணி, காவிரி, முல்லை பெரியாறு என, இரு மாநிலங்களுக்கு இடையே, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இவை அனைத்துக்கும், இரு முதல்வர்களும் தீர்வு ஏற்படுத்துவர். இவ்வாறு, அவர் கூறினார்.

துணை சபாநாயகர், ஜெயராமன் கூறுகையில், ''கேரள அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, சித்துார் தொகுதியைச் சேர்ந்தவர். என் தொகுதிக்கு, பக்கத்து தொகுதி என்பதால், சந்திக்க வந்தேன்,'' என்றார்.வரும், 26ல், முதல்வர், இ.பி.எஸ்., திருவனந்தபுரம் சென்று, கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்க உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201922:13:55 IST Report Abuse
ஆப்பு கேரள்க் கழிவுகளை தமிழ்நாட்டில் கொட்டக் கூடாதுன்னு சொல்லிட்டு வாங்க.
Rate this:
Share this comment
Cancel
pattikkaattaan - Muscat,ஓமன்
09-செப்-201909:51:56 IST Report Abuse
pattikkaattaan கோவையின் குடிநீர் ஆதாரமாக திகழ்வது சிறுவாணி அணை. அதில் முழுமையாக நீரை தேக்காமல் வீணடிப்பது அடாவடித்தனம் .. தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் .. இந்த நிலையில் கோவைக்கு எப்படி 24 மணிநேரமும் தண்ணீர் தரப்போகிறார்கள் என்று தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
09-செப்-201907:20:37 IST Report Abuse
Mani . V "மிஸ்டர் பினராயி, நான் கோட் - சூட்டோடதான் மீட்டிங்குக்கு வருவேன். ஓக்கேயா?"
Rate this:
Share this comment
Rajesh - Chennai,இந்தியா
11-செப்-201900:57:00 IST Report Abuse
Rajeshநீங்கள் எப்படி சிங்கப்பூரில் நமது பாரம்பரிய கலாச்சார உடையான வேஷ்டி சட்டை தான் உடுத்துகிறீர்களா சகோ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X