சுவிஸ் வங்கியில் கறுப்பு பணம் பதுக்கியோர் பட்டியல் வெளியானது

Updated : செப் 09, 2019 | Added : செப் 08, 2019 | கருத்துகள் (83)
Share
Advertisement
புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல் பட்டியலை அந்த நாட்டு அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து தங்கள் வங்கி கணக்கை முடித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது. கறுப்பு பணம் ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள
கறுப்பு பணம், சுவிஸ் வங்கி, பதுக்கியோர், பட்டியல், வெளியானது, பணப் பரிமாற்றம்

புதுடில்லி : சுவிட்சர்லாந்து வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் தொடர்பான முதல் பட்டியலை அந்த நாட்டு அரசு மத்திய அரசிடம் அளித்துள்ளது. இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களில் பெரும்பாலானோர் மத்திய அரசின் நடவடிக்கைக்கு பயந்து தங்கள் வங்கி கணக்கை முடித்துள்ள தகவல் தெரிய வந்துள்ளது.


கறுப்பு பணம்


ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகள் கறுப்பு பணத்தை பதுக்குவோரின் சொர்க்கமாக விளங்குகின்றன. இந்த வங்கிகளில் கணக்கு துவங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் எதுவும் பின்பற்றப் படுவது இல்லை. அதனால் கறுப்பு பண முதலைகள் ஏதாவது ஒரு அடையாளத்தின் அடிப்படையில் கணக்கு துவங்கி தங்கள் சொந்த நாட்டில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக இந்த வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்குவது வழக்கம். நம் நாட்டைச் சேர்ந்த ஏராளமான தொழில் அதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் சுவிஸ் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு பொறுப்பேற்றதும் இந்த கறுப்பு பணத்தை மீட்கவும் பதுக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

நேரடி வரிகள் வாரியத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சுவிட்சர்லாந்துக்கு சென்று இது குறித்து ஆலோசனை நடத்தினர். அதேபோல் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அதிகாரிகளும் நம் நாட்டுக்கு வந்து ஆலோசனை நடத்தினர். இதன் அடிப்படையில் வங்கி கணக்கு விபரங்களை பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இதன்படி வங்கி கணக்கு தகவல்களை தானாகவே பரிமாறிக் கொள்ளும் நடைமுறை இந்த மாதத்திலிருந்து அமலுக்கு வந்தது. சுவிஸ் அதிகாரிகள் தங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் அடங்கிய விபரங்களை மத்திய அரசிடம் சமீபத்தில் அளித்தனர்.

வங்கி கணக்கு எண், கணக்கில் இருக்கும் நிலுவை தொகை, எங்கிருந்து பணம் வருகிறது என்பது போன்ற விபரங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த விபரங்களின் ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்றும் ஒப்பந்தம் உள்ளது. சுவிஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்த விபரங்களில் அவர்கள் வங்கிகளில் பயன்படுத்தி வரும் பெயர், முகவரி, பிறந்தநாள், வரி செலுத்தும் அடையாள எண் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அத்துடன் அவர்கள் சுவிஸ் நாட்டில் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்ற விபரமும் இடம் பெற்றிருக்கும்.

தற்போதுள்ள ஒப்பந்தப்படி சுவிஸ்நாட்டு வங்கியில் ஒரு இந்தியர் கணக்கு வைத்திருந்தால் அவரது கணக்கு விபரங்கள் சுவிஸ்நாட்டு அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்; அது முழுமையாக இந்திய வரித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுவிடும். அதன்படி வரி ஏய்ப்பவர்கள் மீது இந்திய வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முடியும்.

தற்போது அனுப்பப்பட்டுள்ள கணக்கு விபரங்கள் 2018ம் ஆண்டு வரையிலானவை. 2018ல் ஒரு முறை வங்கிக் கணக்கை பயன் படுத்தி இருந்தாலும் இதுவரை அந்த கணக்குக்கு எங்கிருந்து பணம் வந்தது; அந்த கணக்கில் இருந்து பணம் எங்கு சென்றது என்ற முழு விபரமும் திரட்டப்பட்டு நம் அதிகாரிகளுக்கு வழங்கப்படும். இது குறித்து அதிகாரிகள் வட்டாரங்கள் கூறியதாவது: சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பண பதுக்குவோருக்கு எதிராக சர்வதேச அளவில் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட பின் இந்த ரகசிய கணக்குகளில் இருந்து சமீப ஆண்டுகளில் பெரும் தொகை வெளியேறியுள்ளது. ஏராளமானோர் வங்கிக் கணக்குகளை அவசரம் அவசரமாக முடித்துக் கொண்டுள்ளனர். இவர்களில் இந்தியர்கள் அதிக அளவில் உள்ளனர்.


நடவடிக்கை


ஆனாலும் இவர்களது பணப் பரிமாற்றம், டிபாசிட், முதலீடு தொடர்பான எல்லா விபரங்களும் உள்ளன. இந்த விபரங்களை வைத்து கணக்கில் வராத சொத்துக்களை இவர்கள் வைத்துள்ளனரா என்பதை அறிய முடிவதுடன் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரவும் முடியும். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்தியர்களில் பெரும்பாலானோர் தற்போது இந்தியாவில் வசிக்கவில்லை. தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அமெரிக்கா, பிரிட்டன், தென் அமெரிக்கா, ஆப்ரிக்க நாடுகளிலும் இவர்கள் வசிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (83)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
15-செப்-201901:49:29 IST Report Abuse
Aarkay இந்த அளவுக்குக்கூட காங்கிரஸ் ஆட்சியில் நடக்கவில்லை. பட்டியலில் உள்ள நபர்களிடம் விவரங்கள் இனி கேட்கப்படும். என்னவோ, காங்கிரஸ் ஆட்சியும், திமுக, அதிமுக ஆட்சிகளும், தங்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் தினசரி மக்களிடம் தெரிவித்துவிட்டு, அவர்கள் அனுமதியுடனேயே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுத்து போல, வீராவேசமாக கேள்விகள் கேட்கிறார்கள் கூலிக்கு கருத்தெழுதும் கூட்டம்
Rate this:
Cancel
Ramaswami Sampath - mumbai,இந்தியா
10-செப்-201916:35:04 IST Report Abuse
Ramaswami Sampath லிஸ்டை ஏன் செய்த்தித்தாளில் போடவில்லை.இதில் இருந்தே தெரியவில்லையா இது திருட்டு வேலை என்று?
Rate this:
Cancel
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
10-செப்-201908:50:31 IST Report Abuse
Sam என்னப்பா சும்மா கதையா இருக்கு ஆளு எங்கப்பா? இதுவும் ப சிதம்பரத்தின் குற்ற பத்திரிகைமாதித்தனா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X