பொது செய்தி

இந்தியா

காஷ்மீரில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள்

Updated : செப் 10, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (7)
Advertisement
காஷ்மீரில், மீண்டும், கடும், கட்டுப்பாடுகள்

ஸ்ரீநகர் : காஷ்மீரின் பல பகுதிகளில் மீண்டும், ஊரடங்கு உத்தரவு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து, கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. நிலைமை சீரடைந்ததால், பல இடங்களில் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன. அதே நேரத்தில், காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல இடங்களில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஸ்ரீநகர் உட்பட காஷ்மீரின் பல பகுதிகளில், நேற்று மீண்டும் ஊரடங்கு உத்தரவு போன்ற கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. முக்கிய சாலைகளில், முள்வேலி தடுப்புகள் போடப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். அவசர மருத்துவ வசதி தேவைப்படுவோர் தவிர, மற்றவர்கள் இந்த பகுதிகளில் செல்ல அனுமதிக்கப்படவில்லை; இதற்கான காரணமும் தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், முஸ்லிம்கள் அனுசரிக்கும் முஹரம் வருவதால், அதிகமானோர் கூடுவதை தடுக்கவும், அவ்வாறு அதிகமானோர் கூடுவதால், வன்முறை ஏற்படுவதை தடுக்கவும், இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், காஷ்மீரில் தொடர்ந்து இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்திலுள்ள, சுந்தர்பானி, நவ்ஷோரா பகுதிகளில், எல்லையைத் தாண்டி, பாக்., ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. தொடர்ந்து துப்பாக்கிகளால் சுட்டும், குண்டுகள் வீசியும், பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், அங்கு பதற்றம் நிலவுகிறது.


பண்டிட்கள் ஆர்ப்பாட்டம்

ஜம்மு - காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, ஒருதலைபட்சமாக செய்தி வெளியிடுவதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, 'வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகையை கண்டித்து, வாஷிங்டனில், காஷ்மீரி பண்டிட்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக, போராட்டக்காரர்கள் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது தொடர்பாக, வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில், தொடர்ந்து, ஒருதலைபட்சமாக செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. காஷ்மீரைச் சேர்ந்த, காஷ்மீரி பண்டிட்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள் குறித்தோ, அதனால் வெளியேற வேண்டிய நிலை குறித்தோ, ஒரு வரிகூட, அந்த செய்திகளில் இடம்பெறவில்லை.

மாநிலத்தைச் சேர்ந்த, சிறுபான்மையினர் மீது நடந்து வந்த தாக்குதல்கள் குறித்தும் கூறப்படவில்லை. இதைக் கண்டித்து, அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் உள்ள காஷ்மீரி பண்டிட்கள் இணைந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இது தொடர்பாக, பத்திரிகைக்கு கடிதம் கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த நிலையில், இதற்கு போட்டியாக, அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் இணைந்து, அதே பகுதியில் அமைதி பேரணியை நடத்தினர். அதேபோல், அமெரிக்க வாழ் முஸ்லிம்கள், இந்திய அரசை எதிர்த்து, இந்திய துாதரகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201922:12:45 IST Report Abuse
ஆப்பு இதுதான் புதிய சாதாரண நிலைமை.
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
09-செப்-201919:56:17 IST Report Abuse
Sampath Kumar இதை தான் நான் பல முறை பதிவு செய்தேன் ??
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
09-செப்-201910:29:59 IST Report Abuse
Anand //அமெரிக்க வாழ் பாகிஸ்தானியர்கள் மற்றும் பிரிவினைவாதிகள் இணைந்து, அதே பகுதியில் அமைதி பேரணியை நடத்தினர்// இப்படித்தான் ஆரம்பிப்பார்கள், பிறகு லேசாக கல்வீச்சு தொடங்கும், மெல்ல மெல்ல கடைகளை சூறையாடுவர், கூட்டத்தில் ஒரு சிலர் துப்பாக்கியால் பொதுமக்களை கொல்வர், ராணுவம் அவர்களை திருப்பி தாக்கினால், ஐயோ சிறுபான்மையினர் மீது தாக்குதல் என ஒப்பாரி வைத்து அங்கங்கே வன்முறைகள் ஏற்படுத்துவர், பிறகு எவனும் நிம்மதியாக வாழமுடியாது, அந்நாட்டை அழிக்கும் வரை தொடரும், இதற்கு பெயர்தான் அமைதி மார்க்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X