பொது செய்தி

இந்தியா

இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு சிறுவன் நெகிழ்ச்சி கடிதம்

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி : சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்க முடியாமல் போனதற்காக மனம் தளர்ந்து விட வேண்டாம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 10 வயது சிறுவன் ஒருவன், மனதை நெகிழ வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளான்.விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்ததும், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரோ

புதுடில்லி : சந்திரயான் 2 லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்க முடியாமல் போனதற்காக மனம் தளர்ந்து விட வேண்டாம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 10 வயது சிறுவன் ஒருவன், மனதை நெகிழ வைக்கும் விதத்தில் கடிதம் ஒன்றை எழுதி உள்ளான்.



latest tamil news


விக்ரம் லேண்டரிடம் இருந்து சிக்னல் கிடைக்கவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்ததும், நாடு முழுவதிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டு வருகின்றனர். பல உணர்ச்சிகரமான பதிவுகள் இளைய தலைமுறைக்கு இஸ்ரோ விஞ்ஞானிகள் எந்த அளவிற்கு வழிகாட்டியாக உள்ளனர் என்பதை காட்டுவதாக உள்ளன.

இதில் 10 வயது சிறுவன் ஆஞ்சநேய கவுல், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது கைப்பட எழுதிய உணர்ச்சிபூர்வமான கடிதத்தை அவரது தாய் ஜோதி கவுல் ஆன்லைனில் வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்,
"ஒரு நன்றியுள்ள இந்தியனின் உணர்வுகள்...லேண்டர் விக்ரம் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்காமல் போனதற்காக மனம் தளர வேண்டாம். அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை ஏவுவதில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்த வேண்டும்.


latest tamil news


ஆர்பிட்டார் இன்னும் செயல்பாட்டில் உள்ளதை நாம் மறந்து விட வேண்டாம். விரைவில் அதன் மூலம் நிலவில் இருந்து புகைப்படங்களை பெறலாம். விக்ரம் நிஜமாக நிலவில் தரையிறங்கி இருந்தால் பிரக்யான் ரோவர் இப்போது வரை உயிர்ப்புடன் உள்ளது.அதனால் அதிலிருந்து கிராபிக்கல் விபரங்களை பெற தயாராக இருப்போம்.
அப்படி நடந்து விட்டால் வெற்றி நமது கைகளிலேயே உள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகள் தான் அடுத்த தலைமுறையின் உத்வேகம். இஸ்ரோ, நீங்கள் எங்களின் பெருமை. நன்றியுள்ள தேசத்தின் இதயப்பூர்வமான நன்றிகள் ". இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளான்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
09-செப்-201922:01:57 IST Report Abuse
ஆப்பு அதிகப் பிரசங்கம்.
Rate this:
Cancel
LAX - Trichy,இந்தியா
09-செப்-201918:06:13 IST Report Abuse
LAX Lion Dr Sekar.. ரொம்ப.. ரொம்ப.. ரொம்ப.. ரொம்பவே.. கரெக்ட்டா.. சொன்னீங்க ஜி.. உண்மை.. உண்மை..
Rate this:
Cancel
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
09-செப்-201915:57:59 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் இவ்ளோ செலவு பண்ணி போட்டோ எடுக்கத்தான் அனுப்பினங்களா?
Rate this:
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்) - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-செப்-201920:37:59 IST Report Abuse
Janarthanan (டுமிழன் ஏமாந்து விட்டான்)இஷாக், சவுதிக்கு எதற்கு போனியோ அந்த வேலையை ஒழுங்கா பாரு ???? மதரசாவில் படித்தாயா ??? இவ்வளவு முட்டாளா இருக்க ????...
Rate this:
கேள்விக்கென்ன பதில் - Thiruvaiyaru,இந்தியா
17-செப்-201901:53:31 IST Report Abuse
கேள்விக்கென்ன பதில் குடிக்க கூழ் கொப்புளிக்க பன்னீர்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X