பொது செய்தி

இந்தியா

பொருளாதார சரிவிற்கு சிதம்பரமே காரணம்

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (155)
Share
Advertisement
அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார சரிவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.உ.பி.,யின் அலகாபாத்தை சேர்ந்த பைஜன் தாஸ் (55), விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் செப்.,6 ம் தேதி ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். செப்.,8ம்

அலகாபாத்: நாட்டின் தற்போதைய பொருளாதார சரிவிற்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரமே காரணம் என ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவர், பிரதமர் மோடிக்கு எழுதி உள்ள தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.latest tamil newsஉ.பி.,யின் அலகாபாத்தை சேர்ந்த பைஜன் தாஸ் (55), விமானப்படை அதிகாரியாக இருந்து ஓய்வுபெற்றவர். இவர் செப்.,6 ம் தேதி ஓட்டல் ஒன்றில் அறை எடுத்து தங்கி உள்ளார். செப்.,8ம் தேதி நாள் முழுவதும் அறையை வீட்டு பைஜன் வெளியே வராததால், ஓட்டல் ஊழியர் அளித்த தகவலின் பேரில் கதவை உடைத்து பார்த்துள்ளனர். அப்போது பைஜன், பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பிரதமர் மோடிக்கு 5 பக்க தற்கொலை கடிதம் எழுதி வைத்துள்ள அவர், அத்துடன் தனது இறுதி சடங்குகளுக்காகவும், அறை வாடகைக்காகவும் ரூ.2000 வைத்துள்ளார். தனது நிதி நிலை மோசமாக உள்ளதால் தன்னால் அதற்கு மேல் பணம் தர இயலவில்லை எனவும் பைஜன் தனது தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil news


பைஜன் , பிரதமருக்கு எழுதிய தற்கொலை கடிதத்தில், "நாட்டின் தற்போதைய பொருளாதார மந்த நிலைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தான் காரணம். மோடி அரசு தான் பொருளாதார சரிவுக்கு காரணம் என யாராலும் கூற முடியாது. முந்தைய காங்., ஆட்சியின் போது நடந்த ஊழல்கள், தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றால் ஓய்விற்கு பிறகு என்னால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தவறான நிதி மேலாண்மை என்பது உடனடியாக வந்தது கிடையாது. இது கடந்த சில ஆண்டுகளால் நடந்த தவறான நடவடிக்கை.

மோடி அரசை மட்டும் பொருளாதார சரிவிற்கு காரணமாக குற்றம்சாட்டுவது தவறு. பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி அமல்படுத்தியதால் ஏற்பட்டது தற்காலிகமான பாதிப்பு. பொருளாதார சரிவிற்கு இதை காரணமாக கூற முடியாது." இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரம் கைது தொடர்பான சில குறிப்புக்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


latest tamil newsஅத்துடன் தனது மகனின் கனவை நிறைவேற்றும்படி பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள பைஜன், தனது இறுதி சடங்குகளுக்கு தனது குடும்பத்தினரை அழைக்க வேண்டாம் என அலகாபாத் நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளார். தனது உடலை மகன் பார்ப்பதை தான் விரும்பவில்லை எனவும், அலகாபாத்திலேயே தனது உடலை எரித்து விடும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (155)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amal Anandan - chennai,இந்தியா
15-செப்-201909:35:19 IST Report Abuse
Amal Anandan இந்த விமானப்படை அதிகாரி காங்கிரசின் கைக்கூலி. உலகமே இந்தியாவின் இப்போதைய பொருளாதார பிரச்சினைக்கு நேருவே காரணம் என்று புரிந்து சொல்லிக்கொண்டு இருக்கும்போது இவர் இடையே சிதம்பரம் காரணம் என்று சொல்கிறார். நேரு அப்போதே 2019 ல் இப்படி ஒரு பிரச்சினை வரும் என்று தெரிந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் அவருக்கு அவ்வளவு நிதி அறிவு இல்லை அதுதான் இப்போது இருக்கும் பிரச்சினைக்கு காரணம்.
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
15-செப்-201909:31:52 IST Report Abuse
Amal Anandan ஒரு விமானப்படை அதிகாரி கடிதம் எழுதி அதன் மூலம் பொருளாதார பிரச்சினைக்கு யார் காரணம்னு தெரிஞ்சுக்குற அளவிற்குதான் பிரதமரும் நிதி மந்திரியும் இருக்கிறார்கள் என்று இந்த கட்டுரை சொல்கிறது. அடப்பாவமே.
Rate this:
Cancel
B.s. Pillai - MUMBAI,இந்தியா
15-செப்-201907:03:16 IST Report Abuse
B.s. Pillai I AM NOT AN ECONOMIST.But I analyse the reasons and the happenings during UPA and BJP governments. UPA government supported scams and brought about heavy loss to the Government. In Economic times I read one comment saying P.C. was representing Enron company as advocate which claimed compensation of 30000 crore from Indian Government. Mr.Harish Salvi was representing India in the International court. When P.C. became F.M. he could not continue his advocate work .But he replaced Mr.Harish Salvi by ,you know who, a Pakistani advocate to represent India, the Pak advocate who was appearing in Jadhav case in International court. Ultimately Enron won and India paid 30K crore $$$ . This is the contribution of P.C. to Indian Economy.Mr.Harish Salvi won Jadhav case in the International court and so his death sentence is kept in abeyance and India was permitted to arrange High commission meeting with him. Another big stabbing on the back of Indian Economy is Chidambaram introduction of Participatory Note ( P.N.) to bring in black money back into India without paying Income tax and the I.T. Penalty by just showing a piece of paper from Mauritius .No Aadhar, No PAN or address proof or no any document or stamp paper or any document or affidavit, just a piece of paper from Mauritius company. Can I or you a demat a/c without any document ? But with the help of this P.N., you can invest in Shares and the beauty is that you can take back the invested money to Mauritius as white money in $$$$$$ when the share price goes up after some time. This share price increase and decrease in $$$ value at the times of bringing in and taking out the converted black money was also manipulated by the F.M. Mr.P.Chidambaram. And many more financial adventures by this intelligent crook. Mr.Modi can not bring back black money and give 10Lakhs in each Indian bank a/c. Mr.P. Chidambaram has check mated him long back . Now tell me what we or Mr.Modi should do to P.C. ?While occupying India, the British hanged Indian freedom fighters saying that they were traitors.Now tell me what should be the punishment to be given to P.C. or any Minister who are corrupt and brought about loss to the Economy ? It is not, definitely, the demonetisation or introduction of GST which is responsible for the present Economic stagnation.Demonetisation stopped fake currency supply in J&K and saved our Army soldiers from stone throw killings, the maoist bombing, and black money hoarders. The public also suffered to some extent. But it saved more no of soldier's life.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X