பொது செய்தி

இந்தியா

பூமியை காப்பாற்ற வேண்டும்: மோடி

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (38)
Advertisement

புதுடில்லி : பூமியை காப்பாற்ற தட்பவெப்ப நிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தும் பணியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.


தட்பவெப்பநிலை மாறுபாடு தொடர்பான ஐ.நா.,வின் 14 வது மாநாடு இந்தியாவின் நொய்டாவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தட்பவெப்பநிலை மாறுபாடு மற்றும் பாலைவனமாக்கலை தடுக்க இந்தியா ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இரண்டு ஆண்டு திட்டமாக மேற்கொண்டு வருகிறது. தட்பவெப்பநிலையும், சுற்றுச்சூழலும் நிலம் மற்றும் பல்லுயிர்களை பாதிக்கும் மிக முக்கியமானவை. தட்பவெப்பநிலை மாறுபாட்டால் ஏற்படும் பாதிப்பை உலகமே சந்தித்து வருகிறது. பாலைவனமாக்கலால் ஏற்பட்ட பாதிப்பை 3 ல் இரு பங்கு நாடுகள் சந்தித்து வருகின்றன.

தட்பவெப்பநிலை மாறுபாட்டால் கடல்மட்டம் உயர்வு, கடல் சீற்றம், பருவம் தவறிய மழை, புயல், புழுதி புயல் ஆகியன ஏற்படுகின்றன. நிலம் பாழடைவதை பற்றி பேசும் போது தண்ணீர் தட்டுப்பாடு பற்றியும் பேச வேண்டும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து வருவதால் மண்ணில் உள்ள ஈரப்பதம் குறைந்து வருகிறது.
தண்ணீர் பிரச்னைக்கும், நில மாசுபாடு பிரச்னைக்கும் முடிவு கட்ட இந்தியாவில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே உலகம் முழுவதும் அந்த நிலை வரும் என நம்புகிறேன். பூமியை காப்பாற்ற தட்பவெப்ப நிலை மாறுபாட்டை கட்டுப்படுத்தும் பணியில் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.

இந்தியாவில் மரம் நடுதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. 2015-17 ஆண்டுகளில் 0.8 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் மரங்கள் நடப்பட்டுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த நிலத்தின் தரத்தையும் உயர்த்துவதை நோக்கமாக கொண்டு இந்தியா செல்பட வேண்டும். 2030 ம் ஆண்டிற்குள் 21 மில்லியன் ஹெக்டர் முதல் 26 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பில் நிலங்களின் தரம் மேம்படுத்தப்படும். இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sam - Dallas,யூ.எஸ்.ஏ
10-செப்-201905:20:07 IST Report Abuse
Sam நீ உலகத்தை காப்பாத்து அடுத்த தேர்தலில் உன் பெயர் பூமி புதல்வன் என்று அழைக்கப்படுவாய்
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-செப்-201921:18:54 IST Report Abuse
PANDA PANDI கஞ்சா தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
09-செப்-201921:03:58 IST Report Abuse
PANDA PANDI அய்யா இந்தியாக்குள்ள இருக்கிற எங்க கிராமத்தை முதலில் காப்பாற்றுங்கள். கஜபுயலால் சீரழிந்துவிட்டது. உலகத்தை அப்புறம் காப்பாற்றுங்கள்.
Rate this:
Share this comment
சீனு, கூடுவாஞ்சேரிகஜா புயல் பாதிப்பு தமிழகத்தில். அதனால் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைய தமிழனால் முடியாதா. மோடி தான் வர வேண்டுமா. அப்படி என்றால் தமிழகத்தில் உள்ள தமிழர்கள் டாஸ்மாக் சரக்கு அடிக்கத்தான் லாய்கா. இன்னும் எவ்வளவு நாட்கள் ஊரை ஏமாற்றுவீர்கள்....
Rate this:
Share this comment
rajan - erode,இந்தியா
10-செப்-201905:13:09 IST Report Abuse
rajanஓடோடி வருவேன் என்று ஒருவர் சொன்னது ஞாபகம் இருக்குதா...
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
10-செப்-201912:46:03 IST Report Abuse
தமிழ்வேல் சீனு, அப்போ நம்ம வரி காசெல்லாம் தமிழகத்துக்கே வச்சுக்குவோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X