கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

கஞ்சா ஆராய்ச்சியில் உ.பி., உத்தரகாண்ட் அரசு

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (15)

லக்னோ: கஞ்சா தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ள உத்திர பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது.


மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவுக்குள் உள்ள போதைப்பொருள் துறை, கஞ்சாவில் காணப்படும் இரண்டு தனித்துவமான இயற்கை சேர்மங்களான கன்னாபிடியோல் (சி.பி.டி.,) மற்றும் டெட்ரா ஹைட்ரோ கன்னாபினோல் (டி.எச்.சி.,) குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (ஆர் & டி) திட்டத்தை அனுமதித்துள்ளது. இதற்காக கஞ்சா செடிகளை லக்னோ (உ.பி.,) மற்றும் பண்ட்நகரில் (உத்தரகாண்ட்) உள்ள மத்திய மருத்துவ மற்றும் நறுமண தாவர நிறுவனத்தில் வளர்க்க இருக்கிறது.

இது தொடர்பாக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், மத்திய மருத்துவ மற்றும் நறுமன தாவர நிறுவனம் ஆகியவை கஞ்சாவின் இந்த இரண்டு சேர்மங்களில் உயரிய திரிபு நிலை மரபணுக்களை கண்டறிந்து அவற்றை லக்னோ மற்றும் பண்ட்நகரில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியை தொடங்க விரும்புகிறது. இதனால் கஞ்சா செடிகளை தங்கள் வயல்களில் வளர்க்க அனுமதிக்குமாறு கோரியுள்ளது.

குறைந்த டி.எச்.சி., உள்ளடக்கம் கொண்ட மருந்து வகைகளை மேம்படுத்துவதை இந்தியாவின் போதை மருந்து கொள்கை வலியுறுத்தியது. இது உயிரி மற்றும் நார்ச்சத்துக்கான மூலமாகும். மேலும் இதை கஞ்சா விதை எண்ணெய்யாக உற்பத்தி செய்யலாம், தொழில்துறை மற்றும் தோட்டக்கலை நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

அனைத்து மாநில அரசாங்கங்களுக்கும் அனுப்பப்பட்ட இந்த அறிக்கையை, நிதி அமைச்சகத்தின் இயக்குனர் (போதைப்பொருள் கட்டுப்பாடு) போதைப்பொருள் சார்பு குறித்த உலக சுகாதார அமைப்பு நிபுணர் குழு அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது. குறைந்த அளவிலான டி.எச்.சி., கஞ்சாவின் மருத்துவ பயன்பாட்டை உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச மரபுளில் கஞ்சா தொடர்பான பொருட்களின் கட்டுப்பாட்டு வரம்பில் மாற்றத்தை முன்மொழிந்துள்ளது.

சி.பி.டி.,யில் இருந்து கஞ்சா சணல் பிரித்தெடுக்கப்படுகிறது மற்றும் இது ஜெல், எண்ணெய் மற்றும் உணவு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது மருத்துவ பயன்பாட்டையும் கொண்டுள்ளது. மறுபுறம் டி.எச்.சி., கஞ்சாவில் உள்ள ஒரு அதிக உணர்வை தரும் மனோவியல் கலவை ஆகும்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X