சந்திரயான்-2யை பாராட்டிய பாக்., வீராங்கனை

Updated : செப் 09, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (10)
Advertisement

கராச்சி: பாகிஸ்தான் விண்வெளி வீராங்கனை நமீரா சலீம், சந்திரயான்-2 திட்டத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.


சந்திரயான்-2 திட்டத்தில் விக்ரம் லேண்டர் 95 சதவீதம் வெற்றி அடைந்தாலும், தகவல் தொடர்பு கிடைக்காமல் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் ஆர்பிட்டர் அனுப்பிய தெர்மல் புகைப்படம் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. இது நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தள்ளி இருப்பதாகவும் தகவல் தொடர்பை ஏற்படுத்த தொடர்ந்து முயற்சி நடப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறினர்.

இந்நிலையில் பாகிஸ்தானின் கராச்சி நகரிலிருந்து வெளியாகும் பத்திரிக்கையில், பாகிஸ்தானில் இருந்து விண்வெளிக்கு செல்ல முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள நமீரா சலீம் அளித்துள்ள பேட்டியில், விக்ரம் லேண்டரை நிலவின் தென் துருவப் பகுதியில் மெதுவாக இறங்கச் செய்யும் வரலாற்று சிறப்புமிக்க முயற்சிக்காக இந்தியா மற்றும் இஸ்ரோவிற்கு எனது பாராட்டுக்கள்.

சந்திரயான்-2 திட்டம் தெற்காசியாவின் மாபெரும் திட்டமாகும், இது சர்வதேச விண்வெளித்துறைக்கு பெருமை சேர்த்திருக்கிறது. விண்வெளித்துறையில் உலகத்தின் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. எந்த நாடு இதில் முன்னிலை வகிக்கிறது என்பது விஷயமல்ல. இவ்வாறு நமீரா சலீம் கூறினார்.

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா-பாக்., நாடுகளுக்கிடையே பிரச்சினை நடைபெறும் இந்த நேரத்தில், பாக்., விண்வெளி வீராங்கனை நமீரா சலீம் இந்தியாவின் சந்திரயான்-2 திட்டத்தை பாராட்டியது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

I thanks all for the praise from #media of #India #Pakistan general public #scientific community for my support of @isro @chandrayaan2

— Namira Salim (@namirasalim) September 8, 2019

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KSK - Coimbatore,இந்தியா
10-செப்-201911:58:38 IST Report Abuse
KSK உண்மையான அறிவியல் உணர்வுள்ள பரந்த மனப்பான்மையுடைய ஆராய்ச்சியாளர் இவர். மதங்கள், நாடுகள் கடந்த இவரது கருத்துக்கள் அதை தான் உணர்த்துகிறது. ஆனால் பாக்-இல் உள்ள அடிப்படைவாதிகளுக்கும், அரசியல் வாதிகளுக்கும் இவரை புரிந்து கொள்வது கடினம். "Science knows no country, because knowledge belongs to humanity, and is the torch which illuminates the world."Louis Pasteur.
Rate this:
Share this comment
Cancel
10-செப்-201902:32:27 IST Report Abuse
ருத்ரா உண்மையை பேசிய உங்களுக்கு ஒரு பிரச்சினையும் வராமல் இருக்க வேண்டும். வாழ்த்துக்கள் சகோதரி.
Rate this:
Share this comment
Cancel
முட்டாள் முல்லா - Macca,ஐக்கிய அரபு நாடுகள்
10-செப்-201901:36:08 IST Report Abuse
முட்டாள் முல்லா என்ன...அநியாயம்..நம்ப.. கொடி..பிறை மேலே... இரும்பு பொருள மோத உடுறான்.. இது..நம்பில் மார்க்கம் மேலே...ரெம்பே..ஹராம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X