பொது செய்தி

இந்தியா

ராஜினாமா குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு கட்டுப்பாடு

Updated : செப் 11, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (13)
Advertisement
ராஜினாமா, ஐ.ஏ.எஸ்., கட்டுப்பாடு , வரிப் பணம், அதிருப்தி

புதுடில்லி : ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலர் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்கேற்ப நினைத்ததும் பதவியை ராஜினாமா செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் அரசு சார்பில் அவர்களுக்கு செலவிடப்பட்ட மக்களின் வரிப் பணம் வீணாகிறது. இதையடுத்து அதிகாரிகள் தங்கள் இஷ்டத்துக்கு ராஜினாமா செய்வதை தடுக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை துவக்கியுள்ளது.

கஷிஷ் மிட்டல், கண்ணன், கோபிநாதன், சசிகாந்த், செந்தில் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சமீபத்தில் தங்கள் பதவியை திடீரென ராஜினாமா செய்தனர். காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அதிருப்தி தெரிவிக்கும் வகையில் பதவியை ராஜினாமா செய்வதாக இவர்களில் சிலர் அறிவித்தனர்.

அதிகாரிகளின் இந்த திடீர் ராஜினாமாவால் மத்திய அரசுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு அதிரடியை துவக்கி உள்ளது. இது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: தற்போது நம் நாட்டில் 4926 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 3511 பேர் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வின் மூலம் நேரடியாக தேர்வு செய்யப்படுகின்றனர். மீதமுள்ள 1415 பேர் பதவி உயர்வு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் சேருவதற்கு முன் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் விரிவான பயிற்சி அளிக்கப்படுகிறது. இவர்கள் முறையாக பயிற்சி பெறுவதற்காக மக்களின் வரிப் பணம் அதிக அளவில் செலவிடப்படுகிறது. இவர்கள் தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்காக பாதியிலேயே ராஜினாமா செய்து விட்டு போவதால் அரசு பணம் வீணாகிறது.

எனவே எதிர்காலத்தில் எந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியாவது பணியை பாதியிலேயே ராஜினாமா செய்தால் அவருக்கு பயிற்சி அளித்ததற்காக மத்திய அரசு சார்பில் செலவிடப்பட்ட பணம் முழுவதையும் அவர் திரும்ப செலுத்த வேண்டும் என்ற விதிமுறையை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-செப்-201921:50:24 IST Report Abuse
Nallavan Nallavan விஷநரிகள் கூட்டத்தோட பிளான் பக்காவா இருக்குறதுனால இதெல்லாம் நடக்குது ..... பயிற்சிக்கான செலவெல்லாம் ஒரு மேட்டரே இல்லை ............. ஒரு வருஷத்து சம்பளத்தை எடுத்து வெக்கச் சொன்னாலே போதும் ....... ராஜினாமா கடிதத்தைக் கிழிச்சுப் போட்டு சரண்டர் ஆயிருவானுங்க ..... ஆயிருவாளுக ......
Rate this:
Share this comment
Cancel
NewIndia_DigitalIndia - Rafale,பிரான்ஸ்
10-செப்-201921:37:41 IST Report Abuse
NewIndia_DigitalIndia இவங்களை மாதிரி எல்லோரும் வெள்ளைக்காரனுக்கு கால் அமுக்கி பதவி பெற்ற குணம் இருக்கும் என்று நினைத்து விட்டார்கள் .
Rate this:
Share this comment
Cancel
rammeshbabu - bangalore,இந்தியா
10-செப்-201909:53:30 IST Report Abuse
rammeshbabu அரசியல்வாதிகளுக்கும் இதே போல சட்டம் கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X