அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரயில்வேயில் தமிழ் தெரிந்தவர்கள் நியமனம் : எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Updated : செப் 11, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement
சென்னை : 'ரயில்வே பணிகளில், தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்' என, தமிழக, எம்.பி.,க்கள், ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர். சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில் நடக்கும், ரயில்வே திட்டப் பணிகள் குறித்து, எம்.பி.,க்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சென்னை, பூங்கா நகரில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், தெற்கு ரயில்வே பொது
ரயில்வே, எம்.பிக்கள், நியமனம், தமிழ், ஒருங்கிணைப்பாளர்கள், தீர்வு

சென்னை : 'ரயில்வே பணிகளில், தமிழ் தெரிந்தவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும்' என, தமிழக, எம்.பி.,க்கள், ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளனர்.

சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில் நடக்கும், ரயில்வே திட்டப் பணிகள் குறித்து, எம்.பி.,க்கள், அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், சென்னை, பூங்கா நகரில் உள்ள, தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்தது. அதில், தெற்கு ரயில்வே பொது மேலாளர், ராகுல் ஜெயின், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர், பி.மகேஷ், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர், யு.ஆர்.ராவ் மற்றும் டி.ஆர்.பாலு, திருநாவுக்கரசர் உட்பட, 26 எம்.பி,க்கள் பங்கேற்றனர்.

எம்.பி.,க்கள் அளித்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது: ரயில் நிலையங்களின், டிக்கெட் கவுன்டர்களில், தமிழ் தெரியாத, பிற மாநில ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனால், தமிழ் மட்டும் தெரிந்தவர்கள், அந்த ஊழியர்களுடன் பேசி, தகவல் பெறுவதில் சிரமப்படுகின்றனர்.

இதனால், தமிழக ரயில்வே பணிகளில், தமிழ் மொழி தெரிந்தவர்களை நியமிக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள், ரயில்வே தேர்வுகளை, தமிழில் எழுத அனுமதிக்க வேண்டும். மதுரை - துாத்துக்குடி இடையில் அமைக்கப்படும், இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட, பல ரயில்வே திட்டங்கள், மந்தகதியில் நடக்கின்றன. அனைத்து ரயில் திட்டங்களையும் விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு, மனுக்களில் கூறப்பட்டுள்ளன.


கூடுவாஞ்சேரி - ஆவடி


கூட்டத்திற்கு பின், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி, எம்.பி., - டி.ஆர்.பாலு கூறுகையில், ''ஆவடியில் இருந்து, ஸ்ரீபெரும்புதுார் வழியாக கூடுவாஞ்சேரிக்கு, புதிய ரயில் பாதை அமைக்க அனுமதி வழங்கப்பட்டும், பணி துவங்கவில்லை. உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்த பணிகளை விரைவாக துவக்க வேண்டும்,'' என்றார். தென் சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன் கூறுகையில், ''ஆதம்பாக்கம் - பரங்கிமலை இடையே, ரயில் பாதைக்கு, 500 மீட்டர் இடம் கையகப்படுத்தும் பணி தாமதமாகிறது. இதனால், 10 ஆண்டுகளுக்கு மேலாக, அந்த ரயில் பாதை செயல்பாட்டிற்கு வரவில்லை. அந்த பணியை முடித்து, விரைவாக ரயில் இயக்க வேண்டும்,'' என்றார்.


ஒருங்கிணைப்பாளர்கள் புதிதாக நியமனம்!


சென்னை ரயில்வே கோட்டத்திற்கு, வேலுார், எம்.பி., கதிர் ஆனந்த்; சேலம் கோட்டத்திற்கு, கோவை, எம்.பி., நடராஜன்; திருச்சி கோட்டத்திற்கு, ராஜ்யசபா, எம்.பி., சிவா; மதுரை கோட்டத்திற்கு, தென்காசி, எம்.பி., தனுஷ்குமார் ஆகியோரை, ஒருங்கிணைப்பாளர்களாக, தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.

எம்.பி.,க்கள், தங்கள் தொகுதியில் நடக்கும், ரயில்வே வளர்ச்சி பணிகள் குறித்து, ஒருங்கிணைப்பாளராக உள்ளவர்களிடம் தெரிவிக்கலாம். அவர்கள் அவற்றை, தெற்கு ரயில்வே பொது மேலாளரிடம் தெரிவித்து, விரைவில் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுப்பர்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
11-செப்-201908:23:36 IST Report Abuse
அம்பி ஐயர் இதர வெளி மாநிலங்களில் இருந்து இங்கு வந்து அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுவதைப் போல இங்குள்ள தமிழர்களால் அதுவும் இப்போதைய தமிழர்களால்... இளைஞர்களால் ஏன் வெளி மாநிலங்களுக்குச் சென்று பணிபுரிய முடியவில்லை...??? இதைத் தான் நான் கருத்தாக வைத்து எழுதியுள்ளேன்... இதற்குக் காரணம் யார்....??? திருட்டு திராவிடாள்ஸ் தவிர வேற யார்...??? இன்றைய இளைஞர்களுக்குப் பிழையில்லாமல் தமிழில் எழுதவும் படிக்கவுமே பெரும்பாலும் தெரியவில்லை.... ஆங்கிலமும் அரைகுறை.... ஹிந்தியோ கேட்கவே வேண்டாம்....?? பின் எப்படி முன்னேற முடியும்....???
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
11-செப்-201901:34:01 IST Report Abuse
Pugazh V இங்கே சில தமிழர்கள் மனநிலை பெரிதும் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.. அதாவது, "எந்த செய்தி வந்தாலும் அதில் தமிழர்களை அவமதித்து, கேவலப்படுத்தி எழுதுவது" என்கிற மனநிலையைத்தான் குறிப்பிட விழைகிறேன். இவர்கள் முதலில் அறிய வேண்டிய வை : 1. எல்லா மாநிலங்களிலும் மது அந்தந்த மாநில அரசுகளின் கடைகளில் விற்கப்படுகின்றன. 2. எல்லா மாநிலங்களிலும் இலவசங்கள் உண்டு.3. எல்லா மாநிலங்களிலும் ஊழல் குற்றச்சாட்டு களுக்கு ஆளான அரசியல் வாதிகள் எல்லா கட்சி களையும் சேர்ந்த வர்கள் / அரசு அலுவலர்கள்.உண்டு. 4. எல்லா மாநிலங்களிலும் எல்லா மதத்தினரும் உண்டு.5. எல்லா மாநிலங்களிலும் பாஜக அல்லாதவர்கள் உண்டு."// எனவே இனிமேல் தமிழர்கள் பற்றி அவதூறாக எழுதாதீர்கள். வேறு எந்த மொழியினரும் தமது சக மொழியாளனை இப்படி தூற்றி எழுதுவதில்லை.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201923:57:49 IST Report Abuse
Pugazh V கேரள ரஜான் ரஜான் என்பவருக்கு என்ன பிரச்சனை? அவன் இவன் னு எளுதினா, பெரிய பருப்பு ன்னு நெனப பா?? இன்னொரு த்தர்..RAC னா என்னன்னு தெரியாமலே தம்மம் போயிருக்காராம். RAC னா என்ன ன்னு ஸ்டேஷன் ல பிச்சை எடுக்க றவன் கிட்ட கேட்டிருக்கலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X