பொது செய்தி

இந்தியா

உஷார்! பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்

Updated : செப் 10, 2019 | Added : செப் 09, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி : குஜராத் மாநிலம் அருகே கடலில் ஆளில்லா படகுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 'தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்' என தென் மண்டல ராணுவ கமாண்டர் எச்சரித்துள்ளார். இதனால் தென் மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து
பயங்கரவாதிகள், உஷார், தாக்குதல், திட்டம், ராணுவம், பாக். அரசு, தீவிர கண்காணிப்பு


புதுடில்லி : குஜராத் மாநிலம் அருகே கடலில் ஆளில்லா படகுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாதிகள் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. 'தென் மாநிலங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்' என தென் மண்டல ராணுவ கமாண்டர் எச்சரித்துள்ளார். இதனால் தென் மாநிலங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.


latest tamil news
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த மாதம் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதற்கு நம் அண்டை நாடான பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு சர்வதேச அமைப்புகளில் பிரச்னை கொண்டு சென்றும் அதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. 'ஜம்மு - காஷ்மீர் பிரச்னை என்பது இந்தியாவின் உள்நாட்டு பிரச்னை; அதில் மற்ற நாடுகள் தலையிடுவதை ஏற்க முடியாது' என மத்திய அரசு கூறியது.

இதை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டதுடன் ஜம்மு - காஷ்மீரில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் பாக். அரசு எரிச்சலடைந்தது. ஜம்மு - காஷ்மீரில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதுடன் கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஒரு மாதமாக அங்கு எந்த ஒரு அசம்பாவித சம்பவங்களும் நடக்கவில்லை. இது பாக்.கின் கோபத்தை அதிகரிக்க வைத்தது. அதோடு எல்லையைத் தாண்டி தாக்குதல் நடத்தும் அதன் முயற்சிகள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் 'கடந்த மாதம் சுதந்திர தினத்தின்போது பாக். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என மத்திய அரசு எச்சரித்திருந்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இவ்வாறு அனைத்து பக்கங்களிலும் வேலி போடப்பட்டதால் பாக். அரசும், ராணுவமும் பயங்கரவாதிகளும் விரக்தியில் உள்ளனர்.

இந்நிலையில் குஜராத் மாநிலம் அருகே சர் கிரீக் எனப்படும் அரபிக் கடலில் இந்தியா, பாகிஸ்தானை பிரிக்கும் நீரீணைப் பகுதியில் சில ஆளில்லா படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை இந்தியாவுக்குள் ஊடுருவதற்கு பயங்கரவாதிகள் வந்த படகுகளாக இருக்கலாம் என்ற
சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நம் ராணுவத்தின் தென் மண்டல கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் சைனி கூறியதாவது: சர் கிரீக் பகுதியில் ஆளில்லா சில படகுகள் மீட்கப்பட்டுள்ளன.

நமக்கு கிடைத்த தகவலின்படி தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டமிட்டு உள்ளனர். அவர்கள் இங்கே ஊடுருவி முகாமிட்டுள்ளதாக தெரிகிறது. அதையடுத்து பாதுகாப்பை பலப்படுத்தும்படி அனைத்து தென் மாநிலங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மாநிலங்கள் நடவடிக்கைராணுவத்தின் எச்சரிக்கையை அடுத்து அனைத்து தென் மாநிலங்களும் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளன. கேரளா, தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் கடல் வழியே ஊடுருவலை தடுக்க தீவிர கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை நடப்பதால் அனைத்து முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் வழிபாட்டு தலங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
10-செப்-201917:40:13 IST Report Abuse
sridhar தமிழகமும் கேரளமும் ஒரே மாதிரி ஓட்டு போட்டிருக்கு. இங்கேயே தேடுங்க. கிடைப்பாங்க.
Rate this:
Cancel
Rajan - Chennai,இந்தியா
10-செப்-201915:08:30 IST Report Abuse
Rajan : The National Investigation Agency (NIA) arrested Jamaat-ul-Mujahideen Bangladesh (JMB) leader Asadullah S K alias Raja, 35, from a hideout at நீலாங்கரை.
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
10-செப்-201908:38:53 IST Report Abuse
oce தமிழ் நாட்டிலிருக்கிற நம்ம ஆட்களை பார்த்தாலே பயங்கரவாதிகள் ஓட்டம் பிடிப்பார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X