எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கார்டு தொலைத்தோருக்கு 20 ரூபாயில் மாற்று கார்டு

Added : செப் 10, 2019 | கருத்துகள் (3)
Advertisement
ரேஷன் கார்டு, இ - சேவை, மாற்று, 20 ரூபாய், இ.பி.எஸ், மானிய விலை

சென்னை : ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டு வழங்கும் சேவையை, முதல்வர், இ.பி.எஸ்., விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.

தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை வாங்க, உணவு வழங்கல் துறை சார்பில், பயனாளிகளுக்கு, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டை தொலைத்தவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள கார்டில் திருத்தங்கள் செய்தவர்களுக்கு, அரசு, 'இ - சேவை' மையங்களில், 30 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டுகள் வழங்கப்பட்டன.

ஆனால், சேவை மைய ஊழியர்கள், அதிக கட்டணம் வசூலித்ததால், 2018லிருந்து, மாற்று கார்டு வழங்குவது நிறுத்தப்பட்டது. பலரும், மாற்று கார்டு கேட்டு, அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மாற்று ரேஷன் கார்டுகள், உணவு வழங்கல் மாவட்ட அலுவலகங்களில், அச்சிடப்பட்டு வழங்கப்பட உள்ளன. இதற்காக, சென்னைக்கு இரண்டு; மற்ற மாவட்டங்களுக்கு, தலா, ஒன்று என, கார்டு அச்சடிக்கும் இயந்திரங்கள் வாங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கார்டு அச்சிடும் கருவியில், மென்பொருள் பதிவேற்றம் செய்வது உள்ளிட்ட பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. வெளிநாட்டில் இருந்து, முதல்வர், இ.பி.எஸ்., இன்று சென்னை திரும்புகிறார். ரேஷன் கார்டை தொலைத்தவர்களுக்கு, 20 ரூபாய் கட்டணத்தில், மாற்று கார்டு வழங்கும் சேவையை, அடுத்த சில நாட்களில், அவர் துவக்கி வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-செப்-201908:19:18 IST Report Abuse
தமிழ் மைந்தன் கமிஷன் தொகை நிர்ணயம் செய்தவதில் திமுக ஆட்களின் திறமை அபாரமாம்.... அதை அப்படியே இந்த அரசு ஏற்றுக் கொண்டது.. காரணம் விஞ்ஞான ரீதியாக ஊழல் செய்த குடும்ப கம்பெனியில் பயிற்சி பெற்றவர்கள் அல்லவா..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
10-செப்-201904:59:53 IST Report Abuse
Mani . V இந்த இயந்திரங்கள் வாங்கிய வகையில் எத்தனை நூறு கோடி கமிஷன் ஸாரி லாபம் கிடைத்தது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X