பாக்.,பித்தலாட்டம்:ஆடம்பர பங்களாவில் பயங்கரவாதி மசூத் அசார்

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (11)
Share
Advertisement
பயங்கரவாதி, பித்தலாட்டம், பயங்கரவாதி, மசூத் அசார்,ஜெய்ஷ் - இ - முகமது

இஸ்லாமாபாத் : சர்வதேச பயங்கரவாதியான மசூத் அசார் பாகிஸ்தானில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைமையகம் உள்ள ஆடம்பர பங்களாவில் உல்லாசமாக வாழ்வதும் அங்கு இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த ஆலோசனை நடத்தி வரு வதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.


விசாரணை


ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் 51. பாகிஸ்தானைச் சேர்ந்த அசார் நம் நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய பல்வேறு தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்தாண்டு துவக்கத்தில் ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நம் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கும் பின்னணியில் இருந்தது மசூத் அசார் தான் என தெரிய வந்தது. மத்திய அரசின் கடுமையான முயற்சிக்கு பின் மசூத் அசாரை ஐ.நா. அமைப்பு சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது.


விடுதலை


இதையடுத்து சர்வதேச நாடுகளின் நெருக்கடிக்கு பயந்து மசூத் அசாரை பாக். கைது செய்தது. இந்நிலையில் மசூத் அசார் போலீஸ் காவலில் இல்லை என்பதும் பாக். அரசு மறைமுகமாக அசாரை விடுதலை செய்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது: மசூத் அசார் கைது செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கூறுவது பொய். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பவல்பூரில் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் தலைமையகம் உள்ளது.


ஆடம்பரம்


இங்குள்ள ஆடம்பர பங்களாவில் சகல வசதிகளுடன் மசூத் அசார் சுதந்திரமாக உலா வரும் தகவல் வெளியாகி உள்ளது. மற்ற பயங்கரவாதிகளுடன் சேர்ந்து நம் நாட்டில் தாக்குதல் நடத்துவது குறித்தும் காஷ்மீருக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ வைப்பது குறித்தும் மசூத் அசார் ஆலோசித்து வருவதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்துள்ளன. பயங்கரவாதிகளின் பயிற்சி மையமும் அங்கு செயல்பட்டு வருகிறது. நம் நாட்டின் கடற்பகுதிக்குள் பாக். பயங்கரவாதிகள் ஊடுருவ திட்டமிட்டுள்ளதாக கடற்படை தளபதி கரம்பீர் சிங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.


தகவல்


மேலும் 200 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி சதித் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாக பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியிருந்தார். ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த சதித் திட்டத்தின் பின்னணியில் மசூத் அசார் இருக்கலாம் என்றும் புலனாய்வு துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
10-செப்-201922:42:54 IST Report Abuse
 nicolethomson சுடலை சுல்தான் கான் கட்சியின் ஸ்டைலில் செய்திருக்க வேண்டும் , அதாவது அன்று வீராணம் ஊழலில் மாட்டிவிடுவோம் என்று தெரிந்ததும் ஆரம்பித்த ஆட்டம் நேற்று சாதிக் அவர்களின் தற்கொலையோடு கணக்கு வழக்கில்லாமல் செய்தது போல இந்த பாலைவனத்தானையும் செய்திருக்க வேண்டும் மிஸ் ஆயிடுச்சு
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
10-செப்-201919:36:24 IST Report Abuse
Rajagopal ஐயோ நம்ம சிதம்பரம் அய்யாவை இப்புடி செயில்லப் போட்டு வதைக்கிறாங்களே பாகிஸ்தான்லப் பாருங்க. அங்கிட்டுக் குத்தவாளிங்கள எப்புடி வச்சிருக்காங்கன்னு. கொலை செஞ்சவன்லாம் மாளிகையில வசதியா இருக்கான். நம்ம ஊருல விருந்தாளிகளை, குத்தவாளிங்களையும் ஒரே மாதிரி நடத்துறாங்களே
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
10-செப்-201919:26:49 IST Report Abuse
தமிழ் மைந்தன் இவனுக்கு சென்னையில் உள்ள ஊழல் கம்பெனியின் தலைமையிடத்தில் உள்ள கட்டிடத்தில் தனி அறை உள்ளதாமே?...இது உண்மையா.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X