பொது செய்தி

தமிழ்நாடு

வாழ நினைப்போம் வாழுவோம்...

Added : செப் 10, 2019 | கருத்துகள் (1)
Advertisement
தற்கொலை ,தினம், தோல்வி, காரணங்கள், தடுப்பு தினம்

வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள, தைரியமில்லாமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு தான் தற்கொலை. உலகில் பிரச்னை இல்லாதவர்கள் யாரும் இல்லை. துன்பங்கள் உள்ள அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமெனில், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். தற்கொலை என்பது முட்டாள்களின் செயல் என வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர். தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பல காரணங்கள்


வேலையின்மை, படிப்பில் சாதிக்க இயலாமை, வரதட்சனை கொடுமை, பாலியல் தொந்தரவு, வறுமை, கடன், காதல் தோல்வி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக தற்கொலைக்கு முயல்கின்றனர். எதையும் யோசிக்காமல் தற்கொலை செய்கின்றனர். இம்முடிவால் அவரை நம்பி இருக்கும் வாழ்க்கை துணை, குழந்தைகள், பெற்றோர், நண்பர் ஆகியோர் பாதிக்கப்படுவதை அவர்கள் அறிவதில்லை. ஒருவர் தற்கொலையில் ஈடுபவது, மற்றவரின் மனதிலும், தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துகிறது.



உலகில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார். உலகில் ஆண்டுதோறும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 'டாப் - 20' காரணிகளில் தற்கொலை இடம் பெற்றுள்ளது. உலகில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலையால் உயிரிழக்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்வதால் சுமார் 135 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
10-செப்-201907:41:04 IST Report Abuse
Bhaskaran சிக்மண்ட் பிராய்டு சொல்லியுள்ளதாக ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வருகிறது உலகில் தற்கொலை செய்து கொள்ளவேண்டும் என்னும் எண்ணம் நூற்றுக்கு 90 பேருக்கு மேல் வருவதாகவும் இதில் பணக்காரன் ஏழை ஏன்னும் பாகுபாடு கிடையாது என்றும் ஆனால் அதனை உடனே செயல் படுத்துவார்கள் ஒரு விழுக்காடு என்றும் கூறியுள்ளார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X