வாழ நினைப்போம் வாழுவோம்... | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாழ நினைப்போம் வாழுவோம்...

Added : செப் 10, 2019 | கருத்துகள் (1)
Share
வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள, தைரியமில்லாமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு தான் தற்கொலை. உலகில் பிரச்னை இல்லாதவர்கள் யாரும் இல்லை. துன்பங்கள் உள்ள அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமெனில், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். தற்கொலை என்பது முட்டாள்களின் செயல் என வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர். தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி, செப்., 10ம் தேதி உலக தற்கொலை
தற்கொலை ,தினம், தோல்வி, காரணங்கள், தடுப்பு தினம்

வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை எதிர்கொள்ள, தைரியமில்லாமல் அவசரப்பட்டு எடுக்கும் முடிவு தான் தற்கொலை. உலகில் பிரச்னை இல்லாதவர்கள் யாரும் இல்லை. துன்பங்கள் உள்ள அனைவரும் தற்கொலை செய்ய வேண்டுமெனில், உலகில் யாரும் இருக்க மாட்டார்கள். தற்கொலை என்பது முட்டாள்களின் செயல் என வல்லுனர்கள் விமர்சிக்கின்றனர். தற்கொலை அறவே கூடாது என்பதை வலியுறுத்தி, செப்., 10ம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.


பல காரணங்கள்


வேலையின்மை, படிப்பில் சாதிக்க இயலாமை, வரதட்சனை கொடுமை, பாலியல் தொந்தரவு, வறுமை, கடன், காதல் தோல்வி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்காக தற்கொலைக்கு முயல்கின்றனர். எதையும் யோசிக்காமல் தற்கொலை செய்கின்றனர். இம்முடிவால் அவரை நம்பி இருக்கும் வாழ்க்கை துணை, குழந்தைகள், பெற்றோர், நண்பர் ஆகியோர் பாதிக்கப்படுவதை அவர்கள் அறிவதில்லை. ஒருவர் தற்கொலையில் ஈடுபவது, மற்றவரின் மனதிலும், தற்கொலை எண்ணத்தை ஏற்படுத்துகிறது.



உலகில் 40 வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்கிறார். உலகில் ஆண்டுதோறும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் 'டாப் - 20' காரணிகளில் தற்கொலை இடம் பெற்றுள்ளது. உலகில் ஆண்டுதோறும் 8 லட்சம் பேர் தற்கொலையால் உயிரிழக்கின்றனர். ஒருவர் தற்கொலை செய்வதால் சுமார் 135 பேர் பாதிக்கப்படுகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X