தாயின் தூக்கத்தால் தவறி விழுந்த குழந்தை

Added : செப் 10, 2019 | கருத்துகள் (10)
Share
Advertisement
குழந்தை, தூங்கிய தாய், வனத்துறை, சிசிடிவி, மீட்பு, 45கி.மீ

மூணாறு : கேரளா மூணாறு அருகே ராஜமலை பகுதியில் ஜீப்பில் இருந்து ஒரு வயது குழந்தை ரோட்டில் தவறி விழுந்தது தெரியாமல் பெற்றோர் 50 கி.மீ., பயணித்தனர். கண்காணிப்பு பணியில் இருந்த வனத்துறையினர் குழந்தையை சிறிய காயங்களுடன் மீட்டனர்.

இடுக்கி மாவட்டம் முரிக்காசேரி அருகே முள்ளிரிக்குடி பகுதியைச் சேர்ந்த சபீஷ், மனைவி சத்யபாமா. இவர்கள் உட்பட 10 பேர் பழநி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாலை ஜீப்பில் திரும்பினர். ஜீப் ஓரத்தில் இருந்த சத்யபாமா ஒரு வயது மகள் ரோஹிதாவை மடியில் அமர வைத்திருந்தார். மூணாறு அருகே இரவிகுளம் தேசிய பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலை செல்லும் 5ம் மைல் பகுதியை இரவு 9:45 மணிக்கு ஜீப் கடந்தது.

சத்யபாமா மடியில் இருந்த குழந்தை தவறி ரோட்டில் விழுந்தது. அனைவரும் துாக்கத்தில் இருந்தததால் குழந்தை தவறி விழுந்ததை கவனிக்கவில்லை. 50 கி.மீ. துாரம் பயணித்து கம்பளிகண்டம் பகுதியில் ஜீப்பில் இருந்து இறங்கிய போது குழந்தை காணாமல் போனது தெரிந்தது. வெள்ளத்துாவல் போலீசில் புகார் அளித்தனர். ஜீப்பில் இருந்து தவறி விழுந்த குழந்தை சிறிய காயங்களுடன் ரோட்டில் தவழ்ந்து சென்றது.

மூணாறு சாலையில் ஜீப்பிலிருந்து விழுந்த ஒரு வயது குழந்தை பாதுகாப்பான இடத்தைத்தேடி தவழ்ந்து சென்ற அதிசயம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு: மிருகங்கள் நிறைந்த மூணாறு காட்டுப்பகுதியில் உள்ள ராஜமலை செக்போஸ்ட் அருகே ஞாயிறு இரவு 10 மணிவாக்கில் ஒரு குழந்தையின் அழுகுரல் சத்தமாக கேட்டது. பணியில் இருந்த வன அதிகாரிகள் வெளியே ஓடிவந்து பார்த்தபோது, செக்போஸ்ட்டின் டிக்கெட் கவுண்டரை நோக்கி சாலையில் குழந்தை தவழ்ந்து வருவதை கண்டனர். வன அதிகாரிகள் ஓடிச்சென்று அந்த குழந்தையை தூக்கினர். அது பெண் குழந்தை. நெற்றி, மூக்கு என முகத்தில் சிராய்ப்புக்காயங்கள் இருந்தன.

5ம் மைல் பகுதியில் பணியில் இருந்த வனத்துறையினர் இரவு 10:00 மணிக்கு குழந்தையை மீட்டனர். வன உயிரின காவலர் லட்சுமி தலைமையில் வனத்துறையினர், போலீசார் அக்குழந்தையை மூணாறு டாடா மருத்துவமனையில் சேர்த்தனர். போலீஸ் உதவியுடன் இத்தகவல் அறிந்த பெற்றோர் இரவு 1:30 மணிக்கு குழந்தையை பெற்றுக் கொண்டனர்.-------குழந்தை விழுந்த பகுதியில் யானை உட்பட விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இதனால் அங்கு வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். இதனால் குழந்தை உடனடியாக மீட்கப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Chennai,இந்தியா
13-செப்-201909:14:44 IST Report Abuse
Ram யார்ரா இந்த நல்லவன் நல்லவன். கேன பயலே
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201911:55:25 IST Report Abuse
Nallavan Nallavan வேண்டாத பெண் குழந்தை?? மீண்டும் "தவற விட" பெற்றோர் வேறு இடம் பார்க்கக்கடவது
Rate this:
John - Chennai,இந்தியா
16-செப்-201910:47:21 IST Report Abuse
Johnஈன பிறவியா நீ.....
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
12-செப்-201911:53:00 IST Report Abuse
Nallavan Nallavan குழந்தை தவறி விழுந்ததா ?? அல்லது "தவற" விடப்பட்டதா ?? பெண் குழந்தை என்பதால் சந்தேகம் ........
Rate this:
VSK - CARY,யூ.எஸ்.ஏ
12-செப்-201917:16:38 IST Report Abuse
VSKஓ இது மாதிரி பண்ணி ரொம்ப அனுபவம் போல ,... உங்களுக்கு . ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X