பொது செய்தி

இந்தியா

என்னமோ ரகசிய நடவடிக்கை நடக்குது: பக்தர்களின் சந்தேகம்

Updated : செப் 11, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (5)
Advertisement
சபரிமலை பிரச்னை, பக்தர்கள் சந்தேகம்

சபரிமலை:சபரிமலை பிரச்னையில் கேரள அரசு சில ரகசிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பக்தர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த பினராயி அரசு மேற்கொண்ட பிடிவாதத்தால் கடந்த சீசனில் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதை தொடர்ந்து நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் மா.கம்யூ., படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து சபரிமலை விவகாரம்தான் கட்சியின் தோல்விக்கு காரணம் என்பதை செயற்குழு பகிரங்கமாக ஒப்புக் கொண்டது.

இந்நிலையில் பந்தளம் மன்னர் தொடர்ந்த வழக்கில், சபரிமலைக்காக ஒரு சிறப்பு சட்டம் கொண்டு வரஉள்ளதாக பினராயி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள தகவல் பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பந்தளம் மன்னர் குடும்ப வசம் உள்ள ஐயப்பனின் நகைகள் உள்ளிட்ட பொருட்களை தேவசம்போர்டு வசம் ஒப்படைக்க வேண்டும் என 2006ம் ஆண்டு தேவ பிரஸ்ஸனத்தில் கூறப்பட்டது.

இதை எதிர்த்து பந்தளம் மன்னர் ராமவர்மா 2007-ல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 12 ஆண்டுகளில் 21 முறை விசாரணை நடைபெற்றுள்ளது. இந்த வழக்கில் அண்மையில் கேரள அரசு தாக்கல் செய்த பதில்மனுவில், சபரிமலையை நிர்வகிக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்' என குறிப்பிட்டுள்ள தகவல் பரவி வருகிறது. ஆனால் தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் இதை மறுத்துள்ளார். இப்படி ஒரு சட்டம் வருவது பற்றி அரசுக்கோ, தேவசம்போர்டுக்கோ தெரியாது என்று போர்டு தலைவர் பத்மகுமாரும் மறுத்துள்ளார். ஆனால் பக்தர்கள் இதை நம்பவில்லை.

பினராயி அரசு ஏதோ ரகசியமாக திட்டமிட்டு வருவதாக சந்தேகிக்கின்றனர். அவ்வாறு சட்டம் கொண்டு வரப்பட்டால் மீண்டும் சபரிமலை சீசனில் பெரும் குழப்பம் ஏற்படும்.பினராயி அரசு தனது பிடிவாதத்தை கைவிட்டு, சபரிமலையில் அமைதியான சூழலை ஏற்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் விரும்புகின்றனர்.

சபரிமலை குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சட்டம் கொண்டு வருவது பற்றி மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருவதாகவும், இது குறித்து மூத்த அமைச்சர்களும், தலைவர்களும் விவாதித்து வருவதாகவும் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201923:43:21 IST Report Abuse
Pugazh V கற்பனைக் கட்டுரை. பாஜகவின் கபட நாடகத்தால், அதாவது, கோவில் வளாகத்தில் பந்தல் போட்டு கொண்டு, போற வர்ற வேன்கள் பஸ்களையெல்லாம் நிறுத்தி உள்ளே ஏறி கத்துவது மிரட்டுவது என்றும், பொ.ரா.கி. ஒரு அடியாள் கூட்டத்துடன் 12 கார்களில் வந்து அலப்பறை பண்ணியும்- கபட நாடகம் ஆடி - சபரிமலை யின் புனிதத்தன்மை கெட்டுப்போனது. அதற்கான தண்டனை- உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு பத்தனந்திட்டாவில் வெறும் 6 ஓட்டுகளும், ஏட்டுமானூரில் 24 ஓட்டுகளும்- உடனே கிடைத்தது. இப்போது கேரளம் அமைதியாக இருப்பது பொறுக்காத பாஜக இதைக் கிளப்பி விடுகிறது. இந்த கட்டுரை யில் சொன்ன மாதிரி எதுவுமே கேரள மக்களிடையே இல்லை.
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
11-செப்-201910:25:23 IST Report Abuse
Darmavanஉன்னை போன்ற தேச துரோகிகள் சிறையில் இருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201923:41:01 IST Report Abuse
Pugazh V பாஜகவின் கபட நாடகத்தால், அதாவது, கோவில் வளாகத்தில் பந்தல் போட்டு கொண்டு, போற வர்ற வேன்கள் பஸ்களையெல்லாம் நிறுத்தி உள்ளே ஏறி கத்துவது மிரட்டுவது என்றும், பொ.ரா.கி. ஒரு அடியாள் கூட்டத்துடன் 12 கார்களில் வந்து அலப்பறை பண்ணியும்- கபட நாடகம் ஆடி - சபரிமலை யின் புனிதத்தன்மை கெட்டுப்போனது. அதற்கான தண்டனை- உள்ளாட்சி தேர்தலில் பாஜகவிற்கு பத்தனந்திட்டாவில் வெறும் 6 ஓட்டுகளும், ஏட்டுமானூரில் 24 ஓட்டுகளும்- உடனே கிடைத்தது. இப்போது கேரளம் அமைதியாக இருப்பது பொறுக்காத பாஜக இதைக் கிளப்பி விடுகிறது. இந்த கட்டுரை யில் சொன்ன மாதிரி எதுவுமே கேரள மக்களிடையே இல்லை. வெறும் கற்பனை
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
11-செப்-201912:27:26 IST Report Abuse
Darmavanநீ என்ன உளவுத்துறை தலைவனா?...
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
10-செப்-201921:54:04 IST Report Abuse
Nallavan Nallavan ஒட்டுப் போட்டு கம்மிகள் அரசைத் தேர்ந்தெடுத்துப்புட்டு இப்போ குத்துதே குடையுதே -ன்னா என்ன அர்த்தம் சேட்டன்களா ??
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X