பிச்சைக்கார லேடி... பிரச்னை வருது அதிகாரியை தேடி! - பவர்ல யாரு ஒஸ்தி பதவியை பிடிக்க 'குஸ்தி'

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019
Advertisement
 பிச்சைக்கார லேடி... பிரச்னை வருது அதிகாரியை தேடி! - பவர்ல யாரு ஒஸ்தி பதவியை பிடிக்க 'குஸ்தி'

கணபதி சென்றிருந்த சித்ராவும், மித்ராவும், ஸ்கூட்டரில் வீடு நோக்கி திரும்பினர். காந்திபுரம், நுாறடி ரோட்டில், 'ஹைவேஸ்' டிபார்ட்மென்ட் அதிகாரிகளின் ஜீப் நின்று கொண்டிருந்தது. நுாறடி ரோட்டில் வானுயரத்துக்கு கட்டும் பாலத்தில், 'ஹைவேஸ்' செக்ரட்டரி ஆய்வு செய்து கொண்டிருந்தார். இருவரும் அங்கு விரைந்தனர்.
'இந்தப்பாலத்தை பத்தி, பேப்பர்ல ஏகப்பட்ட செய்தி வருது. ஒழுங்கா கட்டியிருக்கீங்களா. உயரத்தை அளந்து பார்த்தீங்களா...' என, அடுக்கடுக்கா கேள்வி கேட்டுக்கிட்டு இருந்தாரு அந்த செக்ரட்டரி. அதற்கு, 'விதிமுறைப்படி கட்டியிருக்கோம்' என, 'ஹைவேஸ்' அதிகாரிங்க, சமாளிச்சிக்கிட்டு இருந்தாங்க.அருகிலிருந்து அதைக்கேட்ட சித்ரா, ''ஒரு தடவைக்கு ரெண்டு தடவ, நல்லா ஆய்வு செஞ்சா நல்லது...,'' என்றவாறு, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள்.''அக்கா, திருச்சி ரோட்டிலும் பாலம் வேலை நடந்திட்டு இருக்கு. துாண் கட்டுறதுக்கு, அஞ்சு மீட்டர் ஆழத்துக்கு துளையிட்டு இருக்காங்க. பக்கவாட்டுல இருந்து, மண் சரிஞ்சு விழுந்ததால, உஷாராகிட்டாங்க. வாகனங்களை வேற வழியா மாத்தி விட்டுட்டு, கான்கிரீட் போடுற வேலையை சாயாங்காலத்துக்குள்ள ஜரூரா செஞ்சு முடிச்சிட்டாங்க. நல்ல வேளையா அசம்பாவிதம் ஏற்படாம தவிர்த்துட்டாங்க,''''நல்ல விஷயம். இதே மாதிரி பாலம் வேலை முடியுற வரைக்கும் வேலை பார்த்தாங்கன்னா நல்லா இருக்கும். இல்லேன்னா, காந்திபுரத்துல கார்களுக்கு தார் அபிேஷகம் செஞ்ச மாதிரி ஆயிடும்,'' என்றாள் சித்ரா.காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் முன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு, ஓட்டலில் சாம்பார் இட்லி ஆர்டர் கொடுத்தனர்.''அக்கா, கார்ப்பரேஷன் வணிக வளாகத்துல கடை நடத்துறவங்க, ஒழுக்கமா வாடகை கட்டுறதே இல்லையாம்,'' என்றாள் மித்ரா.
''ஆமா, மித்து, நானும் கேள்விப்பட்டேன். மேட்டுப்பாளையம் ரோட்டுல இருக்கற, மாநகராட்சி அண்ணா தினசரி மார்க்கெட்டுல இருக்கற கடைகளுக்கு, மின் சப்ளை செய்றதுல, ஒருத்தரு, மாசம் ரெண்டு லட்சம் ரூபாய், சம்பாதிக்கிறாராம்,''''என்னப்பா சொல்ற, மின் கட்டணம் செலுத்தியிருக்கப் போறாரு''''பொறுமையா இருங்க, முழுசா சொல்றேன். மார்க்கெட்டுல இருக்கற கடை வியாபாரிகள்ட்ட, ஒரு பல்புக்கு ஒரு நாளைக்கு, 10 ரூபாய்னு கணக்கு போட்டு வசூலிக்கிறாங்களாம். மாநகராட்சி நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலா கட்டணம் வசூலிக்கிறாங்களாம்.''இரு சக்கர வாகனம், ஆட்டோ வந்து போறதுக்கும் அதிகமா வசூல் நடக்குதாம். கார்ப்பரேஷன் ரசீது கொடுக்குறதில்லைன்னு, குத்தகைதாரர் மேல நடவடிக்கை எடுங்கன்னு கலெக்டரிடம் வணிகர் சங்கத்துக்காரங்க பெட்டிஷன் கொடுத்திருக்காங்க. நடவடிக்கை எடுக்கச்சொல்லி, கார்ப்பரேஷனுக்கு கலெக்டர் பரிந்துரை செஞ்சிருக்காராம்,''சாம்பார் இட்லி சாப்பிட்டு விட்டு, இருவரும் புறப்பட்டனர். கல்வித்துறை வாகனம் ஒன்று, அவர்களை கடந்து சென்றது.அதைப்பார்த்ததும், ''எஜூகேஷன் டிபார்ட்மென்ட்டுக்காரங்க, ஸ்கூல் ஆய்வுக்கு போகும்போது, 'லஞ்ச் பேக்' எடுத்துட்டு போறாங்களாமே,'' என, நோண்டினாள் சித்ரா.''வழக்கமா, ஆய்வுக்கு போற எடத்துல, தடபுடலா விருந்து வச்சு அசத்துவாங்க. சில அதிகாரிங்க, இஷ்டப்பட்ட உணவு வகைகளை முன்கூட்டியே சொல்லிடுவாங்க.
லஞ்ச் ஏற்பாடு செய்றவங்க, பர்ஸ் காலியாகிடும். சி.இ.ஓ., முருகன் வந்ததுக்கப்புறம், ஆய்வுக்கு செல்லும் அதிகாரிகள், வீட்டுல இருந்து உணவு கொண்டு வரணும்னு கறாரா சொல்லிட்டாராம்...''''ஆனா, சி.இ.ஓ., ஆபீசுல ஒரு லேடி அதிகாரி ஆட்டம் தாங்கலைன்னு கேள்விப்பட்டேனே...''''அதுவா, கார்ப்பரேஷன் ஆபீசுக்குள்ள ஒரு சி.இ.ஓ., ஆபீஸ் இருக்கு. அங்க இருக்கிற லேடி அதிகாரி சொல்றதை தான், துணையான உயரதிகாரி கேக்குறாராம். சி.இ.ஓ., 'லீவு'ல போயிட்டாரு.
சீனியாரிட்டி அடிப்படையில, தலைமை ஆசிரியர் பொறுப்புல இருக்கறவங்கள, சி.இ.ஓ.,வா நியமிப்பாங்க. அதிகாரிட்ட இருக்கற செல்வாக்கை பயன்படுத்தி, தனக்கு வேண்டப்பட்டவருக்கு, பொறுப்பு வாங்கிக் கொடுத்திருக்காங்களாம். கல்வித்துறை அலுவலகத்துல புகைச்சல் ஓடிட்டு இருக்கு,''இதைக்கேட்ட வாயடைந்த சித்ரா, ''புதுசா வந்திருக்கிற லேடி அதிகாரிக்கும், டி.எஸ்.பி., அந்தஸ்துல இருக்கிற போலீஸ் அதிகாரிக்கும் நெருக்கமாமே...'' என, கிளறினாள்.''என்னக்கா, ஏகப்பட்ட விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க. அந்த அதிகாரி, ஆபீசுக்கு வர்றதே இல்லை; வேலையும் பார்க்குறதில்லை; மாசம் தவறாம ரூ.70 ஆயிரம் சம்பளம் மட்டும் வாங்கிட்டு இருக்காங்களே, அவுங்க தானே...''
''கரெக்ட் மித்து, சரியா சொன்னே...'' என்றவாறு, ரயில்வே ஸ்டேஷனை கடந்து, ஸ்கூட்டரை இயக்கினாள் சித்ரா.''அக்கா, நம்மூர் ரயில்வே ஸ்டேஷன்ல, ஒரு பெண்ணை பிடிச்சு, ஆர்.பி.எப்., வீரர்கள் விசாரிச்சிருக்காங்க. அவர் வச்சிருந்த பேக்கை சோதித்தபோது, 20 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமா சில்லரை காசு, பணம் இருந்திருக்கு. திருட்டு பணமானு விசாரிச்சாங்க. பிச்சை எடுத்த காசுனு, வெளிப்படையா அந்த பெண் சொல்லிருக்கு...''
''அப்புறம்... என்னாச்சு?''''ஏகப்பட்ட கேஸ் பதிவு செஞ்சு, ரசீது கூட கொடுக்காம, 10 ஆயிரத்து, 600 ரூபாயை, இந்தி பேசுற அதிகாரி, ஆட்டைய போட்டுட்டாராம். மேலிடத்துக்கு தெரிஞ்சு, அந்த அதிகாரியிடம் விசாரணை நடந்திருக்கு. இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலையாம்.''ஒரு மாசத்துக்கு முன்னாடி, பெண் பயணியை தகாத வார்த்தையில பேசி, லக்கேஜை காலால் எட்டி உதைச்ச விவகாரத்திலாவது, ஆக் ஷன் எடுத்தாங்களா...''
''அதை ஏன் கேக்குறீங்க. டிக்கெட் பரிசோதகரை கேள்வி கேட்ட, கோவை தலைமை ஆர்.பி.எப்., வீரரை, ரெண்டு நாளைக்கு முன்னாடி மதுரைக்கு 'டிரான்ஸ்பர்' பண்ணியிருக்காங்க. கேள்வி கேட்டதுக்காக, டி.டி.இ.,கள் ஒன்னா சேர்ந்து, பழிவாங்கிட்டதா, அவரு புலம்பிக்கிட்டு இருக்காரு...''''அடப்பாவமே...'' என, 'உச்' கொட்டிய சித்ரா, வீட்டுக்கு முன் ஸ்கூட்டரை நிறுத்தினாள்.
வீட்டுக்குள் சென்று, சோபாவில் அமர்ந்த மித்ரா, ''பாரதியார் பல்கலையில துணைவேந்தர் பதவியை கைப்பத்துறதுக்கு முட்டி, மோதுறாங்களாமே...'' என, இழுத்தாள்.''ஆமா, மித்து, 20க்கும் மேற்பட்டவங்க விண்ணப்பம் செஞ்சிருக்காங்க.
இருந்தாலும், சென்னை பல்கலை முன்னாள் பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன், ஐ.ஐ.டி., பேராசிரியர் தேன்மொழி, பல்கலை மானியக்குழு முன்னாள் தலைவர் தேவராஜ்ன்னு மூணு பேர் 'லிஸ்ட்'டுல இருக்காங்களாம். இதுல இருந்து ஒருத்தரை தேர்வு செய்ய வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. தேர்வுக்குழுவுக்கு ஜாதி ரீதியா அழுத்தம் வருதாம். ஏகப்பட்ட அமைச்சர்கள் 'ரெகமென்டேசன்' செய்றாங்களாம்,''''நம்மூர்ல எந்த போஸ்டிங்கிற்கு அதிகாரி நியமிக்கறதா இருந்தாலும், ஆளுங்கட்சி வி.ஐ.பி., விரும்பணுமே,'' என்ற சித்ரா, ''கம்ப்யூட்டர், ஓவியம், தையல் ஆசிரியர்களது சர்ட்டிபிகேட்டை சரி பார்க்குறாங்களாமே...'' என கேட்டாள்.
''ஆமாக்கா, ஏகப்பட்ட ஆசிரியர்களிடம் சான்று இல்லாததால, நிரந்தரம் செய்ய முடியாம இருக்காம். கோர்ட்டுல வழக்கு தொடர்ந்தா, பணி நிரந்தரம் செய்ய வாய்ப்பிருக்குன்னு யாரோ சொல்லியிருக்காங்க. இதை நம்பி, ஒவ்வொரு ஆசிரியரிடமும் ஆயிரக்கணக்குல ஒரு குரூப் பணம் வசூலிச்சுக்கிட்டு இருக்காம்,'' என்றாள் மித்ரா.அப்போது, 'டிவி' யில், சந்திரயான்-2 'லேண்டர்' சாதனம் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பான செய்தி ஒளிபரப்பாகியது. அதில், இருவரும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X