பட்டையை கிளப்பிய கும்பல்; சட்டை நனைந்த போலீஸ்!

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019
Advertisement
''அக்கா... எங்க இருக்கீங்க? கொஞ்சம் வந்தீங்கன்னா, பூ மார்க்கெட்டில் பூ வாங்கிட்டு வந்துடலாம். நாளைக்கு காலேஜில், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலம் போட்டிஇருக்குதுங்க்கா...''''ஓ.கே., மித்து. இன்னும், பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன். ரெடியாயிரு,'' சித்ரா, போனை அணைத்தாள்.சொன்னதுபோல், சித்ரா வரவே, மித்ராவும் வண்டியில் அமர்ந்தாள். இருவரும், பூ மார்க்கெட் நோக்கி
பட்டையை கிளப்பிய கும்பல்; சட்டை நனைந்த போலீஸ்!

''அக்கா... எங்க இருக்கீங்க? கொஞ்சம் வந்தீங்கன்னா, பூ மார்க்கெட்டில் பூ வாங்கிட்டு வந்துடலாம். நாளைக்கு காலேஜில், ஓணம் பண்டிகைக்கு அத்தப்பூ கோலம் போட்டிஇருக்குதுங்க்கா...''''ஓ.கே., மித்து. இன்னும், பத்து நிமிஷத்தில் அங்கே இருப்பேன். ரெடியாயிரு,'' சித்ரா, போனை அணைத்தாள்.சொன்னதுபோல், சித்ரா வரவே, மித்ராவும் வண்டியில் அமர்ந்தாள். இருவரும், பூ மார்க்கெட் நோக்கி புறப்பட்டனர்.''அடுத்த ஆளுங்கட்சி நாங்கதான்னு, டி.டி.வி., ஆட்களுக்கு வலைவீச ஆரம்பிச்சுட்டாங்களாம்.'' என, ஆரம்பித்தாள் மித்ரா.''அப்படியா... யாரு தி.மு.க., காரங்களா?''''ஆமாங்க்கா... நீங்க சொன்னது கரெக்ட். ஏற்கனவே, டி.டி.வி., கூடாரம் கொஞ்சம் கொஞ்சமா காலியாகிட்டிருக்கு. ஆனா, அவங்க, அ.தி.மு.க.,வில் சேர்ந்திட்டாங்க. மீதியிருக்கிற ஆட்களை, எப்படியாவது, உள்ளாட்சி தேர்தல் ஆசை காட்டி, இழுத்திடணும்னு, தி.மு.க., காரங்க தீயாய் வேலை செய்யறாங்களாம்,''''ஏண்டி... செத்த பாம்பை அடிக்கிறதில், இவங்க எப்பவுமே கில்லாடிதான்,'' என்று சிரித்த சித்ரா, ''குடிமராமத்து பணிகளை முடிக்க கெடு வச்சிட்டாங்களாம்,''''அப்டிங்களா? எனக்கு தெரியாதே, சொல்லுங்க,''

''கிராமங்களில் குளம், குட்டைய எடுத்து வேலை செய்யுங்கனு, வாய்மொழி உத்தரவு போட்டுட்டாங்க; எந்தவொரு அதிகாரிங்க பேரிலயும், 'ஒர்க் ஆர்டர்' கொடுக்கலையாம். 15ம் தேதிக்குள்ள முடிக்கணும்னு, கெடு வேற வச்சிட்டாங்களாம். இதுவரைக்கும் ஒரு பைசா கூட ஒதுக்கலை. எப்படி வேலை செய்றதுன்னு, பி.டி.ஓ.,க்கள் புலம்பல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வரைக்கும் கேட்குதாம்''
''அக்கா... அவங்க சொல்றது ஒருவகையில சரிதான். பார்க்கலாம் எப்படி முடிக்கிறாங்கன்னு? இங்கேயும் ஒரு புலம்பலையும் கேளுங்க. செல்வாக்கு இருக்கறவங்களுக்கு மட்டும்தான் பதவி கிடைக்குதுனு, அங்கேயும் புலம்ப ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்றாள் மித்ரா.''எந்த கட்சியிலடி?''''பா.ஜ.,வில்தான். அந்த கட்சிக்கு இப்ப செல்வாக்கு கூடிப்போனதால, பதவிக்கு கடும்போட்டியா இருக்காம். பல வருஷமா கட்சிக்கு உழைச்சவங்களைவிட, நிர்வாகிகளோட, சொந்த பந்தங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பதவி கொடுக்க ஏற்பாடு நடக்குதாம்.
கட்சி வளரணும்னா, பல வருஷமாக பாடுபடற தொண்டர்களை ஊக்குவிக்கலாமேனு, காரசாரமா விவாதம் போகுதாம்,'' என்றாள் சித்ரா.காங்கயம் கிராஸ் ரோட்டில் வண்டி சென்ற போது, ''அக்கா... வண்டியை நிறுத்துங்க. டீ குடிச்சிட்டு போலாம்,'' என்றாள் மித்ரா.ஒரு பேக்கரி முன், வண்டியை நிறுத்தினாள் சித்ரா. இருவரும், ஸ்நாக்ஸ், டீயை ஆர்டர் செய்து விட்டு, அரட்டையை தொடர்ந்தனர்.
''ஆய்வு கூட்டத்துல நடந்த விஷயம் தெரியுமாடி?''''எங்க நடந்ததுங்க்கா?''''கலெக்டர் ஆபீசில்தான். அங்க நடந்த ஒரு ஆய்வு கூட்டத்தில், கால்நடை, வருவாய்த்துறை இணைஞ்சு, ஏழு கோடி ரூபாயில், திட்ட பணி நடக்குதுனு அதிகாரிங்க சொன்னாங்க,''''உடனே, நம்ம மாவட்ட அமைச்சர், அப்படியா, எனக்கே தெரியலை. அந்த 'கான்ட்ராக்டரை', என்னை பார்க்க சொல்லுங்கனு,' சொன்னாராம்,' ''சார்... அது, அரசுத்துறை இணைஞ்சு செய்யும் பணி, தனி திட்டம் இல்லைனு, அதிகாரிங்க விளக்கியிருக்காங்க,''
''அதுக்கப்புறம், அப்படியா... சரிசரி'ன்னு, அமைச்சர் அமைதியானாராம்,'' என்று சித்ரா சொல்லி முடிக்கவும், பிஸ்கட்டும், டீயும் வந்தது. இருவரும், சாப்பிட ஆரம்பித்தனர்.'' ஏங்க்கா... லிங்கேஸ்வரர் ஊருக்கு பக்கத்தில இருக்கிற 'குழந்தையூர்' ஸ்டேஷனில் நடந்த கூத்து தெரியுமா?''''அப்படியா... தெரியலையே, என்ன கூத்து மித்து?''
'அக்கா... ஸ்டேஷன்வளாகத்தில் பல்வேறு வழக்கு சம்பந்தமான வண்டியைநிறுத்தி வச்சிருக்காங்க. அப்போ ஒருவர், கள்ளச்சாவி போட்டு ஒரு வண்டியை 'தள்ளி'ட்டு போயிட்டாராம். இதை தெரிஞ்சு அதிர்ச்சியான போலீஸ்,ஒருவழியாக வண்டியைமீட்டாங்களாம்,''
''இது உண்மையிலயே 'செம'கூத்துதாண்டி,'' என்ற சித்ரா, பில் கொடுத்து விட்டு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள். மித்ரா ஓடிவந்து லாவகமாக உட்கார்ந்து கொண்டாள்.மக்கள் நடமாட்டம் நிறைந்த பெரிய கடை வீதிக்குள் வண்டியை சமார்த்தியமாக ஓட்டினாள் சித்ரா.''விளையாட்ட ஊக்கப்படுத்துறதுக்காக கொடுத்தா, சில பேர் தங்கள ஊக்கப்படுத்திக்கறாங்க,'' என மித்ரா புதிர் போட்டாள்.''கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லுடி,''''குறுமைய போட்டி நடக்குதில்ல.
அதில், கலந்துக்கற ஸ்டூடண்ட்ஸ், டீச்சர்ஸ்க்கு சாப்பாடு, போக்குவரத்து செலவுக்காக, ஒவ்வொரு மண்டலத்துக்கும் பல லட்சம் ரூபாய் ஒதுக்கிஇருந்தாங்க,''''அப்படி, கோழிப்பண்ணை ஊரில், குறுமைய போட்டிக்கான செலவ மிச்சப்படுத்திட்டு, செலவே இல்லாம கணக்கு காட்டினாங்களாம். இப்படி எல்லாத்துலயும் மிச்சப்படுத்தி, விளையாட்டுக்காக கொடுத்தது விளையாட்டாக காணாம போச்சுங்க்கா...'' என்றாள் மித்ரா.'
'கடைசியில, விளையாட்டு துறையையும் விட்டு வைக்கலையா? அதேமாதிரி, அவிநாசியில அதிகாரி பண்ணின கொடுமை உனக்கு தெரியுமா?''''ஏங்க்கா... என்னாச்சு?'' சீரியஸாக கேட்டாள் மித்ரா.''வேலாயுதம்பாளையம் ஊராட்சி, பாலமுருகன் நகரில், வீட்டுமனை வாங்கிய, திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வேலை செய்ற ஒரு உதவி பொறியாளர், அனுமதி இல்லாம, அங்கிருந்த வேப்ப மரத்தை வெட்டிட்டார்,''
''ஆனா, இது தெரிஞ்ச வருவாய்த்துறை அதிகாரிங்க, அதே ஏரியாவில் குடியிருக்கறவங்கிட்ட, வீடு கட்டறதுக்கு இடைஞ்சலா இருந்ததால, வெட்டினாங்கன்னு, ஒரு ஸ்டேட்மேன்ட் வாங்கிட்டு, பைலை குளோஸ் பண்ணிட்டாங்களாம். இதே அவிநாசி, திருப்பூரில், மரம் வெட்டிய மத்தவங்களுக்கு பைன் போட்டு, எச்சரிக்கை செஞ்சாங்க,''''இப்ப அதிகாரி வெட்டினதால, கண்டுக்காம விட்டுட்டாங்க. இது எந்த ஊர் நியாயமுன்னு தெரியலை,'' என, ஆவேசப்பட்டாள் சித்ரா.''இது விஷயத்தில், கலெக்டர்தான் ஒரு முடிவெடுக்கணும்,'' என்ற மித்ரா,

''ரெய்டில், சீட்டாட்ட கும்பலை, போலீஸ் புரட்டி எடுத்த கதை தெரியுங்களா?''''அட.. இது எங்கடி நடந்தது?''''வடக்கு பகுதியில் சீட்டாட்டம் நடப்பதாக தகவல் வந்து போலீசார் போனாங்க. கும்பலை சுற்றி வளைச்சு, பணம், டூவீலர் பறிமுதல் செஞ்சாங்க,''''அப்போ, அதில ரெண்டு பேர், எல்லா பக்கமும்தான் நடக்குது. எங்களை ஏன் புடிக்கறீங்க? என்று சத்தம் போடவே, டென்ஷனான போலீசார், எல்லாத்தையும் ரவுண்ட் கட்டி 'வெச்சு செஞ்சுட்டாங்களாம்''
''ஆமாண்டி... இப்படி பண்ணினாத்தான் இதுபோன்ற ஆட்கள் திருந்துவாங்க,'' என்ற சித்ரா, ''திருப்பூரில் ஆட்களை பட்டையை கிளப்புனாங்கன்னா, காங்கயத்தில், மரத்திலிருந்த பட்டையை உரிச்சுட்டாங்களாம்,'' புதிர் போட்டாள்.''அந்த பட்டையை உரிச்சு என்ன பண்றது,''''அட... அந்த பட்டையை வைச்சுதான் சாராயம் காய்ச்சுவாங்களாம். ஒரே ஏரியாவில், ஏகப்பட்ட கருவேல மரங்களின் பட்டையை உரிச்சுட்டாங்களாம்.இந்த மேட்டர் எப்படியோ உயரதிகாரிங்களுக்கு போக போலீசை வெளுத்து வாங்கிட்டாங்க. வேர்வையில சட்டை நனையுற அளவுக்கு அலைஞ்சும் மர்மம் விலகலையாம்...''
''பட்டை மேட்டரை புதுசா வந்திருக்கிற மேடம்சீரியஸா கவனிச்சா பரவாயில்லை.இதே மாதிரி, வெள்ளகோவில் ஒரு சம்பவம் அடிக்கடி நடக்குதாம்,''என்று பொடி வைத்து பேசினாள் மித்ரா.''அப்படி என்ன நடக்குதுடி?''''வெள்ளகோவில் ஏரியாவில், ரோந்து வண்டியில போற ரெண்டு குட்டி ஆபீசருங்க, 'இங்க கலெக்ஷன் நல்லாயில்லை'ன்னுட்டு, பக்கத்தில காங்கயம் ஏரியாவில் போய், 'கல்லா' கட்டுறாங்களாம்,''

''அதிலயும், மாடு, ஆட்களை ஏத்திட்டு வர வண்டியா பார்த்து, கச்சிதமா வசூல் வேட்டை நடத்துறாங்க.
இதுபோக, ரோட்டோரம் இருக்கிற ஓட்டல்களில் சாப்பிட்டுட்டு, மாசாமாசம் மாமூலும் வாங்கிக்கிறாங்களாம்,'' விளக்கினாள் மித்ரா.பூ மார்க்கெட் நெருங்கியதை, பூக்கள் வாசம் வீசியதை உணர்ந்த சித்ரா, ''மித்து, எங்க மாமாவோட பிரன்ட், சமாதான பிரபு, அப்புறம் தண்டபாணி கடையில பூ வாங்கிக்கலாம். நீ இங்கேயே நில்லு. நா, வண்டியை பார்க் பண்ணிட்டு வந்திடுறேன்,'' என கூறி சென்றாள் சித்ரா.மார்க்கெட்டில் கொட்டிக்கிடந்த பூக்களின் வண்ணங்களிலும், மணத்திலும் மயங்கிய மித்ரா, அவற்றை கையில் எடுத்து பரவசப்பட்டாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X