அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழ் பெயர் வைக்காத திமுகவினர்: துரைமுருகன் 'சுளீர்'

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (117)
Advertisement
தமிழ், துரைமுருகன், திமுக

சென்னை: தற்போது, திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை, என அக்கட்சி பொருளாளர் துரைமுருகன் சாடினார்.

பேராசிரியர் பாலசுப்ரமணியன் என்பவர் எழுதிய திராவிட இயக்கம் வளர்த்த தமிழ் என்கிற நூல் வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் நடந்தது.

விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியதாவது: திமுகவினர் வீட்டிலேயே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்காத நிலை உள்ளது. இதன் மூலம் தமிழர்களுக்கான அடையாளமே போய்விட்டது. ஆங்கிலம் பேசுவது தவறு இல்லை. எந்த மொழியிலும் பேசலாம். இப்போது, ஓட்டல்களில் எல்லாம் வட இந்தியர்கள் தான் வேலை செய்கின்றனர். அவர்களிடம் ஹிந்தியில் பேசினால்தான் புரிகிறது. அதனால், பல்வேறு மொழிகளை கற்று கொள்வதில் தவறு இல்லை.. அதேசமயம், தமிழ் உணர்வை விட்டுவிடக்கூடாது.





தமிழ் உணர்வையும், சுயமரியாதை உணர்வையும் ஊட்ட வேண்டிய நிலை உள்ளது. ஆங்கிலேயர்கள் தான் ஜனநாயக உணர்வை நமக்கு ஊட்டினர். ஆங்கிலேயர்கள் வரவிலை என்றால், சோமாலியா போல் இந்தியா ஆகியிருக்கும். ஆனால், நம்முடைய எதிரிகள் வேறுவிதமான உணர்வை நமக்கு ஊட்டுகிறார்கள். இந்த நாட்டை, ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாசாரமாக மாற்ற முயற்சிக்கின்றனர். அதை எதிர்க்கும் உணர்வை அனைவரும் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


துரைமுருகன் பேச்சு குறித்து கருத்து தெரவித்த ஒரு திமுக நிர்வாகி, ‛‛எங்கள் கட்சி தலைவர் (ஸ்டாலின்) பெயரே தமிழ் கிடையாது. அப்படி இருக்க, மற்றவர்களை சொல்லி என்ன புண்ணியம்'' என்று ஆதங்கத்துடன் கேட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivakumar - Qin Huang Dao,சீனா
11-செப்-201913:34:10 IST Report Abuse
sivakumar ஊருக்கு தான் உபதேசம் உங்கள் குடும்பம் , தீய மு க குடும்பம் நடத்தும் CBSE பள்ளிகளில் ஹிந்தி பாடம் கட்டாயம் தமிழில் பேசினால் அபராதம் கட்சி வேறு , கொள்கை வேறு , பிசினஸ் வேறு , ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
11-செப்-201908:24:19 IST Report Abuse
மதுவந்தி தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுத்த வள்ளலின் தமிழ் பெயர் பற்று கலைஞரையும் மிஞ்சப் போகிறது.... தலைவரை, பெயர் கேட்கும் முதல் திமுக உறுப்பினனர். மகிழ்ச்சி.
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
11-செப்-201906:31:22 IST Report Abuse
Mani . V ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்வதில் எங்களை (திமுக) மிஞ்ச இந்த உலகத்திலேயே யாருமே இல்லை. "தமிழ், தமிழ்" என்று தமிழர்களின் காதுகளில் பூவை வைத்து விட்டு, நாங்கள் நடத்தும் பள்ளிகளில் மாணவர்கள் தமிழில் பேசினால் அபராதம் விதிப்போம். ஹிந்தி மொழியை கற்றுக் கொடுப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X