பொது செய்தி

இந்தியா

ஜெட்லியின் வாழ்க்கை நாட்டிற்காக உழைக்க ஊக்கமளிக்கும்: மோடி

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (16)
Advertisement

புதுடில்லி: மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் வாழ்க்கை, நாட்டிற்காக கடினமாக உழைக்க நம்மை ஊக்கப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.






கடந்த மாதம் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தினார்.





அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், என் நண்பனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நாள் வரும் என நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை என்ற சுமை என் இதயத்தில் என்றும் இருக்கும்.





ஜெட்லி மிகவும் திறமையானவர். பன்முக ஆளுமை கொண்டவர். அவருக்கு எந்த வேலையை ஒதுக்கினாலும், அவர் அதனை திறம்பட செய்து முடிப்பார். அவரது இழப்பு எனக்கு துயரத்தை அளிக்கிறது. அவரது நினைவுகளை நாம் என்றும் நினைவில் கொள்வோம். அவரது வாழ்க்கை, நாட்டிற்காக நம்மை கடினமாக உழைக்கத் தோன்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
POORMAN - ERODE,இந்தியா
11-செப்-201905:54:06 IST Report Abuse
POORMAN அனில் 1.25லட்சம் கோடி கடன் வாங்கி ஒரு கம்பெனி ஆரம்பித்தார். நஷ்டம். நல்ல மனிதர் அரசாண்டால் அனிலின் மற்ற சொத்துக்களை பறிமுதல் செய்து வங்கிகளுக்கு வர வேண்டிய கடனை வசுல் செய்திருக்கனும். மாறாக கடன் தீர்ப்பயத்தின் மூலம் விதிகளை தளர்த்தி 4ல் ஒரு பங்கு விலைக்கும் குறைவாக அந்த கம்பெனி முகேஷ்க்கு , (அதாங்க அனிலோட சகோதரர் ) அவருக்கு கைமாற்ற பிஜெபி அரசு உதவி செய்தது. பொதுத் துறை வங்கிகளின் நஷ்டம் 1லட்சம் கோடி. பிஜெபிக்கு யாரு கொடுத்தாங்கன்னு சொல்லத் தேவையில்லாமல் கோடிகளில் தேர்தல் நிதி வருது. இதுக்கெல்லாம் வழி செஞ்சது ஜெட்லி. நம்புங்க பிஜெபி அரசு ஊழல் இல்லாத அரசு.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
11-செப்-201903:24:41 IST Report Abuse
RM விருது வாங்க அரபுநாடுகளுக்கு ஓடிப்போயிட்டு ,நண்பன் ,இறுதிஊர்வலம்னு நீலிக்கண்ணீர்! 4 மணிநேரம் பயணம்,வந்துபோயிருக்கலாம்!
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
10-செப்-201923:45:55 IST Report Abuse
Pugazh V இந்திய தேசத்தின் பொருளாதாரத்தை சிதைத்த பாஜகவின் தலைவர்களில் அ.ஜெட்லி முக்கியமானவர். என்னவெல்லாம் செய்யக்கூடாது என்று இவரது வாழ்க்கையைப் பார்த்து கற்றுக்கொள்ளலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X