ஜெட்லியின் வாழ்க்கை நாட்டிற்காக உழைக்க ஊக்கமளிக்கும்: மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஜெட்லியின் வாழ்க்கை நாட்டிற்காக உழைக்க ஊக்கமளிக்கும்: மோடி

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (16)

புதுடில்லி: மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் வாழ்க்கை, நாட்டிற்காக கடினமாக உழைக்க நம்மை ஊக்கப்படுத்துகிறது என பிரதமர் மோடி தெரிவித்தார்.






கடந்த மாதம் மறைந்த முன்னாள் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டில்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஜெட்லிக்கு அஞ்சலி செலுத்தினார்.





அஞ்சலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், என் நண்பனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டிய நாள் வரும் என நான் ஒருபோதும் நினைத்துப் பார்த்தது இல்லை. நாங்கள் இருவரும் நீண்ட கால நண்பர்கள். அவருக்கு இறுதி மரியாதை செலுத்த முடியவில்லை என்ற சுமை என் இதயத்தில் என்றும் இருக்கும்.





ஜெட்லி மிகவும் திறமையானவர். பன்முக ஆளுமை கொண்டவர். அவருக்கு எந்த வேலையை ஒதுக்கினாலும், அவர் அதனை திறம்பட செய்து முடிப்பார். அவரது இழப்பு எனக்கு துயரத்தை அளிக்கிறது. அவரது நினைவுகளை நாம் என்றும் நினைவில் கொள்வோம். அவரது வாழ்க்கை, நாட்டிற்காக நம்மை கடினமாக உழைக்கத் தோன்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X