உலக பயங்கரவாத்தின் மையம் பாக்., : இந்தியா குற்றச்சாட்டு

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
வியன்னா: 'உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது' என ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியது.காஷ்மீர் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் தாக்குர் சிங் பேசியதாவது: சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது.

வியன்னா: 'உலக பயங்கரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் விளங்குகிறது' என ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் இந்தியா குற்றம் சாட்டியது.latest tamil newsகாஷ்மீர் தொடர்பாக ஐ.நா., மனித உரிமை கவுன்சில் மாநாட்டில், இந்திய வெளியுறவுத் துறை செயலர் விஜய் தாக்குர் சிங் பேசியதாவது: சட்டத்திற்கு உட்பட்டும், அரசியலமைப்பு சட்டத்தின்படியும், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா செயல்படுகிறது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின், நாட்டின் அனைத்து நலத்திட்டங்களும் அங்குள்ள மக்களுக்கு கிடைக்கிறது. சிறார் உரிமை பாதுகாப்பு, கல்வி, வேலைவாய்ப்பு மேம்படும்.

இந்தியாவைப் பற்றிய தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ஒரு குழு, மோசமான சொற்களையும் பயன்படுத்தி உள்ளது. இந்த கட்டுக்கதையை, பயங்கரவாதிகளின் புகழிடமாக விளங்கும் பாகிஸ்தான் தான் கிளப்பியது என உலக நாடுகள் அறியும். இதற்காக பிரிவினைவாதிகள் அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. உலக பயங்கரவாதத்தின் மையமாக பாக்., விளங்குகிறது.


latest tamil newsபார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட பிற சட்டங்களை போலவே, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் இந்திய இறையாண்மைக்கு உட்பட்டது. பிற நாடுகள் எங்கள் உள் விவகாரங்களில் தலையிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இந்திய குடிமக்கள் தொடர்பான பதிவுகளை உள்ளடக்கிய, தேசிய குடிமக்கள் பதிவேட்டின்படி (என்.ஆர்.சி.,) எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், இந்திய சட்டத்திற்கு இணங்குவதோடு, எங்கள் ஜனநாயக மரபுகளுடன் ஒத்துப்போகும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
11-செப்-201901:13:12 IST Report Abuse
Rajagopal அமெரிக்கா இராக்கில் அணு குண்டு இருப்பதாகவும், சதாம் ஹுசேன் பயங்கரவாதிகளை வைத்திருப்பதாகவும் பொய் சொல்லி, 2003 ஆம் ஆண்டு இராக்கில் நுழைந்து எல்லா குளத்தையும் சாக்கடையாக்கி விட்டது. அவர்கள் சொன்ன அனைத்துக் குற்றச்சாட்டுகளும் பாகிஸ்தானில் இருந்தன. ஆனால் பாகிஸ்தானைத் தங்களது ஆதரவாளர் பட்டியலில் வைத்திருந்தது. 2001 இல் நியூ யார்க்கில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த போது அவர்கள் நேராக ஆப்கானிஸ்தானையும், பாகிஸ்தானையும் சேர்த்துத் தங்கியிருக்க வேண்டும். அப்போதே பலோசிஸ்தானைத் தனி நாடாக்கியிருந்தால், தாலிபான் அங்கே ஓடி ஒளிந்திருக்க முடியாது. ஆப்கானிஸ்தானுக்கு நேராக, பலோசிஸ்தான் வழியாக எல்லாவற்றையும் கொண்டு சென்றிருக்கலாம். பாகிஸ்தானின் அணு ஆயுதங்களைக் கைப் பற்றியிருக்கலாம். ஒரு வல்லரசாக இருந்து கொண்டு, மூளையை அடகு வைத்து விட்டு, அமெரிக்கா இராக்கில் நுழைந்து, இரண்டு பக்கமும் ஆதி பட்டு, எல்லாம் விரயமாகி, ஒன்றையும் சாதிக்காமல் இருக்கிறது. இப்போது ஈரானை ஒழிக்க வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டிலேயே எல்லாவற்றையும் தீவிரமாக சிந்தித்து சரியாக செய்திருந்தால் இன்று பாகிஸ்தான் ஒரு சின்ன நாடாகியிருக்கும். பயங்கரவாதிகள் அழிந்திருப்பார்கள். காஷ்மீர் பிரச்சனை எப்போதோ முடிந்திருக்கும். இப்போது என்ன செய்ய இருக்கிறார்களோ
Rate this:
Cancel
Swaroopa Metha - Gopalapuram,இந்தியா
11-செப்-201900:48:12 IST Report Abuse
Swaroopa Metha இன்னும் இங்க உள்ள சில பேராசை பிடித்த பாய்கள் [எல்லாரும் அல்ல… ரசாக்கு மாதிரி ஒரு சில கழண்ட கேஸ்கள்] பொர்கிஸ்தான்ல இருந்து தேன் வடியும்னு வாய பொளந்துக்கிட்டு அலையறானுங்க.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
11-செப்-201905:22:58 IST Report Abuse
 Muruga Velசிலர் காஷ்மீர்ல தேன் வடியும்னு ...சிலர் பாகிஸ்தான்ல தேன் வடியும்னு ….லோக்கல் தேனுக்கு மதிப்பில்லாம போச்சு .....
Rate this:
Cancel
RAJAN - murasori,இந்தியா
10-செப்-201923:33:36 IST Report Abuse
RAJAN ரஸக்கு உன்னை மாதிரி கேடு கெட்ட தீவிரவாதிகளால் தான் எனது முஸ்லிம் நண்பர்களுக்கு கெட்ட பெயர்,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X