பொது செய்தி

இந்தியா

நாட்டின் வயது குறைந்த கவர்னர் தமிழிசை

Updated : செப் 10, 2019 | Added : செப் 10, 2019 | கருத்துகள் (18)
Share
Advertisement

புதுடில்லி: நாட்டில் உள்ள கவர்னர்களில், குறைந்து வயதுள்ள கவர்னராக, தெலுங்கானா கவர்னர் தமிழிசையும்(58), அதிக வயதுடைய கவர்னராக ஆந்திர கவர்னர் பிஸ்வா பூஷன் ஹரிசந்தனும்(85) உள்ளனர்.



latest tamil news



செப்.,1ம் தேதி, தெலுங்கானா, ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், கேரளா மற்றும் மஹாராஷ்டிர மாநிலங்களுக்கு, புதிய கவர்னர்களை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார். தமிழக பா.ஜ., தலைவராக இருந்த தமிழிசை(58), தெலுங்கானா கவர்னராக அறிவிக்கப்பட்டார். 8ம் தேதி அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் நாட்டிலுள்ள மாநில கவர்னர்களில், 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை மட்டுமே உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில், குஜராத் கவர்னர் ஆச்சார்யா தேவ்ரத்(60) உள்ளார். ஆந்திராவின் பிஸ்வா பூஷன் ஹரிசந்தன் (85) வயதான கவர்னராக உள்ளார். இவருக்கு அடுத்து ம.பி., கவர்னர் லால்ஜி டாண்டன்(84) உள்ளார்.


latest tamil news



28 மாநிலங்களில் 60 வயதுக்கு கீழ் ஒருவர், 60 - 69 வயதில் 7 பேர், 70 - 79 வயதில் 14 பேர், 80 - 89 வயதில் 6 பேர் உள்ளனர். நாட்டில் உள்ள மாநில கவர்னர்களின் சராசரி வயது 73ஆக உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
15-செப்-201917:19:01 IST Report Abuse
Malick Raja திருமதி .டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கவர்னராக்கியது போல் ஆக்கி ஓரம் கட்டியது மட்டும் உண்மை
Rate this:
Cancel
Dravid Tam - MAdras ,இந்தியா
11-செப்-201917:37:22 IST Report Abuse
Dravid Tam அப்புடியே ஹ.ராஜா வையும் ஏதாவது வச்சு செய்ய கூடாதா மிசோரம் , நாகலாந்து அப்படின்னு
Rate this:
Cancel
11-செப்-201910:02:44 IST Report Abuse
பச்சையப்பன் அடக்கர்மமே எதுஎதற்ககு பெருமைப் படுவது என்று விவஸ்தை கிடையாதா? நாட்டில் பொருளாதாரம் நாசமாய் போய்விட்டது. அவனவன் பிச்சைக்கு அலைகிறார்கள். திரூவோடு திருடவேண்டிய நிலை. பெருமைப் பாரூ பெருமையை!!.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X