சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது

Added : செப் 10, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
 கடைமடையை எட்டாத நீர் கடலில் வீணாக கலக்கிறது

தஞ்சாவூர் : காவிரி ஆற்றில் வரும் உபரி நீர், கடலில் வீணாக கலக்கும் நிலையில், டெல்டாவின் கடைமடைப் பகுதிகளுக்கு, இன்னும் தண்ணீர் செல்லவில்லை.காவிரி நீர்பிடிப்பு பகுதியில், தொடர் கன மழை காரணமாக, சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் நீர்மட்டம், 'கிடுகிடு'வென உயர்ந்தது.

இதையடுத்து, ஆக., 13ல், டெல்டா பாசனத்துக்காக, மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கல்லணையில் இருந்து, ஆக.,17ல் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில், தண்ணீர் பகிர்ந்து விடப்பட்டது.டெல்டா மாவட்டங்களில் குடிமராமத்து பணிகளும், ஆற்றின் குறுக்கே பாலங்கள் கட்டும் பணியும் நடந்ததால், ஆறுகளில், குறைந்தளவே தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை.

தற்போது, மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டிய நிலையில், கல்லணையில் இருந்து, நேற்று காலை நிலவரப்படி, காவிரியில், வினாடிக்கு, 9,548 கன அடியும்; வெண்ணாற்றில், 9,022 கன அடியும்; கல்லணைக் கால்வாயில், 3,004 கன அடியும்; கொள்ளிடத்தில், 11,045 கன அடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.இருப்பினும், கல்லணைக் கால்வாய் ஆற்றில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், இன்னும், சேதுபாவாசத்திரம், பேராவூரணி, அறங்தாங்கி உள்ளிட்ட கடைமடைப் பகுதிகளுக்கு சென்று சேரவில்லை.அதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களின், கடைமடை பகுதிகளுக்கும், தண்ணீர் செல்லவில்லை.ஆனால், உபரியாக, ஆறுகளின் பாதுகாப்பை கருதி, கொள்ளிடம் ஆற்றில், தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அவை அப்படியே, கடலில் கலந்து வீணாகி வருகிறது.

ஒரு புறம், விவசாயம் செய்ய தண்ணீர் இல்லாமல், மக்கள் அவதிப்படும் நிலையில், மறுபுறம், தண்ணீரை வீணாக கடலில் கலக்க செய்வது, அரசின் அலட்சியத்தை எடுத்துக் காட்டுகிறது. கடந்த ஆண்டு, 400 டி.எம்.சி., தண்ணீர், வீணாக கடலில் கலந்தது. அதே நேரத்தில், கடந்த கோடையில், தமிழகம் முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த கொடுமைக்கு, அரசின் அலட்சியமே காரணம்.விவசாயிகள்

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mano - Dammam,சவுதி அரேபியா
11-செப்-201918:31:14 IST Report Abuse
Mano எப்போதுமே சரியாக ஆற்றில் தண்ணீர் வரும் நேரம்தான் மராமத்து பணிகள், பாலம் கட்டும் பணிகள் நடக்கும். அப்போதுதானே தண்ணீரில் அடித்து சென்றுவிட்டது என்று பொய்கணக்கு எழுதி பணத்தை சுருட்டலாம்.
Rate this:
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
11-செப்-201918:12:21 IST Report Abuse
Jaya Ram ஊடகங்கள் விளையாடுகின்றனவா டிவியில் என்னடாவென்றால் கடைமடை விவசாயி தண்ணீர் வந்துவிட்டது என்று நெல்மணியும் , மலர்களும் தூவி வரவேற்று பேட்டி கொடுக்கின்றனர் இவர்கள் என்னாடவென்றல் கடைமடைக்கு தண்ணீர் வரவில்லை வீணாக கடலில் கலக்கிறது என்கின்றனர் ஒன்னும் புரியல்லியே , ஒரு பக்கம் செய்தி என்னடாவென்றால் டெல்டா பாசன பகுதிக்கு சென்று குடிமரமத்து பணிகளை கவனிக்க பணிக்கப்பட்ட பொறியாளர்கள் பணியாட்கள் அங்குசெல்லாமல் ஒப்பி அடித்துள்ளனர் என வருகிறது , இந்த விவசாயிகள் என்னடாவென்றால் காலம் முழுவதும் எதையும் கண்டுகொள்ளமாட்டார்கள், தண்ணீர் வர ஆரம்பித்ததும் கூப்பாடு போடுவது இதே பிழைப்பாகிவிட்டது பொறுப்பற்றவிவசாயிகள் ,விசுவாசமில்லா அரசு ஊழியர்கள் , அலட்சியமான அரசு இவர்களால் இந்நாடு பாழாகப்போகிறது
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
11-செப்-201910:36:15 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy Why Nallakkannu was not fighting against the negligence of Karunaidhi and Jayalalitha Governments. This problem is not the making of Modi or Edappadi. Can he answer this question? Yes next year he will take 200 farmers to Delhi and do protests half naked in Jantar mantar. But will not do anything sensible or useful to the farmers. He was agitating for release of 20 ,000 cusecs Now 25000 cusecs are released more than required for farmers. Where is he?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X